உன் பாத கொலுசாய்…
EPISODE – 10
Written by
Saipriya.A
ஸ்டேஜிலிருந்து இறங்கிய சூர்யாவை, அவனது நண்பர்கள் சூழ்ந்து கொண்டு பாராட்ட… அவனோ தியாவை தேடிக்கொண்டிருந்தான்…
“எதுக்கு பாடும் போதே எழுந்து போயிட்டா…? அப்படி என்ன அவசர வேலையாம் மேடம் -க்கு…??”, சூழ்ந்திருந்தவர்களை விலக்கிக் கொண்டு ஆடிட்டோரியத்தை விட்டு வெளியே வந்தான் சூர்யா.
கொஞ்ச தூரம் தேடிக் கொண்டே சென்ற அவன் கால்கள், சட்டென்று நிற்க… தியா அங்கே குறுக்கும் நெடுக்குமாய் நடந்துகொண்டிருந்தாள்…
“இப்படி வாக்கிங் போறது தான் வந்தாங்களாமா…? கஷ்டப்பட்டு ஒருத்தன் பிராக்டிஸ் பண்ணி பாடுனா… அப்ரிஸியேஷன் -லாம் கேட்கல… அட்லீஸ்ட் ஒரு ஸ்மைல்…?? ம்ஹும்… இவள…!!!” நினைத்துக் கொண்டே அவளருகில் சென்றவன் அவள் பின்னே சென்று நிற்க…
நடந்து கொண்டிருந்தவள் திரும்ப, எதிரில் நிற்கும் சூர்யாவை பார்த்து திகைத்தாள்… நொடியில் முகம் கோபத்தில் சிவக்க, அவ்விடத்தை விட்டு செல்ல முயன்றவளை சூர்யா, “ஒரு நிமிஷம்…!” என்று தடுக்க…
தியா ‘என்ன?’ என்பது போல் பார்த்தாள்… சூர்யாவுக்கு பேச வந்தது எல்லாம் மறந்து போனது… அவள் கண்களையே பார்த்துக் கொண்டு சூர்யா நிற்க, தியா, “ஹலோ…!! என்ன…?? என்றாள்.
சூர்யா பட்டென்று, “பிடிச்சிருக்கா…?” என்று கேட்க…
தியா, “வாட்…??” என்று முறைக்க…
“இல்ல… ஐ மீன்… என் பாட்டு உனக்கு பிடிச்சிருக்கா…?” என்று கேட்டு விட்டு அவள் முகத்தையே சூர்யா பார்த்துக்கொண்டிருக்க…
தியாவுக்கு ஒன்றுமே புரியவில்லை…
‘என்ன தான் நெனச்சிட்டு இருக்கான் இவன்…?’ என்று நினைத்தவள், “என்கிட்ட எதுக்கு கேக்குற…? உன் பாட்டு எனக்கு எதுக்கு பிடிக்கணும்…??” என்று தியா முறைக்க…
‘இன்டிரெக்ட் -ஆ சொன்னா புரிஞ்சிக்கறாளா பாரு… ம்கும்… கோவம் மட்டும் தான் வரும்…! லவ் -லாம் வராது…!!’ என்று மனசுக்குள் நினைத்த சூர்யா, “சும்மா தான்… ஜஸ்ட் ஜெனரலா கேட்டேன்…!” என்றவன் அவளை பார்த்து சிரித்துக் கொண்டே அங்கிருந்து சென்றான்…
இவனால எப்படி சிரிக்க முடியுது…? இவன என்ன இப்போ புகழ்ந்தா பேசினேன்…?? அவ என்னடான்னா இவன் என்ன பாத்து தான் பாடுறான்னு சொல்றா…! இவ என்னன்னா பிடிச்சிருக்கான்னு கேட்கிறான்…?? எனக்கு வர்ற கோவத்துக்கு…!!!!!
கடுப்பில் வீட்டுக்கு கிளம்பலாம் என்று பார்க்கிங் வரை வந்தவளுக்கு, அப்போதுதான் ஸ்கூட்டியின் சாவி கிளாஸ் ரூம் -இல் பேகில் வைத்திருப்பது நினைவுக்கு வர, தலையில் அடித்துக்கொண்டு கிளாஸ் ரூமுக்கு திரும்பி போனாள்…
தியாவை தேடிக்கொண்டு, பவியும் க்ளாஸ் ரூமிற்கு வர, தியாவை பார்த்ததும், “எங்க டி போன…? பக்கத்துல தான இருந்த…? திரும்பி பார்க்கிறதுக்குள்ள ஆள காணோம்…!” என்று கேட்டாள்.
“ஒண்ணும் இல்ல… தலை வலி… வீட்டுக்கு போறேன்… நீயும் வரியா…? என்று தியா கேட்க…
“ரொம்ப வலிக்குதா…? நான் வேணும்னா டேப்லெட் வாங்கிட்டு வரவா…??” என்று பவி பதற…
“இல்ல பவி… லைட்டா தான் வலிக்குது… வீட்டுக்கு போனா சரியாகிடும்…” என்று பவியின் கையை பிடித்து அவளை தடுக்க முயன்றாள் தியா.
“நீ சும்மா இரு தியா…! தலைவலியோட டிராவல் பண்ணி வீட்டுக்கு போனா, அதிகமாகிடும்…!! நீ இங்கேயே இரு… நான் போய் டேப்லெட் வாங்கிட்டு வரேன்…!” என்ற பவி, தியா சொல்ல சொல்ல கேட்காமல் கிளாஸ் ரூமை விட்டு நகர்ந்தாள்.
தினேஷுக்கு கால் செய்தவள், “தினேஷ்… தியாவுக்கு ரொம்ப தல வலிக்குது… கொஞ்சம் டேப்லெட் வாங்கிட்டு வரியா…?” என்று கேட்க…
“என்னது தியாவுக்கா…?” என்று தினேஷ் கேட்க, பக்கத்தில் இருந்த சூர்யா, “தியாவுக்கு என்னாச்சு…??” என்றான் பதட்டமாக…
“கூல் மச்சான்… தியாவுக்கு தலைவலியாம் டா… டேப்லெட் வாங்க சொல்றா பவி…!” என்றபடியே தினேஷ் ஃபோனை பாக்கெட்டில் வைக்க… சூர்யா பைக் கீயை எடுத்துக்கொண்டு வெளியே கிளம்பி இருந்தான்.
திரும்ப வந்தவன், கையில் டேப்லெட் மற்றும் ஃபிளாஸ்கில் பால் கொண்டு வர, தினேஷ், “அட பாவி…!!” என்று வாயைப் பிளந்தான். அவற்றைப் பவியிடம் கொண்டு சென்று தினேஷ் கொடுக்க,
“இது என்ன…? ஃபிளாஸ்க் -ல…? என்று பவி கேட்க… தினேஷ், சூர்யா பக்கம் கைகாட்ட… பவி, ‘சூப்பர்…!’ என்று சிரித்துக்கொண்டே அங்கிருந்து சென்றாள்.
“சூர்யா… வா போலாம்…” என்று தினேஷ் அழைக்க, “இரு டா… தியா டேப்லெட் போடட்டும்… பார்த்துட்டு போலாம்…” என்று சூர்யா ஜன்னலோரம் சென்று நிற்க…
“ஓஹோ… சரி மச்சான்…” என்று சிரித்துக்கொண்டே தினேஷும் அவனுடன் சேர்ந்து உள்ளே எட்டிப் பார்த்தான்.
பவி டேப்லட்டை பிரித்து, தியாவுக்கு கொடுக்க, “எனக்கு டேப்லெட் வேணாம் பவி… லைட்டா தான் வலிக்குது… என்ன விட்ரு…!!” என்று தியா சிணுங்க…
“ஆ காமிங்க… ஆஆ…” என்று பவி கையில் டேப்லட்டை வைத்துக்கொண்டு தியாவிடம் கெஞ்சி கொண்டிருக்க…
பார்த்துக்கொண்டிருந்த சூர்யாவுக்கு சிரிப்பு பொங்கியது… “என்னடா இவ…? குழந்தை மாதிரி அடம் பிடிக்கிறா…??” என்று தினேஷும் சிரிக்க…
“பவி உனக்கு தான் தெரியும்ல…? நான் சர்க்கரை இல்லாம எப்போ டேப்லெட் சாப்பிட்டு இருக்கேன்…?? எனக்கு வேணாம் டி…” என்று தியா சொல்ல…
கேட்டுக்கொண்டிருந்த சூர்யா கேன்டீனுக்கு சென்று, கொஞ்சம் சர்க்கரையை பேப்பரில் மடித்து கொண்டு வந்து ஜன்னல் வழியே தூக்கி போட… அதை தியாவுக்கு தெரியாமல் கேட்ச் பிடித்த பவி, “தெரியும்… தோ பாரு சக்கரை…” இப்போ டேப்லட் போட்டுக்கோ…” என்று சொல்ல வேறு வழி இல்லாமல் தியா, அந்த டேப்லெட்டை விழுங்கி சக்கரையை வாயில் போட்டுக்கொண்டாள்…
“குட் கேர்ள்…!” என்று தியாவின் கன்னத்தை பிடித்து பவி கொஞ்ச… சூர்யாவும் அவளை கொஞ்சுவது போல் கையை அசைத்து கொண்டிருந்தான்.
“இவன விட்டா இங்கேயே நிப்பான்…
நீ வா நாம போலாம்…!” என்று சூர்யாவை இழுத்துக் கொண்டு, தினேஷ் அங்கிருந்து கிளம்பினான்.
“கொஞ்ச நேரம் படுத்துக்கோ தியா…” என்று அவள் தலை வைப்பதற்கு பேகை ஏதுவாக வைத்துவிட்டு, அவளுக்கு துணையாக பவி அங்கேயே நிற்க…
“வீட்டுக்கு போலாமே பவி…??” என்று தியா மறுபடியும் ஆரம்பிக்க…
“போலாம்… நீ ஒரு அரை மணி நேரம் தூங்கு… அப்புறம் போகலாம்…” என்றாள் பவி.
லஞ்ச் டைமுக்கு தியாவை பவி எழுப்ப, “2 மினிட்ஸ்…” என்று தியா தூங்கிக் கொண்டே இருக்க…
சிரித்துக்கொண்டே, “தியா…! இது காலேஜ்… இன்னும் நாம வீட்டுக்கு போகல… வா பாக்கி இருக்கற தூக்கத்த வீட்டில போய் கண்டினியூ பண்ணிக்கலாம்…!!” என்று தியாவை எழுப்பி வெளியில் கூட்டி சென்றாள் பவி.
காலேஜில் எல்லாரும் கல்ச்சுரல்ஸ் கொண்டாட்டத்தில் இருக்க, தியா பவியிடம், “பவி… நானே வீட்டுக்கு போறேன்… நீ என்னால கல்ச்சுரல்ஸ மிஸ் பண்ண வேண்டாம்… நீ அங்க போ…!” என்று சொல்ல…
அவளை முறைத்த பவி, “எனக்கு கல்ச்சுரல்ஸ் முக்கியம் இல்ல…! என் ஃபிரண்டு தான் முக்கியம்…!!” என்று சொல்ல…
“என் ஃபிரண்டுக்கு என் மேல எவ்ளோ பாசம்…!!!” என்ற தியா, பவியின் கையை கட்டிக்கொண்டாள்.
பார்க்கிங்கில் மெக்கானிக்கல் டிபார்ட்மெண்ட் மாணவர்கள், இவர்கள் வருவதைப் பார்த்ததும்,
கூட மேல கூட வச்சு…
கூடலூரு போறவளே…
உன் கூட கொஞ்சம் நானும் வரேன்… கூட்டிகிட்டு போனா என்ன…??
என்று பாட ஆரம்பிக்க…
அவர்களை கண்டுகொள்ளாமல் சென்று ஸ்கூட்டியை எடுத்தாள் தியா.
தியா கண்டு கொள்ளாமல் இருப்பதை பார்த்த ஒருவன், “மச்சான்… பச்ச கலரு உனக்கு…! ப்ளூ கலர் எனக்கு…!!” என்று அவர்கள் காதுபட சொல்ல…
“அவ பேர் என்னன்னு கேட்டு சொல்லுடா…! பச்ச கலர் -னா கூப்பிட முடியும்…??” என்று இன்னொருவன் சொல்ல…
பொங்கிய கோபத்தை அடக்கிக் கொண்டு அங்கிருந்து கிளம்பியவள், பவியை ஸ்கூட்டியில் ஏற்றிக் கொண்டு அவர்களைத் தாண்டி செல்ல…
அவள் போகும்போது, “ஏஏஏ…!!!” என்று அவர்கள் கூச்சலிட, “இவனுங்கள…!” என்று பவி திட்டுவதற்கு ஆரம்பிக்க…
“ஹே விட்றீ… நாய் குறைச்சா, நாம கூட குறைக்க முடியுமா…?” என்று தியா கேட்க, பவி அமைதியானாள்.
கொலுசு ஒலிக்கும்…
Comments
0 comments