உன் பாத கொலுசாய்…
EPISODE – 11
Written by
Saipriya.A
தினேஷிடம் பார்க்கிங்கில் நடந்ததை, அவனது மெக்கானிக்கல் டிபார்ட்மெண்ட் நண்பன் வந்து கூற, கேட்டுக்கொண்டே வந்த சூர்யா, “ஆள் யாருன்னு மட்டும் காமி…!” என்று அவனை பார்க்கிங்குக்கு கூட்டிச்செல்ல…
“டேய்… பிரச்சனை வேணாம் டா…! அவனுங்க சீனியர் பசங்க…” என்று தினேஷ் தயங்க…
“சரி நீ இங்கயே இரு… நான் பார்த்துக்கிறேன் அவனுங்கள…!!” என்றான் சூர்யா…
அவன் முகத்தை பார்த்தாலே அவன் கோபத்தின் உச்சியில் இருக்கிறான் என்று தினேஷிற்கு புரிய, “அதுக்கு சொல்லல சூர்யா… சரி நானும் வரேன்…” என்று தினேஷும் சூர்யாவுடன் சென்றான்.
பார்க்கிங் -க்கு வந்தவுடன் அந்த க்ரூப்பை நோக்கி கை காட்டிவிட்டு வந்தவன் ஒதுங்கிக் கொள்ள, “இங்கே யாரு அந்த பச்சை கலர் சுடிதார் பொண்ணோட பேர் தெரிஞ்சுக்க ஆசை பட்டது…??” என்று சூர்யா சிரித்துக் கொண்டே கேட்க…
“ஏன்டா…? நீ சொல்ல வந்து இருக்கியா…??” என்று ஒருத்தன் கேட்க…
இன்னொருத்தன், “நான் தான் கேட்டேன்…! அதுக்கு என்ன இப்போ…??” என்று தெனாவட்டாக சொல்ல…
சூர்யாவின் முகத்தில் இருந்த சிரிப்பு சட்டென மாற, ஓங்கிய கை சொன்னவன் கன்னங்களில் இறங்கியது…
நடப்பது என்ன என்று சுதாரித்து அவன் உணர்வதற்குள், இன்னொரு கன்னத்தில் அறை விழ, கூட இருந்தவர்கள் திணறிப் போய் ஒரு அடி பின்னே நகர்ந்தனர்…
“டேய்… ஜுனியர் பையன் என் மேல கை வைக்கிறான்…? என்னடா வேடிக்கை பார்க்கிறீங்க…??” என்று அடி வாங்கியவன் அவன் நண்பர்களை பார்த்து கத்த, ஒருத்தன் கூட வரவில்லை…
சூர்யா மறுபடி கையை ஓங்க, “ஒரு நிமிஷம் பா…! பேர் கேட்டதுக்கு எதுக்கு இப்படி மாறி மாறி அடிக்கிற…??” என்று அவன் கேட்க…
“நீ பேரு மட்டுமா கேட்ட…?” என்று மறுபடி அறை விழுந்தது…
இரண்டு கன்னங்களையும் கைகளால் மூடிக்கொண்டு, “ப்ரோ…! தெரியாம கேட்டுட்டேன்… நீங்க இவ்ளோ கோவப்படுறப்பவே அவங்க யாருன்னு புரியுது… சத்தியமா, இனிமே யாரும் அந்த பொண்ண எதுவும் சொல்லாம, நான் பார்த்துக்குறேன்…!! நீங்க என்ன உங்க பிரதரா நெனச்சு மன்னிச்சுடுங்க… ப்ளீஸ்…!!!” என்று கெஞ்ச…
“ஹான்… இப்ப சொன்னியே இது point…! சொல்லி வை… இனி யார் அவ கிட்ட வம்பு இழுத்தாலும், அடி உனக்கு தான் விழும்…!!”, என்ற சூர்யா கையை தலைக்கு மேலே உயர்த்தி திமிரு முறிக்க…
‘மறுபடியும் அடிக்கப் போகிறானோ…?’ என்று அனைவரும் ‘ஒன் ஸ்டெப் பேக்’ செல்ல… சூர்யா சிரித்துக் கொண்டே திரும்பி நடந்தான்.
அடுத்த நாள் காலேஜ் -க்கு வந்த தியா, பார்க்கிங்கில் ஸ்கூட்டியை நிறுத்திவிட்டு கிளாஸ் ரூமிற்கு செல்ல, அவளுக்கு குறுக்கே வந்த நின்றவர்கள், “மன்னிச்சிடுங்க சிஸ்டர்…! உங்க கூட வந்த சிஸ்டர் -க்கும், சாரி சிஸ்டர்…!!” என்று கோரசாக சொல்ல…
முன்னாடி நாள் அறை வாங்கியவன், “ஆமா சிஸ்டர்…! நீங்க யாருனு தெரிஞ்சு இருந்தா… சத்தியமா இப்படி பண்ணி இருக்க மாட்டோம்…!!” என்று சொல்ல…
‘என்ன சொல்றாங்க….?’ என்று யோசித்துக்கொண்டே நின்றிருந்த தியா, “சரி ஓகே ப்ரோ…! இனிமே யார்கிட்டயும் இப்படி பிஹேவ் பண்ணாதீங்க…!” என்று அங்கிருந்து நகர…
“ஹப்பாடா…!” என்று அவர்கள் பெருமூச்சு விட்டனர்.
கிளாஸிற்குள் நுழைந்த தியாவை பார்த்த பவி, “வாங்க தியா அவர்களே…! தலை வலி எப்படி இருக்கு…? போயிருக்குமே…??” என்று கேட்க…
அவளைப் பார்த்து சிரித்த தியா, “அது நேத்தே சரியா போச்சே…!” என்றாள்.
“ஆனாலும் கொடுத்து வச்சவடி நீ…! என் ஆள் கூட நேத்து அதை பெருசா எடுத்துக்கல…! ஆனால் உன் ஆளு மாஸ் பண்ணிட்டாங்க…!!” என்று பவி சொல்ல…
“என்ன உளர்ற பவி…??” என்று கேட்டாள் தியா.
“ஒஹ்ஹ்… உனக்கு இன்னும் தெரியாதுல்ல…? நேத்து நம்ம கிட்ட பார்க்கிங் -ல வம்புக்கு இழுத்தாங்க -ல…? சூர்யா போய் அவங்கள, டிஷ்யூம் டிஷ்யூம்” என்று பவி சொல்ல…
அவளைப் பார்த்து முறைத்த தியா, “அவனுக்கு தான் அறிவு இல்லன்னா, உனக்குமா இல்ல…? அவன் பண்ற பொறுக்கித்தனத்துக்கு என்ன காரணம் காட்டாத… சரியா…? Irresponsible இடியட்…!!
இவனுக்கும் நேத்து பார்க்கிங்கில இருந்தவங்களுக்கும் என்ன டிஃபரன்ஸ் இருக்கு…?” என்ற தியா பெஞ்ச்சில் அமர்ந்து, நெற்றியில் கை வைத்து கொள்ள…
“அது இல்ல தியா… அவனால அவங்க உன்ன டீஸ் பண்ணத அக்சப்ட் பண்ணிக்க முடியல… அதனால தான்…!!” என்று பவி சொல்ல வருவதற்குள்…
“நேத்து நான் அமைதியா வந்ததால, அவங்க டீஸ் பண்ணத அக்சப்ட் பண்றேன்னு அர்த்தமா…? வாட் இஸ் திஸ் நான்சென்ஸ்…!!” என்று தியா மறுபடியும் கூற…
“நான் அப்படி சொல்லல தியா… அவன் உன்ன…” என்று பவி ஏதோ சொல்ல முயல…
அவளை தடுத்த தியா, “இங்க பாரு பவி…! அவன பத்தி எதுவும் என்கிட்ட பேசாத…!! என் பிரெண்ட்ஷிப்ப நீ மதிக்கிறதா இருந்தா, ப்ளீஸ் டோன்ட் டாக் அபவுட் ஹிம்…!! ஓகே…??” என்று சொன்னவள் கிளாஸ் ரூமை விட்டு வெளியேறினாள்.
கொலுசு ஒலிக்கும்…
Comments
0 comments