செய்திகள்,கதைகள், விமர்சனங்கள்

Ep – 14 உன் பாத கொலுசாய்

3,719

உன் பாத கொலுசாய்…
EPISODE – 14
Written by
Saipriya.A


“நீங்க சூர்யாவுக்கு என்னாச்சுன்னு தெரிஞ்சிட்டு இருக்கணும் தியா…” என்று ரிஷி கூற…

தியா கண்களில் இருந்து மேலும் ஒரு சொட்டு கண்ணீர் வழிந்து ஓடியது.

அதைப் பார்த்த ரிஷிக்கு என்னமோ போல் ஆகிவிட, “சாரி தியா… நீங்க எதனால அத பண்ணலன்னு எனக்கு நல்லா புரியுது…! இருந்தாலும்… நீங்க அன்னைக்கு அதை தைரியமா ஃபேஸ் பண்ணி இருந்தா, இத்தனை வருஷம் அத நெனச்சு நெனச்சு கஷ்டப்பட்டுருக்க வேணாம் -ல…? அதுக்காகத்தான் சொன்னேன்…” என்று சொல்ல…

“எனக்கு தெரியல ரிஷி…! இருக்கலாம்… ஆனா, சூர்யாவுக்கு ஏதாவது ஆகியிருந்தா… என்னால அத நிச்சயமா தாங்க முடியாது…! இந்த விஷயத்துல நான் நெகட்டிவா யோசிக்கக்கூட விரும்பல…”

“ஆரம்பத்தில எனக்கு சூர்யாவை சுத்தமா புடிக்காது… அவன் பக்கத்துல வந்தாலே, எரிஞ்சு விழுவேன்… அது ஏன்னே எனக்கு தெரியாது… ஆனா, இப்ப யோசிச்சு பாக்குறப்போ, எனக்கே என் மேல கோவம் வருது…

ஏன்னா அவன் எந்த தப்பும் பண்ணல… அன்னைக்கு என்ன காப்பாத்துனத தவிர…

ஆனா, எனக்கு அவன் கிட்ட ஒண்ணே ஒண்ணு கேட்கணும்… எனக்காக அவன் life -அ சேக்ரிஃபய்ஸ் பண்ற அளவுக்கு, நான் என்ன பண்ணிட்டேன் அவனுக்கு…?? சத்தியமா தெரியல ரிஷி…!” என்று தியா கூற…

கேட்டுக்கொண்டிருந்த ரிஷிக்கு, ஒன்று மட்டும் நன்றாக புரிந்தது… சூர்யாவுக்கு தியா மேல் இருந்த காதலால் தான், அவன் தனக்கு என்ன ஆனாலும் பரவாயில்லை என்று தியாவை காப்பாற்றி இருக்கிறான்…

என்ன தான் சூர்யா தன் காதலை தியாவிடம் சொல்லாமல் போனாலும், இதற்குமேல் சூர்யாவின் காதலுக்கு என்ன சாட்சி வேண்டும்…

ரிஷி ஒரு முடிவுக்கு வந்தவனாய், அவளை தேற்றி, அங்கிருந்து அழைத்துக்கொண்டு, பஸ்சுக்கு சென்றான்…

அவளை அமர வைத்தவன், “இங்க பாருங்க தியா… சூர்யாவுக்கு கண்டிப்பா எதுவும் ஆகி இருக்காது… சரியா…? நீங்க ஆசைப்படுற மாதிரி, சூர்யா ஹாப்பியா இருப்பான்… இதுக்கு மேலயும் நீங்க கில்டியா ஃபீல் பண்ணாதீங்க… ஓகேவா…??” என்று ரிஷி சொல்ல

“தேங்க்ஸ் ரிஷி…” என்று சொன்ன தியா, ரிஷியே கொஞ்ச நேரம் பார்த்துக் கொண்டிருக்க…

“என்ன டயர்டா இருக்கா…? கொஞ்சம் நேரம் ரெஸ்ட் எடுங்க… எல்லாம் சரியாகிடும்…” என்றவன் அங்கிருந்து நகர்ந்தான்.

ரிஷியிடம் நடந்ததையெல்லாம் கூறியதால் தியாவுக்கு மனது சற்று லேசாக விட்டது போல் இருக்க… கண்களை மூடியவள் அப்படியே இருக்கையில் சாய்ந்து உறங்க ஆரம்பித்தாள்.

பூங்காவை சுற்றிப் பார்த்துவிட்டு அனைவரும் வந்துவிட, பஸ் அங்கிருந்து கிளம்பியது.

தியாவையே கொஞ்ச நேரம் பார்த்துக் கொண்டிருந்த ரிஷி, “சே…! எவ்வளவு நாள் கஷ்டப்பட்டு இருக்கா…!! மனசுக்குள்ள எவ்வளவு பெரிய வலியோட, சிரிச்ச முகமா இருந்திருக்கா…! கண்டிப்பா, இதுக்கு மேல அவ அழவே கூடாது…” என்று நினைத்தவன் ஒரு பெருமூச்சுடன் ஜன்னல் பக்கம் திரும்பினான்.

பஸ் மறுபடியும் அலுவலகத்திலே வந்து நிற்க, இறங்கியவர்கள் அவரவர் வீட்டுக்கு கிளம்பினர்.

லக்கேஜ் உடன் தியா பஸ்சில் இருந்து இறங்க போக, அவளை தடுத்த ரிஷி, “இருங்க தியா… லக்கேஜ் இங்கேயே வைங்க… கேப் புக் பண்ணி இருக்கேன்… சேர்ந்தே போயிடலாம்… நைட் டைம்… டயர்டா வேற இருக்கும்… ஸ்கூட்டில போக வேணாம்…” என்று சொல்ல…

“ஓஹ்… சரி ரிஷி…!” என்றவள் மறுபடி பஸ்ஸிலே அமர்ந்தாள்.

“தியா…!” என்று ரிஷி மீண்டும் அழைக்க…

“சொல்லுங்க ரிஷி…!” என்று தியா கேட்க…

கொஞ்ச நேரம் யோசித்த ரிஷி, “ரொம்ப பசிக்குது தியா…!! சாப்பிட்டுவிட்டு வீட்டுக்கு போலாமே…? வீட்டில் போய் என்னால் சமைக்க எல்லாம் முடியாது… ப்ளீஸ்…???” என்ற தியாவிடம் கெஞ்ச…

“ஹையோ… அதுக்கு எதுக்கு ரிஷி இவ்வளவு கெஞ்சறீங்க…? சாப்பிடலாம் வான்னு கூப்பிட்டா வரப்போறேன்…? என்று சிரித்துக்கொண்டே தியா கூற…

‘அப்படி கூப்பிட்டா நீ சிரிக்க மாட்டியே…’ என்று மனதிற்குள் நினைத்தவன், “சரி, சாப்பிடலாம் வா…” என்று கூற…

சிரித்துக்கொண்டே ரிஷியின் முதுகிலே ஒன்று வைத்தவள், உணவகம் நோக்கி நடந்தாள்.

தூக்கத்திலே தியாவுக்கு பசி தெரியாமலிருக்க, ரிஷியோ சாப்பாட்டை எடுத்து வந்து டேபிள் மேல் வைத்ததும், வேக வேகமாய் சாப்பிட ஆரம்பித்தான்.

நடுவே நிமிர்ந்து தியாவை பார்த்தவன், அவள் மெது மெதுவாய் சாப்பிட்டுக் கொண்டிருக்க, “தியா…! கேப் வந்துருச்சு…!! சீக்கிரம் சாப்பிடுறயா…??” என்று பதட்டமாக சொல்ல…

அதை நம்பி அவள் சீக்கிரம் சாப்பிட்டு முடித்து எழுந்து விட, ரிஷி கூலாக சாப்பிட்டுக் கொண்டிருந்தான்…

அதைப் பார்த்தவள், “ரிஷி…!!!” என்று முறைக்க…

ரிஷி அவள் முகம் போன போக்கைப் பார்த்து சிரிக்க ஆரம்பித்தான்.

“தூக்கம் போறதுக்காக தான் சொன்னேன்…! பாத்தியா…! எவ்வளவு ஸ்பீடா சாப்பிட்டுட்டே…??” என்று சொல்லி சிரிக்க…

“ஹா ஹா ஹா… வெரி ஃபன்னி… எங்கம்மாவும் இப்படிதான் ஏமாத்தி, சாப்பிட வைப்பாங்க…!!” என்ற தியா அவன் சாப்பிட்டு முடிக்கும் வரை அங்கேயே உட்கார்ந்தாள்.

அதற்குள் கேப் நிஜமாகவே வந்துவிட, அவசரமாக சாப்பிட்டு முடித்தவன், பில் பே பண்ணிவிட்டு கிளம்ப, இப்போது சிரிப்பது தியாவின் முறையானது…

“சரி சரி… யாருக்கோ ரொம்ப சிரிப்பு வருது போல…!” என்று ரிஷி கேட்க…

சிரித்துக்கொண்டே கேபில் ஏறியவள், “ரொம்ப நேரம் வெயிட் பன்றீங்களா, அண்ணா…?” என்று ரிஷி கேட்கவும்…

யாருக்கும் தெரியாமல் வாயில் கை வைத்துக்கொண்டு மீண்டும் சிரிக்க ஆரம்பித்தாள் தியா… அதைப் பார்த்து ரிஷிக்கும் சிரிப்பு வந்துவிட, “ஷூ…!!!” என்று விரலை வாயில் வைத்து தியாவுக்கு சைகை காட்டியவன், கேப் டிரைவருக்கு ஓடீபி சொல்லி, “போகலாம் அண்ணா…!!” என்றான்.

வழியில் மொபைலில், ரிஷி மும்மரமாக சாட் செய்து கொண்டே வர, “என்ன ரிஷி….? எவரிதிங் ஓகே…??” என்று தியா கேட்க…

“ஹான்… என்ன கேட்ட தியா…??” என்று ரிஷி வேகமாய் மொபைலை வைத்து விட்டு கேட்க…

“ரிலாக்ஸ்… என்னமோ மும்மரமா மொபைலை பார்த்துட்டே இருந்த… அதான் கேட்டேன்…” என்றாள் தியா.

“ஒண்ணுமில்ல தியா… HR தான்… அவசர வேலையா ஹைதராபாத் போகணும்… டூர் போன டயர்ட் -ல எல்லாரும் லீவு கேட்டு இருக்காங்க போல… அதான் என்ன போக முடியுமான்னு கேட்கிறார்…!!” என்று சொல்ல…

“உனக்கு மட்டும் அப்ப டயர்டா இல்லையா ரிஷி…? ஒரு நாள் ரெஸ்ட் எடுத்துட்டு அப்புறம் போகலாம் -ல…? என்று தியா கேட்க…

“அர்ஜென்ட்டாம்… ட்ராவெலிங் -ல ரெஸ்ட் எடுத்துப்பேன் தியா… மார்னிங் தான் கெளம்பணும்…” என்றான் ரிஷி.

“என்னமோ சொல்ற… சரி பார்த்து போயிட்டு வா… ரிட்டன் எப்போ…??” என்று தியா கேட்க…

“2 டேஸ் -ல வந்துடுவேன்… ஏன்…??” என்றான் ரிஷி.

“இல்ல… சும்மா தெரிஞ்சுக்க தான் கேட்டேன்…” என்று சொல்லிவிட்டு தியா ஜன்னல் பக்கம் திரும்பி யோசித்துக் கொண்டே இருக்க…

“நீ சொல்லாம இருந்தாலும்… எனக்கு தெரியும் தியா… உன் பர்த்டேக்கு நான் இங்கே இருப்பேன்…!!” என்று நினைத்த ரிஷி, ஏதோ ஒரு நிறைவுடன் காரின் இருக்கையில் சாய்ந்தான்…


கொலுசு ஒலிக்கும்…


Comments

0 comments

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy