மீண்டும் நிலா
Episode – 17
Written by – Saipriya.A
மாலையில் ஆபிஸிலிருந்து வீடு திரும்பிய நிலாவை மெல்லிய மல்லிகை நறுமணம் வரவேற்றது…
“என்னம்மா… பூ கட்டிட்டு இருக்க? ஏதாவது function போறோமா?” நிலா கேட்க.
“பரவாயில்லையே… என் நிலாகுட்டி கெட்டிக்காரினு நிரூபிச்சிட்டாளே… ஆமா இங்க வந்து உட்காரு…” என்றார் லக்ஷ்மி.
இதை பார்த்துக்கொண்டிருந்த அருணும் வேடிக்கை பார்க்க வந்து உட்கார…
“உன்ன கூப்பிடல… போடா…” என்றார் அவன் அம்மா.
அருண், “போம்மா…” என அம்மாவை முறைத்துவிட்டு அறைக்குள் சென்றான்.
“சொல்லும்மா…” நிலா வந்து அம்மாவிடம் அமர.
“நாளைக்கு ஆபிஸ் லீவ் போட்டுடு நிலா… உன்ன பார்க்க மாப்பிள்ளை வீட்டுல இருந்து வராங்க…” லக்ஷ்மி சொல்ல…
நிலா திடுக்கிட்டாள்…
“கல்யாணமா…?? இப்போ எதுக்கு இவ்ளோ சீக்கிரம்… இப்போதான மா வேலைக்கு போனேன்…” நிலா சொல்லிகொண்டே போக…
“நிலா கூல்… அவங்க நம்ம தூரத்து சொந்தக்காரங்கடா… உன்ன பிடிச்சு போய் பொண்ணு கேட்டு இருக்காங்க… நல்ல பேமிலி… காரணம் இல்லாம எப்டிமா ரிஜெக்ட் பண்றது… நீ மாப்பிள்ளையை பார்த்துட்டு பிடிச்சிருக்குனு சொன்னா தான் கல்யாணம்… அதுவும் நீ எப்போ சொல்றியோ அப்போதான்…” லக்ஷ்மி சொல்ல…
நிலா, “ஹான்… புடிக்கலனா புடிக்கலனு சொல்லிடுவேன்… அப்றம் என்ன கம்பெல் பண்ண கூடாது…” என்றாள்.
“கண்டிப்பா… ஆனா இந்த மாப்பிளைய உனக்கு நிச்சயமா புடிக்கும்… அப்டியே உனக்கு பிடிச்ச மாதிரி இருக்காரு…” லக்ஷ்மி சொல்ல…
“பார்க்கலாம்… பார்க்கலாம்…” சொல்லிவிட்டு நிலா அவள் அறைக்கு சென்றாள்.
அறைக்குள்ளே இருந்து ஒட்டுக்கேட்டுகொண்டிருந்த அருண் சிரித்துக்கொண்டே வெளியில் வர…
“டேய் அருண்… இதுக்கு தான்டா உன்ன உள்ள போக சொன்னேன்… நீ இருந்தா சிரிச்சே மாட்டி இருப்ப…” லக்ஷ்மி அருண் காதை பிடித்து செல்லமாக திருக…
“மா… அதெல்லாம் அவ இருக்கறப்போ சிரிக்க மாட்டேன்… நம்பு மா…” என்றான் முகத்தை பாவமாக வைத்துக்கொண்டு…
அறைக்குள் சென்ற நிலா, கதவை மூடி விட்டு கண்ணாடியை பார்த்துக்கொண்டு நின்றாள்…
கண்ணாடியில் தெரியும் அவள் உருவத்திடம் பேசினாள்…
“எனக்கு எதுவும் பிடிக்கல… லவ் கல்யாணம் எதுவுமே… நாளைக்கு வரபோற பையன பிடிக்கலனு சொல்ல போறேன்…ம்ஹ்ம்…”
“உனக்கு லவ் பிடிக்கலையா…?? இந்த கதையை நா நம்ப மாட்டேன்…” அவள் மனம் பேச…
“ஒத்துக்கறேன்… நா லவ் பண்ணி கல்யாணம் பண்ண தான் ஆசைப்பட்டேன்… ஆனா எனக்கு லவ் மேல நம்பிக்கை போயிடுச்சு… யாரும் இங்க உண்மையா இருக்க மாட்டாங்க…”
இரவு சாப்பிட முடியாமல் பாதியில் எழுந்தவள் தூங்கலாம் என்று படுக்கையில் சாய்ந்தவள்,
தூக்கம் வராமல் fmஐ ஆன் செய்தாள்…
உன்னாலே உயிர்வாழ்கிறேன்…
உனக்காக பெண்ணே…
உயிர் காதல் நீ காட்டினாய்…
மறவேனே பெண்ணே…
என்ற வரிகள் ஒலிக்க…
அதுவும் பிடிக்காமல் ஆப் செய்துவிட்டு
கண்களை மூடினாள்..
அவன் பேசியது…
அவன் பார்வை…
அவன் சிரிப்பு…
அவன்…
அவளை விழாமல் தாங்கியது…
அவனுடன் பயணித்தது…
எவ்வளவு உதாசீனபடுத்தினாலும் அவளுக்காக வந்தது…
அவளது தலைவலிக்கு பதறியது…
நான் ஏன் அவன பத்தி யோசிக்கிறேன்…
சே…
அவன பத்தி நா யோசிக்க விரும்பல…
எனக்கு அவன புடிக்காது…
நினைத்துக்கொண்டே தூங்கினாள்…
காலையில் எழுந்தவள் அலுவலகத்திற்கு லீவ் சொல்லிவிட…
அறைக்கு வெளியில் சுமியின் குரல் கேட்டது…
நிலா வெளியே சென்று பார்க்க…
சுமி நிலாவை பார்த்துவிட்டு அருகே வந்தாள்…
“நிலா… கல்யாணப்பொண்ணா ஆயிட்ட… எனக்கு எவ்ளோ சந்தோஷமா இருக்கு தெரியுமா…???”
“ஏ… நீ ஆபிஸ் போகலையா சுமி…” நிலா கேட்க.
“நா லீவ் சொல்லிட்டேன்… காலைல ஆன்ட்டி கால் பண்ணி வர சொன்னாங்க…” என்றாள் சுமி…
“அடிப்பாவி… இங்க வா…” அவளை இழுத்துக்கொண்டு அறைக்குள் சென்ற நிலா, “ரொம்ப சந்தோஷப்படாத… நானே ஏதோ அம்மா சொல்றாங்களேனு தான் இதுக்கு ஒத்துகிட்டேன்… எப்டி இருந்தாலும் நா வர்ற மாப்பிள்ளையை புடிக்கலனு தான் சொல்ல போறேன்…” என சொல்ல…
“ஏன் நிலா… நீ தான் யாரையும் லவ் பண்ணலயே… அந்த ஆதி சார் தான் உன்மேல உருகி உருகி… ல… அக்கறை காட்டினார்… ஆனா உனக்கு தான் அவர்மேல எந்த பீலிங்கும் இல்லையே…” சுமி நிலாவின் கண்களை பார்த்து கேட்க…
சுமியிடம் மறைக்க முடியாமல், “யாரும் அப்படியெல்லாம் உண்மையா அக்கறை காட்ட மாட்டாங்க சுமி… அந்த ஆதி அவ்ளோ நல்லவன்லாம் கிடையாது… அவன் ஒரு பொண்ணுகிட்ட சிரிச்சு சிரிச்சு பேசுனதை நா என் கண்ணால பாத்தேன்…” நிலா சொல்ல.
“ஏன் நிலா… சிரிச்சு பேசுனா லவ்வா…? ஆதி சாரோட பிரெண்ட்ஸ் யாராச்சும் இருக்கலாம்ல…” சுமி கேட்க.
“அதெல்லாம் எனக்கு தெரியாது… அந்த பொண்ணு எவ்ளோ உரிமையா ஆதிய அடிச்சா தெரியுமா… நீயும் நேர்ல பாத்து இருந்தா அப்படி தான் தோணும் உனக்கும்…” எங்கோ பார்த்துக்கொண்டு சொன்னாள் நிலா.
நிலாவின் முகத்தை தன் பக்கம் திருப்பிய சுமி, “நீ ஆதி மேல possessiveஆ பீல் பண்ற நிலா… அதான் உன்னால நார்மலா யோசிக்க முடியல…” என சொல்ல…
நிலா கண்களில் கண்ணீர் வழிய, “இல்ல… சுமி… அப்படியெல்லாம் இல்ல…” என்றாள்.
“அப்றம் இது என்ன நிலா…?” நிலாவின் கண்ணீரை துடைத்தபடி சுமி கேட்க.
சுமியை கட்டிக்கொண்டு நிலா அழ ஆரம்பித்தாள்.
“தெரில சுமி… எனக்கு ஆதிய புடிக்கல… அவன் வேறே ஒரு பொண்ண நேத்து தான் பொண்ணு பாத்துட்டு வந்தான்… அவன் சொன்னதை நா கேட்டேன்… அவன் ஒண்ணும் என்ன லவ்வெல்லாம் பண்ணல…” நிலா விம்மிக்கொண்டே சொல்ல…
ஆதி கூறியது நிலாவை பற்றி தான் என்பதை சுமி உணர்ந்தாலும்…
நிலாவின் அம்மா லக்ஷ்மி அவளிடம் நிலாவுக்கு எதுவும் தெரியக்கூடாது என்று கேட்டுக்கொண்டு இருந்ததால்…
வாய்வரையிலும் வந்த வார்த்தைகளை கட்டுப்படுத்திக்கொண்டு நிலாவை ஆசுவாசப்படுத்தினாள்.
“ஒண்ணும் problem இல்ல நிலா… நீ directஆ ஆதி கிட்ட பேசுனா… எல்லாம் solve ஆகிடும்” சுமி சொல்ல…
கண்களை துடைத்துக்கொண்ட நிலா, “நா ஆதிக்கிட்ட பேசமாட்டேன் சுமி… நீ என்ன சொன்னாலும்… இனிமே ஆதி பத்தி நீ பேசாத…” சொல்லிவிட்டு பாத்ரூமில் சென்று கதவை தாளிட்டுக்கொண்டாள்.
மீண்டும் வருவாள்…
Comments
0 comments