செய்திகள்,கதைகள், விமர்சனங்கள்

Ep – 18 மீண்டும் நிலா

3,153

மீண்டும் நிலா
Episode – 18 (Final Episode)
Written by – Saipriya.A


வரப்போகும் மாப்பிளை வீட்டாரை திட்டிக்கொண்டே வேண்டாவெறுப்பாக ரெடியாகிக்கொண்டிருந்தாள் நிலா.

“சே… ஏற்கனவே இருக்கற பிரச்சினை பத்தாதுன்னு இவங்க வேற இப்போதான் வரணுமா…?? எனக்கு புடிக்கவே இல்ல… எரிச்சலா வருது…” நிலா புலம்ப…

“வெய்ட் நிலா… ஈவினிங் வரபோறவங்க யாருன்னு தெரிஞ்சா இந்த புலம்பல்லாம் தானா மாறிடும்…” சுமி சிரித்துக்கொண்டே முணுமுணுக்க…

“என்ன சொல்ற சுமி… கொஞ்சம் சத்தமா சொல்றியா…??” நிலா காதணியை அணிந்துகொண்டே கேட்க…

“ஒண்ணும் இல்லையே நிலா… நா ஒண்ணும் சொல்லல… ஹிஹி…” சிரித்து சமாளித்தாள் சுமி.

“நா ஒருத்தி… மைண்ட்வாய்ஸ்னு சத்தமா பேசிட்டேன்…” தன் தலையில் குட்டிக்கொண்டே அறையை விட்டு வெளியில் வர…

“என்ன சுமி… நிலா ரெடி ஆகிட்டாளா??” கேட்ட அருணை நிமிர்ந்து பார்த்த சுமி…

“அவ செம கோபத்துல இருக்கா…” சொல்லிவிட்டு சுமி சிரிக்க…

“ஹ்ம்ம்…” அவள் சிரிப்பதையே பார்த்துக்கொண்டு இருந்தான் அருண்…

அருணின் முகத்துக்கு நேரே சொடுக்கியவள், “ஹலோ… சார்… போய் வேலையை பாருங்க…” என்று நகர்ந்தாள்.

மணி 4 ஆனது…
அருண் வேகமாக உள்ளே வந்தவன், “அம்மா… அவங்க வந்துட்டாங்க…” என்று சொல்ல…

வாசலுக்கு சென்று வரவேற்ற லக்ஷ்மியும் அருணும் அவர்களை ஹாலில் உட்கார வைக்க…

அறைக்குள்ளிருந்த நிலாவுக்கு அழுகை பொங்கியது…
“நா தான் ஆதிய தப்பா புரிஞ்சிக்கிட்டனா…? ஆதிய தான் நா காதலிக்கிறேனா…??”

“பொண்ணை அழைச்சிட்டு வாங்க…” வெளியே இருந்து குரல் கேட்க…

சுமி நிலாவை அழைக்க உள்ளே வர…
சட்டென்று கண்களை துடைத்துக்கொண்டு ஒரு முடிவுக்கு வந்தாள்.

நேரே அவர்கள் இருக்கும் இடத்திற்கு சென்றவள் நிமிர்ந்து கூட பார்க்காமல், “எனக்கு இந்த கல்யாணத்துல இஷ்டம் இல்ல…” என்று கூற…

பதிலுக்கு சிரிப்பு சத்தம் வரவே நிமிர்ந்தாள்…

மாப்பிளை வீட்டாருடன் ஆதி அமர்ந்து சிரித்துகொண்டிருக்க…

நிலாவுக்கு கோபம் பொங்கியது…
நேரே சென்று ஆதியை அடிக்க ஆரம்பித்தவள், “ஏன் என்கிட்ட உண்மைய மறைச்ச… ஏன் பொய் சொன்ன பொண்ணு பாத்துட்டு வரேன்னு… எதுக்கு என்ன அழ வைக்கிற…” சொல்லிவிட்டு ஆதியை கட்டிக்கொண்டு அழ…

“வாங்க… நாம வீட சுத்தி பார்க்கலாம்…” என்று ஆதியின் பெற்றோரும் நைசாக அந்த இடத்திலிருந்து கழண்டுகொள்ள…

“ஹான்… வாங்க…” என்று எல்லோரும் கிளம்பிவிட…

“அழுது முடிச்சிட்டியா… சரி… கண்ண தொடச்சிக்கோ… நாம இப்போ பேசலாமா??” நிலாவின் கண்ணை துடைத்துவிட்டு ஆதி கேட்க…

விம்மிக்கொண்டே “ஹ்ம்ம்…” என்றாள் நிலா…

“நா நேத்து பொண்ணு பார்க்க போனேன்னு சொன்னது மேடம் கண்டுக்குறீங்களா இல்லையான்னு பார்க்கத்தான்… நா சொன்னது ஒரு வகையில உண்மை தான… உங்க வீட்டுக்கு தான் வந்து இருந்தேன் நேத்து…”
“உன்கிட்ட மொதல்ல சொல்லணும்னு தான் நெனச்சேன்… என்ன பண்றது… மேடம் தான் கோவமா இருந்தீங்களே… சரி சொல்லுங்க இப்போவாச்சும்… என்ன கோபம் உங்களுக்கு…??” ஆதி கேட்க…

“அன்னிக்கி சூப்பர் மார்க்கெட்ல ஒரு பொண்ணுட்ட பேசிட்டு இருந்தத பார்த்தேன்… அவ கூட என் முன்னாடியே உரிமையா அடிக்கிறா…” நிலா குழந்தை போல கூற.

“அடிப்பாவி… அப்போவே கேட்டிருக்கலாம்ல நீ… அவங்க எனக்கு அக்கா மாதிரி… அவங்களுக்கு பாப்பாலாம் இருக்கு… எங்க வீட்டுக்கு பக்கத்துல இருந்தவங்க… அப்புறம் அவங்க ஷிஃப்ட் ஆகிட்டாங்க… அவங்க என்ன சின்ன வயசுல தூக்கி சோறெல்லாம் ஊட்டி இருக்காங்க தெரியுமா…??” சொல்லிவிட்டு ஆதி சிரிக்க…

“ஒஹ்… உங்களுக்கு எல்லாம் சிரிப்பா போச்சா…” சொல்லிவிட்டு நிலா அடிக்க…

“ஏய்… என்ன நீ அடிச்சிட்டே இருக்க… போ… என் லவ்வ புரிஞ்சிக்காம நீயும் தான் இத்தனை நாள் என்ன கஷ்டப்படுத்தன…” ஆதி கோபித்துக்கொண்டதுபோல் முகத்தை திருப்பிக்கொள்ள…

“சரி… போதும்… இப்போ தான் புரிஞ்சிகிட்டேன்ல” என்று நிலா கொஞ்ச…

“ம்கும்…” கனைத்துக்கொண்டே வந்த அருண், “இனிமே நாங்க கொஞ்சம் கல்யாண விஷயம் பேசலாமா…??” என்று கேட்க…

சிரித்துக்கொண்டே வந்தனர் இருவீட்டினரும்…


மூன்று வருடங்களுக்கு பிறகு…

“அப்பா… அப்பாஆஆ… எனக்கும் உன்ன மாதிரி டை கட்டிவிடு…”

“இருடா செல்லம்… அப்பா கிளம்பிட்டு உனக்கு அப்றம் டை கட்டுறேன்… என் குட்டி பாப்பால்ல…” ஆதி அவன் செல்ல மகளை கொஞ்ச…

“இப்போவே கட்டி விடுப்பா… அவ்வ்…” சாஹித்யா அப்பா மேல் ஏறி கடிக்க…

“ஆஆ… சாஹி… அப்டியே உங்கம்மா மாதிரியே அடம்புடிக்கற… இப்படி டேபிள் மேல அமைதியா நில்லு… டை கட்டற வரைக்கும்…” ஆதி போராட…

“என்ன அங்க சத்தம்…” நிலா குரல் கொடுக்க…

“சும்மா… பேசிட்டு இருக்கேன் நிலா…” என்றான் ஆதி…

சாஹித்யாவை கிளப்பி ஒருகையில் தூக்கிக்கொண்டவன் ஹாலுக்கு சென்று பார்க்க நிலாவும் கிளம்பி ரெடியாக இருந்தாள்…

சாஹித்யா பாட்டியிடம் தாவ…
“பை செல்லக்குட்டி… gudஆ இருக்கணும்…” என்று குழந்தைக்கு முத்தம் கொடுத்து ஆபிசுக்கு கிளம்பினாள் நிலா.

“ஆதி… கோவில் போய்ட்டு போலாமா…” நிலா கேட்க…

“ஓ… போலாமே…” என்றவன் பிள்ளையார் கோவிலில் காரை நிறுத்தினான்…

இறங்கி உள்ளே சென்று கண்ணைமூடி சாமி கும்பிட்டு கொண்டிருந்தவளை, “ஹை… அத்த…” என்று அம்மு கட்டிக்கொள்ள…

“ஐ… என் செல்லக்குட்டி… கோவிலுக்கு வந்தீங்களா… எங்க அம்மாவும் அப்பாவும்…” அம்முவை தூக்கிக்கொண்டு நிலா கேட்க…

அவள் சுட்டிக்காட்டிய இடத்தில் அருணும் சுமியும் நடந்து வர…

நிலாவை பார்த்த சுமி ஓடிவந்து கட்டிக்கொண்டாள்…

“ஹாய்… ஆதி…” அருணும் சிரித்துக்கொண்டு ஆதியின் கையை பிடித்துக்கொள்ள…

“அக்கா எங்க…??” கேட்டது அம்மு…

“சாஹி அக்கா… பாட்டிட்ட இருக்கா… ஈவினிங் நா கூட்டிட்டு வரேன்… நாம ஜாலியா விளையாடலாம்…” நிலா கூற…

“சரி… ஈவினிங் வரோம் வீட்டுக்கு… ஆபிஸ் போகணும்…” என்று விடைபெற்றனர்.

“சரி சாமிகிட்ட என்ன வேண்டுன…??” காரை ஓட்டிக்கொண்டே ஆதி கேட்க…

“ஹ்ம்ம்… எனக்கு நா ஆசைப்பட்டதெல்லாம் கெடைச்சிடுச்சு ஆதி… இதை விட எனக்கு என்ன வேணும்… நா லவ் பண்ணவரையே கல்யாணம் பண்ணிக்கிட்டேன்… என் செல்ல பொண்ணு சாஹி கிடைச்சிருக்கா… என் பெஸ்ட் பிரெண்டே எங்க வீட்டுக்கு வந்துட்டா…”

“ஆனா ஒண்ணு மட்டும் உண்மை ஆதி… கடவுளுக்கு, நமக்கு எப்போ என்ன குடுக்கணும்ன்னு நல்லா தெரியும்…” நிலா கூற…

“கண்டிப்பா நிலா… எனக்கு இந்த அழகான அறிவான தேவதையை வாழ்க்கைதுணையா குடுத்து இருக்காரே…” என்ற ஆதி நிலாவை அணைத்துகொண்டான்…

அவர்கள் வாழ்வில்…
இனி எல்லாம் சுகமே…

Comments

0 comments

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy