செய்திகள்,கதைகள், விமர்சனங்கள்

Ep – 6 உன் பாத கொலுசாய்

3,131

உன் பாத கொலுசாய்…
EPISODE – 6
Written by
Saipriya.A


ஏற்காடு… இயற்கையும் பசுமையும் எங்கும் நிறைந்திருக்க… காற்றில் பனி பரவி சில்லென இருந்தது…

பஸ் ஆபீஸ் கெஸ்ட் ஹவுஸ் எதிரில் நிற்க… இறங்கிய அனைவரும் பிரமித்துதான் போனார்கள்… அவ்வளவு வேலைப்பாடுகளுடன் கலைநயமாக கட்டப்பட்டிருந்தது…

ஒரு வழியாக எல்லோருக்கும் ரூம் ஒதுக்கப்பட… எல்லோரும் ரிஃப்ரஷ் ஆவதற்கு சென்றனர்… பிறகு சாப்பிடுவதற்கு பெரிய டைனிங் ஹாலில் அனைவரும் சேர்ந்து அமர்ந்து சாப்பிட ஆரம்பித்தனர்
சாப்பிட்டு முடித்து ஒரு குட்டி தூக்கமும் போட்ட பின், அங்கு இருக்கும் பெஸ்ட் பார்க் ஒன்றிற்கு போவதற்காக அனைவரும் ரெடி ஆகிக் கொண்டிருக்க…

ரிஷி அஷ்வினிடம் புலம்பிக் கொண்டிருந்தான்…
“இப்போ என்னடா உன் பிரச்சனை…??” என்று அஷ்வின் கேட்க…

“டேய் தியா எந்த ரூம்ல இருக்கான்னு தெரியலனு இவ்வளவு நேரம் கத்திகிட்டு இருக்கேன்… என்ன பிரச்சனைனா கேட்கிறே…?” என்று அவனை ரிஷி அடிக்க ஆரம்பித்தான்.

“நான் வேணும்னா எல்லா ரூம் கதவையும் தட்டி போய் கண்டுபுடிச்சிட்டு வரவா மச்சான்…?” என்று அஷ்வின் அப்பாவியாய் கேட்க…

“அட போடா… பஸ்ல இருந்து இறங்கும்போதே பார்க்காம கோட்டை விட்டுட்டு… இப்போ தேடுறானாம்…” என்று ரிஷி அலுத்துக் கொள்ள…

“யாரு நான் கோட்டை விட்டுட்டனா? நேரம் டா சாமி…” என்றபடி ரூமை விட்டு வெளியே சென்ற அஷ்வின் கத்திக்கொண்டே உள்ளே ஓடி வர…

“என்னாச்சுடா…? ஏதாச்சும் பேய் கீய் பாத்தியா…??” என்று ரிஷி கேட்க…

“இல்ல மச்சான்…” என்று அஷ்வின் வெட்கப்பட்டுக்கொண்டே, “ரேவதி மச்சான்… எதிர் ரூம்ல தான் இருக்கா… உனக்குதான் தெரியுமே… அவ என் க்ரஷ் னு…” என்று அஷ்வின் சொல்லி முடிக்க…

“தியாவ கண்டுபிடிக்க ஹெல்ப் பண்றேன்னு சொல்லிட்டு போனவன்… க்ரஷ் பிரஷ்ன்னு பேசிட்டா இருக்க… உன்ன…” என்று அஷ்வினை துரத்திக்கொண்டே ரிஷி ரூமை விட்டு வெளியில் ஓடி வர…

ஏதோ ஒரு பூக்குவியல் மீது மோதியது போல் இருக்க… அப்படியே நின்றான்… மோதியதில் தடுமாறி அந்த பூக்குவியல் அவன் மீதே சாய…

கண்மூடி திறப்பதற்குள் தியா அவன் அணைப்பில் இருந்தாள்… நொடியில் சுதாரித்தவன், “ஐ அம் எக்ஸ்ட்ரீம்லி சாரி தியா… எல்லாம் இவனால… அவனை துரத்தி வர போய்… சாரி…” என்றபடி அவளை விட்டு விலகினான்.

“இட்ஸ் ஓகே ரிஷி… வேணும்னே வா பண்ணீங்க… சரி அத விடுங்க… நான் உங்கள கூப்பிட தான் வந்தேன்…” என்று தியா கூற…

“நான் இங்கதான் இருக்கேன் உங்களுக்கு தெரியுமா…?” என்று ரிஷி ஆச்சரியமாக கேட்க…

“என்ன ரிஷி… நான் ஆப்போசிட் ரூம்ல தான இருக்கேன்…?” என்று தியா கூற,
ரிஷி அஷ்வினை முறைத்தான்.

அஷ்வின் நைஸாக அந்த இடத்தில் இருந்து நழுவ, அஷ்வினின் தோளில் கை போட்டு அவனை லாக் செய்த ரிஷி, “இதோ வந்திடறேன் தியா… வேலட் எடுத்துட்டு வரேன்…” என்று அஷ்வினை இழுத்துக்கொண்டு ரூம் உள்ளே சென்றவன்…

“டேய் நல்லவனே… அங்க போய் ரேவதி எல்லாம் பாக்க தெரிஞ்சது… அதே ரூம்ல இருந்த தியாவை கண்டுபிடிக்க துப்பு இல்ல… உன்ன நம்பி… தூ…”

“மச்சான் நம்பு டா… உனக்கு ஹெல்ப் பண்ண தான்டா போனேன்… அப்போ அங்க சத்தியமா ரேவதி மட்டும் தான்டா இருந்தா…!” என்று அஷ்வின், ரிஷி தலைமேல் அடித்து சத்தியம் செய்ய…

“டேய்… நான் எங்க அம்மா அப்பாவுக்கு ஒரே புள்ள டா….” என்று ரிஷி அலற…

“வெளியே தியா வெயிட்டிங்… டைம் வேஸ்ட் பண்ணாம வாங்க மிஸ்டர் ரிஷி…!” என்று அஸ்வின் கூறியதும், வேலட்டை எடுத்தவன், ரூமை லாக் செய்து விட்டு கிளம்பினான்…

“போலாமா…?” என்று தியா கேட்க… “இதோ வந்துட்டேன்…” என்றபடி ரிஷி வந்தான்.

பஸ் அந்த அழகான பார்க் முன்னால் நின்றது… நுழைவாயில் அழகான செடி கொடிகளை வளர்த்து செய்யப்பட்டிருக்க… அதன் முன்னே நின்று ஃபோட்டோ எடுத்துக்கொண்டனர்…

சுற்றிப்பார்க்க எல்லோரும் ஒரு ஒரு திசையில் பிரிந்து செல்ல… தியாவும் ரிஷியும் ஒன்றாக சுற்றி பார்க்க ஆரம்பித்தனர்…

வகை வகையான ரோஜாக்கள் கண்களை கொள்ளை அடிக்க, அந்த ரோஜாக்களின் அழகை மிஞ்சும் சிறு சிறு குழந்தைகள் அந்த பூங்காவில் விளையாடிக்கொண்டு இருந்தனர்…

தியா, “ரிஷி… கொஞ்ச நேரம் அந்த children’s பார்க்குக்கு போய் அந்த சின்ன பசங்க விளையாடுறதை பார்க்கலாமா??… என்று கேட்க…

“ஓகே தியா…” என்று ரிஷியும் அவள் கூடவே சென்றான்.

அங்கே ஒரு குட்டிப்பையன் ஊஞ்சலில் தானாகவே ஏறி அமர்ந்து கொண்டு, கால்களால் தரையை எட்டி உதைத்து, ஊஞ்சலை ஆட வைக்க முயற்சி செய்து கொண்டிருக்க…

தியாவை பார்த்தவன், “அக்கா ப்ளீஸ்ச்… இந்த ஊஞ்சல ஆட்டி விடுறீங்களா…??” என்றான்.

அவனை பார்த்து சிரித்தபடி அவனருகே சென்றவள், “சரி… அக்கா ஆட்டி விடறேன்… நீ கெட்டியா ஊஞ்சல பிடிச்சிக்கோ…” என்றபடி தியா அவனை வைத்து மெதுவாக ஆட்ட…

“அக்கா… இன்னும் வேகமா… இன்னும் வேகமா…” என்று அவன் கூற, ஊஞ்சலை வேகமாக ஆட்டி விட்டு கொண்டே தியா சிரித்துக் கொண்டிருக்க… அவள் விளையாடுவதை ஆசையாக பார்த்த ரிஷி தன் மொபைலில் அதை படம்பிடிக்க…

“போதும் கா…” என்று ஒரு வழியாக கீழே இறங்கியவன், “அக்கா உங்க பேர் என்ன…?” என்று மழலையாக கேட்க…

“தியா… உன் பேர் என்ன…?” என்று தியா கேட்டாள்.

“அக்கா… கொஞ்சம் கிட்ட வாங்களேன்…” என்று அவன் கூப்பிட, அவன் அருகே வந்த தியாவின் கன்னத்தில் முத்தமிட்டவன், “சூர்யா…” என்றான்.

“நிமிடத்தில் தியா முகத்தில் இருந்த சிரிப்பு மறைய, அந்த சிறுவன் அங்கிருந்து போய் இருந்தான். தியா திகைத்துப் போய் அங்கேயே அமர்ந்திருக்க…

ரிஷிக்கு ஏதோ புரிவது போல் இருந்தது… “தியா…!” என்று அவளை ரிஷி அசைக்க…

நிமிர்ந்தவளது கண்களின் விளிம்பில் கண்ணீர் ‘வரவா?’ என்று நின்றிருந்தது…

ரிஷிக்கு மனதில் ஏதோ உடைவது போல் இருந்தது…

“தியா… ப்ளீஸ்… அழாதீங்க…” என்று ரிஷி சொல்லிக்கொண்டிருக்கும்போதே, தியா உடைந்து அழ ஆரம்பித்தாள்.

ரிஷிக்கு அவளை எப்படி தேற்றுவது என்றே தெரியவில்லை… அவன் மனதிற்குள், “சூர்யா யார்…?” என்ற கேள்வி குடைய…

“என் தியா அழறதுக்கு அந்த சூர்யா தான் காரணமா…?” என்று முகம் தெரியாத அவன் மேல் கோபம் பொங்கியது…

தியாவின் கையை பற்றி தன் கைகளுக்குள் வைத்துக்கொண்டவன், ” தியா… உங்க கஷ்டத்துக்கு காரணம் என்னன்னு தெரியல… எதுவா இருந்தாலும் ப்ளீஸ் அழாதீங்க… நீங்க இப்படி அழுதா தான் உங்க பாரம் குறையும்னா… நா இங்க இருந்து போகணும்னா சொல்லுங்க… போறேன்… இல்ல உங்க கஷ்டத்த யார்டயாச்சும் சொன்னா ஆறுதலா இருக்கும்னு நினைச்சா… நான் எப்பவும் இருப்பேன்… ஆனா அழறது எந்த கஷ்டத்திற்கும் தீர்வு இல்லை…” என்று ரிஷி கூற…

கண்களை துடைத்துக்கொண்டவள், மீண்டும் அழ ஆரம்பித்தாள்…

“தியா… என்ன இது சின்ன குழந்தை மாதிரி… எவ்வளவு தைரியமான பொண்ணு நீ…! இப்படி அழலாமா…? சரி என்னதான் ஆச்சு…!” என்று ரிஷி மறுபடி கேட்க…

தியாவுக்கு அந்த நாளின் ஞாபகம் வர… அழுகை பொங்க, “தப்பு பண்ணிட்டேன் ரிஷி… என்னால இப்போ… இன்னொரு உயிர் போராடிட்டு இருக்கு… என் கண்ணு முன்னாடி இருந்தும்… என்னால காப்பாத்த முடியாம போச்சு… என்ன காப்பாத்த போய் தான்… சூர்யாக்கு அன்னிக்கி…” என்று அழுது கொண்டே சொல்ல ஆரம்பித்தாள் தியா…


கொலுசு ஒலிக்கும்…


Comments

0 comments

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy