செய்திகள்,கதைகள், விமர்சனங்கள்

Ep – 8 உன் பாத கொலுசாய்

2,776

உன் பாத கொலுசாய்…
EPISODE – 8
Written by
Saipriya.A


சூர்யாவுக்கு திடீரென உலகமே அழகானது போல் இருந்தது… ஏனென்றால், அவன் தேவதை இருக்கும் உலகம் ஆயிற்றே…!

அவளை பார்ப்பதற்காகவே காலேஜுக்கு சீக்கிரம் வர ஆரம்பித்தான்… அவள் ஏன் பிடிக்கிறது என்று அவனுக்கு தெரியவில்லை… ஆனால், அவளை விட அதிகமாய் யாரையும் பிடித்ததில்லை…

அன்று பவி ஏதோ அவசர வேலையாக ஊருக்கு கிளம்ப வேண்டியதாய் போனதால், தியா மட்டும் காலேஜுக்கு வந்திருந்தாள்…

“என்ன தியா மட்டும் தனியா நடந்து கிளாஸுக்கு போறா…? கூடவே சுத்துறரவள காணும்…??” என்று நினைத்த சூர்யா அவள் கையில் தூக்கமுடியாமல் மினி டிராஃப்டர் பேக் -உடன் போராடுவதை பார்த்தான்…

“நான் ஹெல்ப் பண்ணுறேன்… குடு…” என்ற குரல் கேட்டு தியா நிமிர்ந்தாள்.

“இல்ல தேங்க்ஸ்… பரவால்ல…! ஐ கேன் மேனேஜ்…” சொல்லிக்கொண்டே அவள் சூர்யாவை கடந்து செல்ல…

“சொல்றேன்ல… இவ்வளவு வெயிட்டான பேக், அதுகூட ச்சார்ட் ஹோல்டர் வேற… அத குடு… நான் எடுத்துட்டு வரேன்…” என்று சூர்யா மீண்டும் சொல்ல…

“வேணாம்னு சொல்றேன்ல… அப்படியே ஹெல்ப் பண்ணணும்னா, நீ வேற யாருக்காச்சும் போய் ஹெல்ப் பண்ணு…” என்று சொல்லிவிட்டு தியா அங்கிருந்து கோபமாக சென்றாள்…

சூர்யா மலைத்துப் போய் நின்று விட்டான்…
“இப்போ என்ன சொல்லிட்டோம்னு இந்த பொண்ணு இப்படி பேசிட்டு போகுது…? மூக்குக்கு மேல கோபம் வருது இவளுக்கு… இருக்கட்டும்… க்யூட்டா தான் இருக்கு கோபப்பட்டாலும்…” சிரித்துக் கொண்டே சூர்யா கிளாஸ் ரூம்-க்கு செல்லத் திரும்ப, அங்கு கையை கட்டிக்கொண்டு தினேஷ் நின்றிருப்பதை பார்த்த சூர்யா, “பாத்திருப்பனோ…?” என யோசித்துக் கொண்டே…

“ஹாய் டா மச்சான்…! என்ன இன்னைக்கு காலேஜிக்கு சீக்கிரம் வந்துட்ட…?” என்று கேட்க…

“நான் சீக்கிரமே வந்ததால தான் சார் பண்ணுறதெல்லாம் பாக்க முடிஞ்சது…!” என்று தினேஷ் சொல்ல…

“பாத்துட்டியா மச்சி…? பாருடா…! ஹெல்ப் பண்ணலாம்னு போனதுக்கு அந்த பொண்ணு என்ன மதிக்கவே இல்ல டா…!? என்ன உலகம்டா இது..!” என்று சூர்யா சீரியஸாக கூற…

“டேய்… நீ ஹெல்ப் பண்ணவா போன…? அப்படி இருந்தா, அவ தேங்க்ஸ் பரவாயில்லன்னு சொன்னப்பவே, ஒதுங்கி இருப்பே… நீ அந்த பொண்ணுகிட்ட அதை சாக்கா வச்சி பேசலாம்னு தானே போன…??” என்று தினேஷ் கிண்டல் செய்தான்.

“அதுவும் ஒரு காரணம் மச்சான்… ஆனா, அது மட்டுமே காரணமில்லை… ஐ அம் அ குட் பாய்… பேசிக்கலி, எனக்கு ரொம்ப நல்ல மனசு… யூ நோ…!!” என்று சூர்யா சமாளிக்க…

“போதும்… போதும்… நம்பிட்டேன் மச்சான்… கிளாஸுக்கு போவோம் வா…” என்று தினேஷ் சூர்யாவுடன் கிளாஸுக்குள் நுழைந்தான்.

சூர்யா தியாவையே நினைத்துக்கொண்டு கிளாஸில் இருக்கவே பிடிக்காமல் உட்கார்ந்திருந்தான்.

தினேஷ் மொபைலில் என்னவோ செய்துகொண்டிருக்க… சூர்யா அவனது மொபைலை பிடிங்கி பார்த்தான்…

“ஏன் இன்னைக்கு காலேஜ் வரல…? என்று தினேஷ், பவிக்கு இன்ஸ்டாகிராமில் மெசேஜ் அனுப்பியிருந்தான்.

“இது எப்போ-ல இருந்து டா…? என்று சூர்யா முறைக்க…

தினேஷ் அசட்டு சிரிப்புடன், “இந்த வாரம் தான் மச்சான்… உன்கிட்ட சொல்லலாம்னு தான் இருந்தேன்…” என்று இழுக்க…

“அப்புறம் என்னாச்சு…? கொசு தும்முச்சா…?” என்ற சூர்யா சட்டென நினைவுக்கு வந்தவனாய்,
” அது சரி… என் ஆளு இன்ஸ்டா-ல இருக்காளா…?” என்று கேட்க…

“இல்ல டா மச்சான்… அவ ரொம்ப படிப்ஸ்னு தெரியும்ல…?” என்றான் தினேஷ்.

அவனை பார்த்து முறைத்த சூர்யா, “நீ உனக்கு மட்டும் ஒரு ப்ளான் போட்டுகிட்ட-ல…? எனக்கு…?? நீ என்ன பண்ணுவியோ தெரியாது…! தியாவை பத்தி கண்டுபிடிச்சு சொல்ற…! இல்ல…?!” என்று மிரட்ட…

“டேய் நான் எப்படி டா மச்சான் கண்டு பிடிக்கிறது…?” என்று தினேஷ் கெஞ்ச…

ஏன் பவி தியாவோட ஃப்ரெண்ட் தான…? அவ கிட்ட கேட்டு சொல்லு…” என்றான் சூர்யா.

“ஆமா ல… சரி டா…” என்று தினேஷ் சொல்ல…

“அறிவு…” என்றான் சூர்யா.

“நான் அறிவு இல்ல டா… தினேஷ்…!” என்று தினேஷ் சொல்ல…

“ஹையோ… நானும் அதான் சொன்னேன்… நீ அறிவும் இல்ல… உனக்கும் அறிவு இல்லை…” என்று சூர்யா சொல்ல…

அவன் சொல்வது புரியாமல் கொஞ்ச நேரம் யோசித்தவன், “கரெக்ட்டு டா…” என்றான்.

பெல் அடிக்க… லெக்சரர், “சரி ஸ்டூடண்ட்ஸ்… நெக்ஸ்ட் பீரியட்… EG ஹாலுக்கு வந்துடுங்க…” என்று சொல்லி விட்டு கிளம்பினார்.

சூர்யாவுக்கு இந்த தியரி எல்லாம் பிடிக்காது… ஆனால், பிராக்டிகல் எல்லாம் பக்காவாக செய்வான்… ட்ராயிங் போர்டில் எப்படி டிராஃப்டர்-ஐ ஃபிக்ஸ் செய்து பேசிக் ஆக வரைவது என்று மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட…

சூர்யா எல்லோருக்கும் முன்னால் ஃபிக்ஸ் செய்து சார்ட்டை கம்பளீட் செய்து விட்டான்…

அவன் தினேஷுக்கு ஹெல்ப் செய்வதை பார்த்த ப்ரொஃபஸர், “பரவால்லயே… நீ முடிச்சிட்டு மத்தவங்களுக்கும் ஹெல்ப் பண்றியா…? வெரிகுட் சூர்யா…!!” என்று பாராட்ட…

“தேங்க்யூ சார்…” என்றான் சூர்யா.

“சூர்யா…! நெக்ஸ்ட் பீரியட், ECE யும் வருவாங்க… நீ அவங்களுக்கு ஹெல்ப் பண்ணு ஃபிக்ஸ் பண்றதுக்கு… அப்போதான் நான் உங்க டிராயிங்ஸ் எல்லாம் பார்க்கறதுக்கு டைம் கரெக்ட்டா இருக்கும்…” என்றார் ப்ரொஃபஸர்.

தினேஷ் சூர்யாவை பார்த்து வாயைப் பிளக்க,
சூர்யா, “ஓகே சார்…” என்றுவிட்டு பெல் எப்போது அடிக்கும் என்று வெயிட் செய்ய ஆரம்பித்தான்…
நிமிட முள் ஆமை வேகத்தில் நகர்வதைப் போல் இருக்க, ஒரு வழியாக பெல் அடித்தது…
ECE மாணவர்கள் அந்த EG ஹாலுக்குள் நுழைந்தனர்…

சூர்யா தியாவுக்கு ஹெல்ப் செய்ய ரெடி ஆக, ப்ரொஃபஸர், “ராம்… சூர்யாவால எல்லாருக்கும் போய் ஃபிக்ஸ் பண்ண முடியாது… நீயும் போய் ஹெல்ப் பண்ணு…” என்று சொல்ல, ராம் எழுந்து வந்தான்.

சூர்யா அவனை அழைத்து, “நீ அந்தப் பக்கம் ஹெல்ப் பண்ணு… இந்த சைட் நான் பார்த்துக்கிறேன்…” என்று சொல்ல…
“ஓகே சூர்யா… என்று ராம் அந்தப் பக்கம் நகர…

தியா நடுவில் அமர்ந்து இருந்ததால், நேரே அவளிடம் போக முடியாமல், அவளுக்கு பக்கத்தில் இருந்த இரண்டு பேருக்கு முடித்து விட்டு, அவளுக்கு ஃபிக்ஸ் செய்யலாம், என்று சூர்யா இருக்க, அதற்குள் தியா தானாகவே ஃபிக்ஸ் செய்ய ஆரம்பித்திருந்தாள்…

அதை பார்த்த சூர்யா, “அடிப்பாவி… கடவுளா பார்த்து உன் கிட்ட நெருங்கி வர ஒரு சான்ஸ் தந்தா, அதையும் இல்லாம பண்ணிடுவா போல…” என்று நினைத்துக் கொண்டவன் வேகமாக டிராஃப்டரை ஃபிக்ஸ் செய்ய முயல அது நேரம் பார்த்து வழுக்கி கொண்டு போனது…

அதற்குள் தியா ஃபிக்ஸ் செய்து முடித்து ராமை அழைத்து, “இது ஓகே தான…? இல்ல இன்னும் டைட் பண்ணவா…??” என்று அவனிடம் கேட்க…

ராம் பார்த்து விட்டு, “இன்னும் டைட் பண்ணனும்… நீங்க நகருங்க… நான் பண்றேன்…” என்று சொல்ல…
பார்த்துக்கொண்டிருந்த சூர்யாவுக்கு கோபம் பொங்கியது…

“இவன…!!!” வேகமாக அங்கே சென்றவன், “ராம்… உன்ன ப்ரொஃபஸர் கூப்பிட்ராறு பாரு… என்னன்னு கேளு…!” என்று நேக்காக ராமை துரத்தி விட்டவன், அவன் திரும்ப வருவதற்குள் தியாவின் டிராஃப்டரை ஃபிக்ஸ் செய்ய ஆரம்பித்தான்…

சூர்யாவை பார்த்ததும், “இவனா…!?” என்றானது தியாவுக்கு…
தியாவை பார்த்துக்கொண்டே டிராஃப்டரை ஃபிக்ஸ் செய்துவிட்டு சூர்யா நகர, “தேங்க்ஸ்…!” என்றாள் தியா…

சூர்யா, “என்னது…? கூப்பிட்டியா…??” என்று கேட்க…

“ஹ்ம்ம்…?! தேங்க்ஸ்…!” என்று தியா முறைத்துக் கொண்டே சொன்னாள்.

“சரி எதுக்கு இப்ப முறைக்கற…? சரியா கேக்கல… அதான், என்னன்னு கேட்டேன்… சாரி…!!” என்றான் சூர்யா.
பதிலுக்கு தியா முறைத்துக்கொண்டே, “இட்ஸ் ஓகே…” என்று சொல்ல…

கஷ்டப்பட்டு சிரிப்பை அடக்கிக் கொண்ட சூர்யா, அந்தப் பக்கம் போனதும் சிரித்தான், “என்னமா கோபம் வருது இவளுக்கு… அவ முன்னாடி மட்டும் சிரிச்சு இருந்தோம்… அவ்வளவு தான்… இன்னிக்கி நான் க்ளோஸ்…” சிரித்துக் கொண்டே சூர்யா தினேஷின் டேபிளுக்கு செல்ல…

“என்னடா…? உன் ஆள் கிட்ட பேசிட்டியா…??” என்று தினேஷ் கேட்க…

“ஹ்ம்ம்… அப்படியே ஒரு பார்வை பார்த்தா மச்சி… கோபமா… Eye to Eye… அந்த பார்வைக்காக… எத்தனை தடவை வேண்டுமானாலும் திட்டு வாங்கலாம் டா…” என்று சூர்யா சொல்ல…

“அப்போ நீ பகைய தான் வாங்கிட்டு வந்து இருக்கியா…??” என்று தினேஷ் கேட்க…

“இதுக்கு பேர் ஊடல்…” என்றான் சூர்யா.


கொலுசு ஒலிக்கும்…


Comments

0 comments

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy