செய்திகள்,கதைகள், விமர்சனங்கள்

Ep – 9 உன் பாத கொலுசாய்

3,166

உன் பாத கொலுசாய்…
EPISODE – 9
Written by
Saipriya.A


தியாவைப் பற்றி கொஞ்சம் கொஞ்சமாய் சூர்யா தெரிந்து கொள்ள ஆரம்பித்திருந்தான்…

உபயம்… வேறு யாரு…? நம்ம தினேஷ் தான்…!!

அவளைப் பற்றி கேட்க கேட்க சூர்யாவுக்கு அவள் மேல் இருந்த காதல் வளர்ந்து கொண்டே போனது… பார்ப்பதற்கு மட்டுமல்ல… குணத்திலும் அவள் தேவதைக்கு குறைந்தவள் அல்ல…

எல்லோரிடமும் சகஜமாக பழகும் தியா, ஏன் தன்னிடம் மட்டும் ஒதுங்கியே போகிறாள் என்பதற்கு மட்டும் சூர்யாவிடம் பதில் இல்லை…

சூர்யா பார்ப்பதற்கும் அவ்வளவு மோசமாக இருக்கவில்லை… ஏன்…?! இத்தனைக்கும் அவனைப் பிடித்துப் போய் சில பேர் ப்ரொபோஸ் எல்லாம் செய்து இருக்கிறார்களே…!!

ஆனால் அவனுக்கு மனசெல்லாம் தியா மேல் இருப்பதால்… மற்ற பெண்களை எல்லாம் சிஸ்டராக ஏற்றுவிட்டான்…

எப்படியாவது தியா மனதில் இடம் பிடிக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தவனின் சிந்தனை கலைய, எதிரில், அவனையே பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருந்தான் தினேஷ்…

“என்னாச்சு…? எதுக்கு இப்படி உட்கார்ந்திருக்க…?? என்று சூர்யா கேட்க…

“உன்கிட்ட ஒரு விஷயம் சொல்லலாம்னு… ரொம்ப நேரமா கூப்பிட்டு பாத்துட்டேன்… அப்படி என்னதான் டா யோசிப்ப…??” என்று கேட்ட தினேஷை பார்த்து சிரித்துக்கொண்டே பெஞ்ச்சிலிருந்து எழுந்தவன்…

“எல்லாம்… பியார்… பிரேமா… காதல்தான்…” என்று சொல்ல…

“நல்லா பண்றடா காதல…! அதுதான் உன்ன நல்லா பண்ணுது…!!” என்றான் தினேஷ்.

“சரி… நீ சொல்ல வந்ததை சொல்லு…” என்று சூர்யா கேட்க…

“பீச் -க்கு போலாம் கிளம்பு…” என்றான் தினேஷ்.

“எதுக்கு இப்ப திடீர்னு பீச்சுக்கு…??”, கைகளை மேலே தூக்கி திமிர் முறித்தவாறு சூர்யா அலுப்பாக கேட்க…

“தியா இப்போ அங்க தான் இருக்கா…! பவி சொன்னா… அதான் ஒரு வேளை… உனக்கு இந்த தகவல் யூஸ்ஃபுல்லா இருக்குமோ-ன்னு…!!” என்று தினேஷ் கூறி முடிப்பதற்குள்…

“சீக்கிரம் வா… நான் பைக் ஸ்டாண்ட்-ல இருக்கேன்…” என்று சூர்யா அங்கிருந்து கிளம்பியிருந்தான்.

“இதுல எல்லாம்… என் மச்சான் ஃபாஸ்ட் ஆச்சே…” என்றபடி தினேஷ் சூர்யாவின் பேகையும் எடுத்துக்கொண்டு கிளம்பினான்.

கடற்கரை…
அலைகளில் கால்களை நனைத்தபடி நின்றிருந்தாள் தியா…

“ஒன் மினிட் தியா… இதோ வந்துடறேன்…!” என்று பவி நகர… அவள் போனது கூட தெரியாமல் கடலை ரசித்துக் கொண்டிருந்தாள் தியா…

“சொல்லு தினேஷ்… என்ன கால் எல்லாம் பண்ணியிருக்க…??” என்று பவி கேட்க…

“நானும் பீச் -ல தான் இருக்கேன்… எங்க இருக்க…??” என்று கேட்டான் தினேஷ்.

“என்னது…?? நீ என்ன தான் பாக்க வந்தியா…?” என்று பவி கேட்டுக் கொண்டிருக்க…

“டேய் மச்சான்… எங்கடா போற…??” என்று தினேஷ் யாரிடமோ பேசுவது தான் பவிக்கு கேட்டது.

தினேஷ் கால் செய்து கொண்டிருந்த கேப்பில், அவ்வளவு பெரிய கடற்கரையில் சூர்யாவின் கண்கள் தியாவை தேடி கண்டுபிடித்து இருந்தது…

சூர்யாவின் கால்கள் தானாக தியா இருக்கும் பக்கம் செல்ல… அவனைக் கூப்பிட்டுக் கொண்டே பின்னால் சென்ற தினேஷ், தியா கொஞ்சம் தூரத்தில் நிற்பதைப் பார்த்ததும், டீசன்டாக ஒதுங்கிக் கொள்ள…

சூர்யா, தியாவின் பார்வைக்கு தென்படாத தூரத்தில் நின்றுகொண்டு, அவள் அலைகளோடு விளையாடுவதை பார்த்துகொண்டிருந்தான்…

கொஞ்ச நேரம் அலைகளின் கைகளில் சிக்காமல் ஆட்டம் காட்டியவள்,
பிறகு, “இந்தா கொஞ்சமாய் நனைத்துக்கொள்…” என்று பாதத்தை மட்டும் கொடுத்தாள்.

மாலை நேர வெயில் அவளது கால் கொலுசில் பட்டு மின்ன,
சூர்யாவுக்கு இதயமே அவனை விட்டு நழுவிப் போய் இருந்தது…

ஆசையாய் தன் மொபைலை எடுத்தவன், அவளது பாதங்களை பொக்கிஷமாய் போட்டோ எடுத்து வைத்துக் கொண்டான்…

இரவு வெகு நேரம் சென்று வீடு திரும்பியவனை, “என்னடா சூர்யா…? இவ்வளவு லேட்டு…! ஒரு கால் ஆச்சும் பண்ணிருக்கலாம்ல…? என்று அவன் அம்மா கேட்க…

சூர்யா தியாவையே நினைத்துக்கொண்டு இருந்ததினால், அவன் அம்மா கேட்டது கூட காதில் விழாமல் சிரித்துக்கொண்டே கேட்டை பிடித்துக்கொண்டு நிற்க…

“ஐயோ… ராத்திரி நேரத்தில எங்கேயும் போகாதன்னு சொன்னா கேட்கிறானா…? இப்ப எந்த மோகினிய பார்த்தானோ தெரியலையே…?? சிரிச்சுகிட்டே வேற இருக்கான்…!? நாளைக்கு கூப்பிட்டு போய் மந்திரிக்கணும்…!!” என்ற அவனது அம்மா அவனை இழுத்துக் கொண்டு வீட்டினுள்ளே சென்றார்.

நைட் எல்லாம் தூங்காமல் அந்த போட்டோவையே ஜூம் செய்து பார்த்துக் கொண்டிருந்தான் சூர்யா… அதையே ஸ்கிரீன் சேவர் -ஆக செட் செய்தவன், போனை லாக் செய்து அன்லாக் செய்து பார்த்துக் கொண்டிருக்க…

அவனது அப்பா தண்ணீர் குடிக்க எழுந்து போவதை பார்த்தவன், ஃபோனை வைத்துவிட்டு தூங்கலானான்.


காலேஜில் கல்ச்சுரல்ஸு -க்கான அறிவிப்பு வந்திருந்தது… எல்லோரும் அவரவர் விருப்பப்பட்ட நிகழ்ச்சிகளுக்கு பெயர் கொடுக்க… சூர்யாவை அவனது நண்பர்கள் பாட சொல்லி நச்சரித்தனர்…

சூர்யாவுக்கு பெருசாக பாடுவதிலெல்லாம் ஆர்வம் இல்லை என்றாலும், அவனது குரலை கேட்டவர்கள், அவனைப் புகழ்ந்து தள்ளி விடுவார்கள்… அவ்வளவு நல்ல குரல் சூர்யாவுக்கு…

சூர்யா முடியாது என்று மறுக்கவும், தினேஷ், “சூர்யா…! ஏதாச்சும் சாங் பாடி தியா வ இம்ப்ரெஸ் பண்ணிடு டா… இதுதான் நல்ல சான்ஸ் உனக்கு…!!” என்று கூறவும்…

“அதுவும் நல்ல யோசனை தான் -ல…! ஆனா நான் பாடினா, யாரும் சிரிக்க மாட்டாங்கல்ல…?” என்று சூர்யா கேட்க…

“அட பாவி…! உன் வாய்ஸ் எனக்கு இருந்தா, இந்நேரம் டிவி ஷோ -ல பாடி வீடு ஜெயிச்சு இருப்பேன்…!! கேட்கிற எங்களுக்கு தெரியாதா…? நல்லா இருக்கா இல்லையான்னு…! நீ பாடுறா மச்சான்… தியா உனக்கு தான்…” என்று தினேஷ் கூற…

“நண்பேன்டா…!!” என்ற சூர்யா,
“டேய் சாங் -ல என் பேர் போட்டுக்கோ…” என்றான்.


ஆடிட்டோரியம் ஸ்டூடண்ட்ஸால் நிரம்பியிருக்க, மைக் முன்னால் நின்றிருந்தான் சூர்யா…

அவனது நண்பர்கள் எவ்வளவு கேட்டும் என்ன பாட்டு பாட போகிறான் என்று அவன் சொல்லவே இல்லை… எல்லோரும் ஆவலாய் அவனைப் பார்த்துக் கொண்டிருக்க… அவனோ தியாவை தேடிக்கொண்டிருந்தான்… சூர்யா அங்கிருந்து தினேஷை முறைக்க…

“அவ வந்துடுவா…! நீ ஸ்டார்ட் பண்ணு டா…!!” என்று தினேஷ் சைகையில் கூற…

தியா இல்லாமல் எதற்காக பாட வேண்டும் என்று மேடையை விட்டு சூர்யா கீழே இறங்கப்போக…

அப்போதுதான் ஆடிட்டோரியத்தில் நுழைந்தாள் தியா… நுழைந்தவள் ஸ்டேஜை பார்க்காமல், மொபைலில் ஏதோ பார்த்துக்கொண்டே சென்று இருக்கையில் அமர்ந்தாள்…

விழி மூடி யோசித்தால்…
அங்கேயும் வந்தாய்…
முன்னே முன்னே…

சூர்யா பாட ஆரம்பிக்க…
ஆடிட்டோரியமே அதிர ஆரம்பித்திருந்தது…

சூர்யா ஒவ்வொரு வரியையும் உணர்ந்து தியாவையே பார்த்து பாடிக்கொண்டிருக்க, பாடலை கேட்டு நிமிர்ந்த தியா, “பரவால்லயே…! இவன் பாட்டெல்லாம் நல்லாதான் பாடுறான்…!!” என்று நினைக்க…

பக்கத்தில் உட்கார்ந்திருந்த அவளது கிளாஸ்மேட் ரம்யா, “தியா… அந்த பையன் உன்னையே பார்த்து பாடுற மாதிரி இருக்கே…? என்னடி லவ் பண்றானோ…??” என்று கேட்டுவிட்டு சிரிக்க…

தியாவுக்கு சுர்ரென்று கோபம் வர, “ஏய்… லூசா ரம்யா நீ…? இங்க கல்ச்சுரல்ஸ் தான நடக்குது…?? ஸ்டேஜ் -ல யாராச்சும் பெர்ஃபோர்ம் பண்ணா, நம்மள பார்த்து தான் பாடுறாங்கன்னு அர்த்தமா…??” என்று கூறி தியா ரம்யாவை முறைக்க…

“நீயே பாரேன்… அவன் பாட ஸ்டார்ட் பண்ணதுல இருந்து… அவன் கண்ணு உன்னை தவிர, வேற எங்கேயும் பாக்கல… கன்ஃபார்மா இது லவ் தான்…!!” என்று சொல்லிவிட்டு ரம்யா மீண்டும் சிரிக்க…

தியா திரும்பி ஸ்டேஜில் பாடிக்கொண்டிருந்த சூர்யாவை பார்க்க…

அவன் ரம்யா சொன்னபடியே, அவளையே தான் பார்த்துக்கொண்டிருந்தான்…

“நான் சொன்னேன்ல…??” என ரம்யா சொல்ல…

தியா சட்டென எழுந்து ஆடிட்டோரியத்தை விட்டு வெளியே சென்றாள்.


கொலுசு ஒலிக்கும்…


Comments

0 comments

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy