செய்திகள்,கதைகள், விமர்சனங்கள்

Ep – 3 உன் பாத கொலுசாய்

2,931

உன் பாத கொலுசாய்…
EPISODE – 3
Written by
Saipriya.A


யோசித்துக்கொண்டே இருந்த ரிஷியை அஷ்வின் அழைக்கவே, “என்னதான்டா? நிம்மதியா யோசிக்கக்கூட விட மாட்டியா?” என்று சலித்துக் கொண்டான் ரிஷி.

“மச்சி, நீ உன் தியாவை பத்தி யோசிக்க ஸ்டார்ட் பண்ணா நாள், கிழமை, வருஷம்லாம் கூட மறந்திடுவே… ஆனா, அது என் stomachக்கு தெரியுமா சொல்லு? அதுக்கு தெரிஞ்சதெல்லாம் பசி தாண்டா…!

“ஹேய், அப்புறம் யோசிக்கலாம் டா stomachஅ முதல்ல ஃபில் பண்ணுவோம்…” என்ற அஷ்வின் ரிஷியின் பதிலைக் கூட எதிர்பாராமல் அவனை இழுத்துக் கொண்டு போக ஆரம்பித்திருந்தான்.

“டேய்… விடுடா… நானே வரேன்…” என்ற ரிஷி, தியாவைப் பற்றி யோசித்துக்கொண்டே கேன்டீனுக்கு வந்திருந்தான்.

அங்கு தியா அமர்ந்திருப்பதைப் பார்த்த ரிஷி வேகமாக அவள் இருக்கைக்கு முன்னே இருந்த இருக்கையில் சென்று அமர்ந்தான்.

சாப்பாடு அங்கே செல்ஃப் சர்வீஸ் தான் என்பதால், ரிஷிக்கும் சேர்த்து அஷ்வினே தட்டில் உணவை எடுத்துக்கொண்டு வந்தான்.

வந்தவன் ரிஷியை காணாமல் தேட, தட்டுகளை கஷ்டப்பட்டு சுமந்தபடியே கால் செய்தான் ரிஷிக்கு…

“தேவதை….
அவள் ஒரு தேவதை…
அழகிய பூமுகம் காணவே… ஆயுள்தான் போதுமோ…”

ரிங்டோன் எங்கோ பக்கத்தில்தான் கேட்பது போல் இருக்கவே, சுற்றும் முற்றும் பார்த்தவன் தியாவையே கண்ணிமைக்காமல் பார்த்தபடி உட்கார்ந்திருந்த ரிஷியை கண்டான்.

ரிஷியோ தியாவை பார்த்ததும் பேச வந்ததை மறந்து, அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். அவன் மொபைல் ரிங்டோனோ அவனுக்கு பிஜிஎம்மாய் ஒலிக்க, அந்த நொடிகளை கலைக்க அவனுக்கு மனம் வரவில்லை.

தியா குனிந்த தலை நிமிராமல், தன் மொபைலை பார்த்தபடியே சாப்பிட்டுக் கொண்டிருந்தாள். எதிரில் ஒருவன் அமர்ந்து அவளையே மெய்மறந்து பார்த்துக் கொண்டிருப்பதை அவள் உணரவில்லை.

அஷ்வின் மீண்டும் மீண்டும் கால் செய்து, ரிஷியின் கவனத்தை இந்த உலகத்திற்கு கொண்டு வர முயன்று கொண்டிருந்தான்.

தொடர்ந்து மொபைல் அதிரவே, கனவிலிருந்து மீண்ட ரிஷிக்கு, அப்போதுதான் தியா தன் மேல் கோபமாய் இருப்பது நினைவுக்கு வர…

“தியா…” என்று அழைத்தான். நிமிர்ந்தவளைப் பார்க்காமல் வேகமாக, “என்ன மன்னிச்சிடுங்க தியா… காலையில, நான் பண்ணது ரொம்ப தப்பு… ஏதோ தெரியாம பேசிட்டேன்… ப்ளீஸ் தியா… வெரி சாரி தியா…” என்று பேசிக்கொண்டே போக…

தியாவுக்கோ அப்போதுதான் காலையில் நடந்த நிகழ்வே ஞாபகம் வர, “ஹையோ… இல்ல ரிஷி, நீங்க சாரி லாம் சொல்ல வேணாம்… ஆக்சுவலி, நான்தான் காலையில ஏதோ மூட் அவுட் ல அப்படி பேசிட்டேன்… வெரி சாரி ரிஷி… ஐ டின்ட் மீன் டு ஹர்ட் யூ…” என்று கூற…

“சரி இப்போது நாம் என்ட்ரி கொடுக்கலாம்… இல்லன்னா இவங்க ரெண்டு பேரும் மாத்தி மாத்தி சாரி சொல்லிட்டே இருப்பாங்க போல… பசி வேற உயிர் போகுது…” என்று நினைத்த அஷ்வின் அவர்கள் இருந்த டேபிளில் சென்று அமர்ந்தான்.

அஷ்வினை பார்த்ததும்தான் அவனை விட்டுவிட்டு தியாவை பார்த்ததும் இங்கேயே செட்டில் ஆனது நினைவுக்கு வந்தது ரிஷிக்கு…

ரிஷி விழிப்பதை பார்த்த அஷ்வின், “சாரி மச்சான்…” என்று ரிஷி ஆரம்பிப்பதற்குள், “மச்சான்… என்ன இப்போ? எனக்கு சாரி சொல்லி டைம் வேஸ்ட் பண்ணனுமா…?? சாப்பிட விடுடா முதல்ல…” என்று அவன் முன் பிளேட்டை வைத்தான் அஷ்வின்.

“அப்புறம் மச்சான்… இன்னிக்கு உன் ஆள் கூட ஒரே டேபில்ல… எதிர் எதிர்ல சாப்பிட போறே… ம்ம்… ம்ம்ம்…” என்று அஷ்வின் மெதுவாக ரிஷியிடம் முணுமுணுக்க…

ரிஷி அஷ்வினை முறைக்கலானான்…

அமைதியாக சாப்பிட்ட தியாவை பார்த்துக்கொண்டே ரிஷி தட்டில் கோலம் போட்டுக் கொண்டிருக்க, “ஹையோ… இதுக்கு தான்… லவ் பண்றவன் கூட சுத்துறது கொடுமைனு சொல்றாங்க போல…” என்று நினைத்த அஷ்வின் தான் சிங்கிளாக இருக்கும் விதியை நொந்தபடி உண்டு முடித்தான்…

சீக்கிரம் சாப்பிட்டு முடித்து தியாவே அங்கிருந்து கிளம்பி விட, ரிஷி தனக்குள்ளாகவே சிரித்தபடி அங்கேயே உட்கார்ந்திருக்க…

“டேய்… தியா போய் பத்து நிமிஷம் ஆச்சுடா… சோதிக்காதிங்கடா என்னைய…!” என்ற அஷ்வின் ரிஷியை அழைத்துக்கொண்டு அவர்கள் இருக்கும் கேபினுக்கு செல்ல முயல…

ரிஷியோ, “நாம எங்கடா இந்தப் பக்கம் போறோம்..? நாம அந்தப் பக்கம் தான போகணும்…??” என்று தியா கேபினுக்கு செல்லும் வழியை காட்ட…

“ஓவரா பண்ற டா…” என்ற அஷ்வின், “சரி மச்சான்… நீ அப்படியே போ… உன் வேலை போச்சுன்னா… அப்புறம் தியாவை பார்க்க முடியாது… சொல்லிட்டேன்…!” என்று கரெக்டாக பாய்ண்ட்டை பேச…

“சே சே… அந்த அளவுக்கெல்லாம் ஆபிஸ் டைம்ல லவ் மூட்கு போக மாட்டேன்… வா மச்சான்… நம்ம பிரேக்கில் வந்துக்கலாம்…” என்றபடி ரிஷி அவன் கேபினுக்கு சென்றான்…

“சரி ஒரு வழியா உன் ஆள் கூட சமாதானமாகிட்ட… நெக்ஸ்ட் என்ன…? ப்ரோபோசல் தானே….??” என்று அஷ்வின் கேட்க…

“டேய்… வேலை நேரத்துல என்ன நீ unwantedஆ பேசிகிட்டு இருக்கே…? ஒழுங்கா வேலைய பாரு… என்ன டென்ஷன் பண்ணாத….” என்ற ரிஷி சீரியசாக அவன் வேலையை பார்க்க…

“இது உனக்கு தேவையா…? தேவைதான்…! தேவைதான்…! என்று அஷ்வின் அலுத்துக் கொண்டே தன் வேலையை பார்க்கலானான்…


கொலுசு ஒலிக்கும்…


Comments

0 comments

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy