செய்திகள்,கதைகள், விமர்சனங்கள்

Ep – 13 உன் பாத கொலுசாய்

3,603

உன் பாத கொலுசாய்…
EPISODE – 13
Written by
Saipriya.A


முகத்தை நார்மலாக வைத்துக்கொண்ட சூர்யா, அவனது நண்பர்கள் அமர்ந்திருந்த இருக்கைக்கு அருகில் சென்றான். எல்லோரும் ஜாலியாக பேசி சிரித்துக் கொண்டிருக்க, சூர்யா நண்பர்களுக்கு இடையில் சென்று அமர்ந்தான்.

அங்கிருந்த ஒரு பெண்ணை, ‘ஒரு ஹெல்ப்’ என்று தனியாக அழைத்துக் கொண்டு சென்றவன், “என்கிட்ட க்ளோசா பேசுற மாதிரி நடிக்க முடியுமா…? பிளீஸ்…??” என்று கேட்க,

“என்ன லவ் மேட்டரா…? கண்டிப்பா பண்றேன்… ஆனா கொஞ்சம் செலவாகுமே…” என்று இழுக்க…

“என்ன வேணுமோ கேளு….”, என்று சூர்யா கேட்க…

“நிறைய சாக்லேட்… டைரிமில்க் வாங்கி கொடுத்துடு சூர்யா… வேற எதுவும் கேட்கமாட்டேன்…!!” என்று அவள் சொல்ல…

“டீல்…” என்றவன் அவளுடன் மறுபடி வந்து ஸ்டேஜுக்கு பக்கத்தில் நின்றுகொண்டு, ரொம்ப சீரியஸாக பேசுவது போல் நடிக்க…

ரொம்ப நேரமாய் கண்டுகொள்ளாமல் இருந்த தியா, தற்செயலாக ஒருமுறை பார்த்து விட, அவள் சட்டென முகத்தை திருப்பிக்கொள்வதை பார்த்த சூர்யா, “யெஸ்… சக்ஸஸ்…!!” என்று சந்தோசமாய் கூச்சலிட…

“நீ கண்டின்யூ பண்ணு மா…!” என்று அவளை இன்னும் கொஞ்ச நேரம் இப்படியே சிரித்து பேச சொல்லி கூற…

அங்கு தியாவுக்கோ, “சே…!! இவனுக்கு என்ன கொஞ்சம் கூட டீசன்ஸியே இருக்காதா…? பிரண்டுக்கு மாப்பிள்ளைத் தோழனா வந்துட்டு, அந்த வேலையை விட்டுட்டு, பொண்ணுங்க கூட வழிய போயிட்டான்…!! என்ன புத்தியோ…?!” என்று தோன்ற, அதற்குப் பிறகு மறந்தும் தியா அவன் இருக்கும் பக்கம் பார்க்கவில்லை…

சூர்யா வெகுநேரமாய், ‘தியா பார்ப்பாள்’ என்று எதிர்பார்த்து நிற்க அவள் பார்த்தால் தானே…?

“ம்க்கும்… சரியான கல்நெஞ்சகாரி…! என்ன நினைக்கிறான்னு கூட கண்டு பிடிக்க முடியல…” என்று சலித்துக் கொண்டவன்…

“சரி போதும் நடிச்சது… சாக்லெட் நாளைக்கு காலையில வாங்கி தர்றேன்…” என்று அந்த பெண்ணை அனுப்பினான்…

மறுபடியும் மேடைக்கே போய் நிற்கலாம் என்று போனவன் அங்கு தியா இல்லாததை பார்த்ததும், அவள் எங்கே என்று பவியிடம் கேட்க…

“ஃபிரண்ட்ஸோட சாப்பிடப் போனா… இப்ப வந்துடுவா…” என்றாள் பவி.

ரொம்ப நேரம் ஆகியும் அவள் வராமல் போக, சூர்யா தியாவை தேடிக்கொண்டு போனான்.

தியா மண்டப வாசல் அருகில், தன் தோழிகளுடன் நிற்பதை பார்த்த சூர்யா, அவர்கள் பேசுவதை வைத்து, அவளது கொலுசு கழன்று விழுந்து காணாமல் போனதை அறிந்தான்.

அவளும் அவள் தோழிகளும் அதைத் தேடிக் கொண்டிருக்க… அங்கிருந்து கிளம்பிய சூர்யா, கடை தெரியாமல் போனாலும், அக்கம்பக்கத்தில் போனவர்களை விசாரித்து, கூகுள் மேப்பை நோண்டி, நகைக் கடையைக் கண்டுபிடித்து, ஒரு வழியாய் கொலுசு வாங்கி கொண்டு மண்டபத்திற்கு திரும்பினான்.

போட்டிருந்த ஒற்றை கொலுசை கழற்றி கையில் வைத்துக் கொண்டு, தியா கொலுசை தேடிக்கொண்டிருக்க… அவளது மீதி தோழிகளை சூர்யா போக சொல்லி சைகையால் சொல்ல… அவர்கள் சென்றபின் தியாவை அழைத்தான் சூர்யா.

குரல் கேட்டு திரும்பியவள், எதிரில் சூர்யா நிற்பதை பார்த்ததும்… ஒரு நொடி திகைக்க… அடுத்த நொடியே அடக்கிவைத்த மொத்த கோபமும் வார்த்தைகளாய் வெளியேற ஆரம்பித்திருந்தது.

“என்ன இது…?” என்று தியா முறைத்துக் கொண்டே கேட்க…

“உன் கொலுசு தொலைஞ்சிடுச்சு -ல…? அதான் வாங்கிட்டு வந்தேன்…!” என்று சூர்யா சொல்ல…

“எனக்கு கொலுசு வாங்கி கொடுக்க நீ யார்…?” என்று தியா கேட்க…

திகைத்துப்போன சூர்யா, “ஏன்…? நான் வாங்கித் தரக் கூடாதா…??” என்று பதிலுக்கு கேட்க…

“ஆமா… தரக் கூடாது…” என்று முகத்தில் அடிப்பது போல் சொன்ன தியா அங்கிருந்து கோபமாக செல்ல…

“நில்லு தியா…” என்று சூர்யா கூப்பிட, அவன் சொல்வதையே காதில் வாங்காமல் தியா செல்ல…

“உன்கிட்ட என் மனசுல இருக்குறத சொல்லணும்… நில்லு ப்ளீஸ்…!!” என்றான் சூர்யா.

“எல்லா பொண்ணுங்க கிட்டயும் இதேதான் சொல்லுவியோ…??” என்று கேட்ட தியா அந்த இடத்தை விட்டு நகர…

“என்ன பேசுற நீ…??” என்று அவள் போவதற்குள் அவளை தடுக்க நினைத்த சூர்யா, தியாவின் கையை பிடித்து நிறுத்த…

எங்கிருந்துதான் அவ்வளவு கோபம் வந்ததோ தெரியவில்லை தியாவிற்கு… சட்டென கைகளை உதறியவள், அடுத்த கணம் சூர்யாவின் கன்னத்தில் அறைந்திருந்தாள்…

அதை சற்றும் எதிர்பாராததால் திகைத்துப்போன சூர்யா, அப்படியே அசையாமல் தியாவை பார்த்துக் கொண்டே நிற்க…

“எல்லா பொண்ணுங்களும் ஒரே மாதிரி தான் -னு நினைச்சியா…?? என்ன திமிர் இருந்தா இப்படி நடந்துப்ப…? கொஞ்சம் கூட டீசென்ஸி இல்ல…??” என்று தியா திட்டிக் கொண்டிருக்க…

அப்போதுதான் சூர்யாவிற்கு அவனது தவறு புரிய, “சாரி தியா…!! நா வேணும்னே பண்ணல…” என்று சூர்யா சொல்லிக் கொண்டிருக்கும் போதே…

“நான் உன்ன பாக்க கூட விரும்பல…” என்று சொன்னவள், கோபமாக மண்டபத்தை விட்டு வெளியே வந்தாள்.

சூர்யா அவள் பின்னாலே போக…
தியா, “லீவ் மீ அலோன்…!!” என்று சொல்லிவிட்டு, சாலையை கடந்து வேகமாக போக…

அவளை நோக்கி சாலையில் வரும் லாரியை கவனிக்காமல் தியா போவதை பார்த்த சூர்யா, வேகமாக ஓடிச்சென்று அவளை தள்ளி விட்டான்.

நடந்தது என்னவென்று சுதாரிப்பதற்குள் எல்லாம் முடிந்து விட, ரத்தவெள்ளத்தில் இருந்தான் சூர்யா…

கீழே விழுந்தவனை சுற்றி கும்பலாய் மக்கள் சூழ்ந்து கொள்ள, தியா எழுந்துவந்து அவனை பார்த்து திகைத்துப் போய் நிற்க…

அதற்குள் யாரோ ஆம்புலன்ஸுக்கும் கால் செய்து விட, அசைவற்று இருந்த சூர்யாவை ஏற்றிக்கொண்டு ஆம்புலன்ஸ் ஹாஸ்பிடலுக்கு விரைந்தது.

சத்தம் கேட்டு மண்டபத்தில் இருந்து வந்த நண்பர்கள் என்ன நடந்தது என்று தியாவை கேட்க…

தியா ஒன்றுமே பேசாமல் அசைவற்று நின்று கொண்டிருக்க… அதற்குள் அங்கு ஆக்ஸிடெண்ட்டை நேரில் பார்த்தவர்கள், “இந்த பொண்ண காப்பாத்த போய் தான்… பாவம்… அந்த பையனுக்கு இப்படி ஆயிடுச்சு…!” என்று பேசிக் கொண்டிருக்க… கேட்டுக் கொண்டிருந்த தியாவின் கண்களில் கண்ணீர் வழிய ஆரம்பித்தது.

சூர்யாவை அட்மிட் செய்திருந்த ஹாஸ்பிடலுக்கு போன அவனது நண்பர்கள், அவனுக்கு ரத்தம் தேவைப்பட்டதால், மண்டபத்திற்கு கால் செய்து, விபரத்தைக் கூறி, அதே பிளட் க்ரூப்பில் இருப்பவர்களை மட்டும் வர சொல்ல…

“நானும் போறேன்…” என்று தினேஷ் கிளம்ப…

“வேணாம் மச்சான்… நாளைக்கு மார்னிங் கல்யாணத்த வச்சிக்கிட்டு நீ வர வேணாம்… நாங்க பார்த்துக்குறோம்…!” என்று அவனை கஷ்டப்பட்டு சமாதானப்படுத்தி விட்டு மீதி நண்பர்கள் கிளம்பினர்.

“நிறைய பிளட் போயிருக்கு… கோமாவுக்கு போயிட்டாரு… வீட்டுக்கு இன்ஃபார்ம் பண்ணிடுங்க…” என்று டாக்டர் சொன்னதை கேட்ட நண்பர்கள், மண்டபத்திற்கு கால் செய்து தகவலை கூற…

அதைக்கேட்ட தியாவால் அழுகையை கட்டுப்படுத்த முடியவில்லை…

அவளது நண்பர்கள், நடந்ததற்கு அவள்தான் காரணம் போல, அவளைப் பார்க்க… ஏற்கனவே நொந்து போயிருந்த தியா, அங்கிருந்து ஒரு முடிவுடன் கிளம்பினாள்.

வீட்டிற்கு வந்தவளிடம், “என்ன ஆச்சு மா…?” என்று மாறி மாறி அவள் அம்மாவும் அப்பாவும் கேட்க…

“ஜாயினிங் டேட் வந்துடுச்சு…” என்று சொல்லி சமாளித்தவள், யாருக்கும் சொல்லாமல், கம்பெனி அட்ரஸுடன் கிளம்பி விட்டாள்.

பக்கத்தில் ஒரு அபார்ட்மெண்டில் வீடு கிடைத்ததும் அங்கு குடிபெயர்ந்தவள், எவ்வளவோ கூப்பிட்டும் சொந்த ஊருக்கே திரும்பி செல்லவில்லை.

அவளது நண்பர்களுக்கும் அவள் எங்கு இருக்கிறாள், என்ன செய்கிறாள், என்பது பற்றிய ஒரு தகவலும் கிடைக்கவில்லை.

தினமும் சூர்யாவை நினைத்து அழுதாலும், அவனைப் பற்றி தெரிந்து கொள்ளும் தைரியம் தியாவுக்கு வரவே இல்லை…

ஒருவேளை சூர்யா உயிரோடு இல்லாவிட்டால்…? நினைக்கும்போதே இன்றும் ஒருவித நடுக்கம் பரவும்.

தெய்வத்திடம் அவளின் ஒரே வேண்டுதல் சூர்யாவுக்கு ஒன்றும் ஆக கூடாது என்பது மட்டும்தான்…

தியா சொல்லி முடிக்கும் வரை அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்த ரிஷி, “தப்பு பண்ணிட்டீங்க தியா…!” என்று கூற…

தியா கண்களில் கண்ணீருடன், “நீங்களுமா…?” என்று ரிஷியை நிமிர்ந்து பார்த்தாள்.


கொலுசு ஒலிக்கும்…


Comments

0 comments

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy