உன் பாத கொலுசாய்…
EPISODE – 15
Written by
Saipriya.A
தியா காலையிலிருந்து பத்தாவது முறையாய் ரிஷிக்கு கால் செய்தாள். ‘நீங்கள் அழைக்கும் வாடிக்கையாளர் தொடர்பு எல்லைக்கு வெளியில் இருக்கிறார்’ என்று மொபைலும் பத்தாவது தடவையாக சொன்னது…
“ரெண்டு நாள்ல வந்திடறேன்னு தான சொல்லிட்டு போனான்…! இன்னிக்கு மூணாவது நாள் ஹைதராபாத் போய்… நடுவுல ஒரு கால் பண்ணல… மெசேஜ் கூட பண்ணல… அப்படி என்ன 24 மணி நேரமுமா பிசியா இருக்கான்…? வரட்டும்… இருக்கு அவனுக்கு…!!” என்று மனதிற்குள் திட்டி தீர்த்துக் கொண்டிருக்க…
காலிங் பெல் அடிக்க, தியா சென்று கதவைத் திறந்தாள்… அங்கே ரிஷி ரொம்ப சோர்வாய் நின்றிருந்தான்.
“ரிஷி… இப்ப தான் வந்தியா…? கால் எடுக்கல…? மெசேஜ் பண்ணல… என்னாச்சு -ன்னு யோசிச்சிட்டே இருந்தேன் தெரியுமா…? போ நான் உன் கூட பேச மாட்டேன்…!” என்று தியா முகத்தை கோபமாய் திருப்பிக்கொள்ள…
அவள் முகத்தை தன் பக்கம் திருப்பியவன், “ஹாப்பி பர்த்டே தியா…!!” என்றான்.
தியா ஷாக்கானது அவள் முகத்திலேயே நன்றாக தெரிய, “ரிஷி… உனக்கு தெரியாதுன்னு நினைச்சேன்…!?” என்று சொல்ல…
“அது எப்படி…? என் ஃபிரண்டோட பர்த்டே கூட எனக்கு தெரியாம இருக்குமா…? நம்ம ஃபிரண்ட்ஸ் ஆனதுக்கு அப்புறம் வர்ற ஃபர்ஸ்ட் பர்த்டே ஆச்சே…??” என்று ரிஷி கூற…
“நீ ரெண்டு நாள்ல வரேன்னு சொல்லிட்டு போய், மூணு நாள் ஆகுது… காலை -லயும் கால் பண்ணி விஷ் பண்ணல… அதான் உனக்கு தெரியாது -ன்னு நினைச்சேன்…!” என்று தியா முகத்தை உம்மென்று வைத்துக்கொண்டு சொல்ல…
“சரி விடு… அதான் நேர்ல வந்தே விஷ் பண்ணிட்டேன் -ல…? அப்புறம் ஏன் இன்னும் கோவமா இருக்க…? கொஞ்சம் சிரியேன் தியா…??” என்று ரிஷி சொல்ல, தியா கொஞ்சமாய் சிரிக்க…
“கொஞ்சம் -னா கொஞ்சம் தான் சிரிக்கணுமா…? நல்லா தான் சிரியேன்…!!” என்று ரிஷி மறுபடியும் தியாவை வம்புக்கு இழுக்க…
“பர்த்டே அதுவுமா அடி வாங்காத ரிஷி…!” என்று சிரித்துக்கொண்டே சுட்டுவிரல் நீட்டி தியா எச்சரிக்க…
“சரி சரி… கோபப்படாத… ட்ராவல் பண்ணதுல ரொம்ப டயர்டா இருக்கு… லக்கேஜ வச்சிட்டு, குளிச்சிட்டு வந்துடுறேன்… நாம சேர்ந்து சாப்பிடலாம்…!!” என்று ரிஷி கூற…
“ஓகே ரிஷி…!” என்றவள், அவன் போனதும் கதவை லாக் செய்து விட்டு, சோபாவில் அமர்ந்து ரிஷிக்காக வெயிட் செய்ய ஆரம்பித்தாள்.
காலையிலிருந்து தியாவுக்கு யார் விஷ் செய்தாலும், ரிஷி இன்னும் விஷ் செய்யவில்லை என்று தான் அவளுக்கு தோன்றிக் கொண்டே இருந்தது…
“ஒருத்தவங்க அவ்வளவு சீக்கிரம் நம்ம லைஃப்ல இம்பார்ட்டண்ட் ஆக முடியுமா…?” என தியா வியந்து கொண்டிருக்க…
காலிங்பெல் அடிக்கும் சத்தம் கேட்க, ‘அதுக்குள்ளவா ரிஷி வந்துட்டான்?’ என்று ஆச்சரியப்பட்டுக் கொண்டே கதவை திறந்தவள், அதிர்ந்து போய் அசைவற்று நின்றிருக்க…
“என்ன தியா…? அப்படி பார்க்குற…??” என்று சிரித்துக்கொண்டே அங்கே சூர்யா நிற்க…
அவள் கண்களையே அவளால் நம்ப முடியவில்லை…
எதிரில் நிற்பது அவளது இத்தனை நாள் கனவு…!
கண்களில் இருந்து கண்ணீர் கோடாய் கன்னத்தில் இறங்கிக் கொண்டிருக்க… ‘எங்கே கண்களை மூடினால் மறைந்து விடுவானோ…?’ என்று கண் சிமிட்டாமல் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள் தியா…
அவள் கண்களில் கண்ணீரைப் பார்த்து சூர்யாவின் கண்களும் கலங்க,
வெளியேறிய கண்ணீரை, அவள் அறியாவண்ணம் வேறு பக்கம் திரும்பி உள்ளிழுத்துக் கொண்டவன்,
” ஏய்… எதுக்கு அழற…? நான் நல்லா தான இருக்கேன்…! எனக்கு ஒன்னும் ஆகல பாரு…!!” என்று சூர்யா தியாவைத் தேற்ற முயல…
அழுது கொண்டே வீட்டிற்குள் சென்ற தியா, சோபாவில் தன் முகத்தை புதைத்துக் கொண்டு அழ ஆரம்பித்தாள்…
“நா உன்ன பாக்க வந்தது பிடிக்கலையா…? சாரி தியா… ப்ளீஸ் அழாத…!! என்று சூர்யா சொல்ல…
நிமிர்ந்தவள், “நீ ஏன் சூர்யா சாரி சொல்ற…? நான்தானே எல்லாத்துக்கும் காரணம்…? என்னால தான உனக்கு அப்படி ஆச்சு…??” என்று அழுதுகொண்டே கேட்க…
அவளை தடுத்த சூர்யா, “உன்மேல எந்த தப்பும் இல்ல…! சரியா…? நீயா என்ன தள்ளிவிட்ட…? அப்புறம் அதுக்கு ஏன் நீ பீல் பண்ற…?? நான் இப்போ நல்லாவே இருக்கேன்…! இன்னும் எதுக்கு நீ ஃபீல் பண்ற…? அழாத… கண்ணை தொடச்சுக்கோ…!!” என்றான்.
“நான் உன்ன ரொம்ப ஹர்ட் பண்ணிட்டேன் -ல…??” என்று தியா மீண்டும் கேட்க…
“கண்டிப்பா இல்ல…! அப்படியே நீ திட்டினாலும், நான் உன்மேல கோச்சிக்கவே மாட்டேன்…!” என்று சூர்யா சிரித்துக்கொண்டே சொல்ல…
தியா முகத்தில் அப்போது தான் கொஞ்சமாய் தெளிவு வர, “நீ எதுக்கு, என்ன காப்பாத்த அன்னைக்கு அப்படி பண்ணின…??” என்று தியா கேட்க…
பதில் சொல்லாமல், கொஞ்ச நேரம் அவள் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான் சூர்யா…
சூர்யாவின் வீடு…
சூர்யாவின் எதிரில் ரிஷி உட்கார்ந்திருக்க…
“தியாவை பாக்கணும்னு 2 இயர்ஸா ட்ரை பண்ணிட்டு இருக்கேன் ரிஷி…! அவளோட க்ளோஸ் ஃபிரண்டுக்கு கூட அட்ரஸ் கிடைக்கல… உங்களுக்கு எப்படி தேங்க்ஸ் சொல்றதுன்னே தெரியல… ரொம்ப ரொம்ப தேங்க்ஸ்…!!!” என்று சூர்யா சொல்ல…
“பரவால்ல சூர்யா… தியாவ இதுக்குமேலே என்னால ஃபீல் பண்ண விட முடியாது… அதான்… அவளுக்கு தெரியாம, இங்க வந்துட்டேன்… அவ லைஃபோட ஒரு டிசிஷன், அவ சம்மதம் இல்லாம எடுக்கறேன்…! எனக்கு அவ சந்தோசமா இருக்கணும் சூர்யா…!! அது போதும்… அவ எப்படி ரியாக்ட் பண்ண போறான்னு தெரியல… பட், உங்கள நேர்ல பார்த்தா தான் அவ நார்மல் ஆவா… சோ, என் கூட நீங்க வரதுக்கு, நான் தான் உங்களுக்கு தேங்க்ஸ் சொல்லணும்…!!” என்று ரிஷி சொல்லி முடிக்க…
“சரி ரிஷி… நீங்க தேங்க்ஸ் சொல்லலை -ன்னாலும் நா வருவேன்…! என்று சூர்யா சிரிக்க…
அங்கே இருந்த இறுக்கம் விலகி, நட்பு மலர ஆரம்பித்திருந்தது…
கொஞ்ச நேரம் யோசித்த ரிஷி, “சரி நீங்க தியாவ லவ் பண்ணீங்க தான…? அப்புறம் ஏன் அவ கிட்ட சொல்லவே இல்ல…??” என்று கேட்க…
“சில ரிலேஷன்ஷிப் -க்கு பேரு லவ்னு சொல்லமுடியாது ரிஷி…! லவ் இரண்டு சைடுல இருந்து வரணும்… என்னோடது ஃபியூச்சர் இல்லாத ஒரு ரிலேஷன்ஷிப்… அத சொல்லி, தியாவ இதுக்கு மேலயும் கஷ்டப்படுத்த விரும்பல…!!” என்றான் சூர்யா.
சூர்யா பஸ்ஸில் ஏறி, ஜன்னல் ஓரம் உட்கார்ந்தான்… அவனைப் போலவே நிலாவும் தனியாக பயணம் செய்ய… மொபைலை அன்லாக் செய்தான்…
அதில் தியாவும் அவனும் இருக்கும் குரூப் ஃபோட்டோ வால்பேப்பராக இருக்க, அதையே கொஞ்ச நேரம் பார்த்துக் கொண்டிருந்தவன், “உனக்கே தெரியாம, என் கூடவே தான் எப்போதும் உன் நினைவுகள் இருக்கும்…” என்று நினைத்தவன், மொபைலை லாக் செய்து, பாக்கெட்டில் வைத்துக்கொண்டான்.
“ஏன் என்கிட்ட சொல்லல…?” என்று ரிஷியின் தோளில் சாய்ந்து கேட்டுக்கொண்டிருந்தாள் தியா…
“சொன்னா விட்டு இருப்பியா என்ன…??” என்று தியாவின் மூக்கைப் பிடித்து ஆட்டி ரிஷி கேட்க…
அவன் கையை தட்டி விட்ட தியா, “சரி பர்த்டே பேபிக்கு விஷ் மட்டும்தான் பண்ணுவாங்களா…?” என்று புருவங்களை உயர்த்தி கேட்க…
“எங்க ஊர்ல கண்ண மூட சொல்லிட்டுதான் கிஃப்ட் தருவாங்க…!” என்று ரிஷி பதிலளிக்க…
“சரி…” என்று கண்ணை மூடினாள் தியா.
“ஹாப்பி பர்த்டே தியா…!!” என்று கோரசாய் சில குரல்கள் கேட்க…
ஆர்வமாய் கண்களைத் திறந்தவள், ஸ்கைப்பில் ரிஷியின் பெற்றோர்களை பார்த்ததும் ஷாக்காக…
“தேங்க்ஸ் ஆன்ட்டி…! தேங்க்ஸ் அங்கிள்…!” என்று கூற…
“அத்தை மாமானே கூப்பிடலாம்மா நீ…!! உனக்கு இல்லாத உரிமையா…?” என்று ரிஷியின் அப்பா உளறி விட… தியா திருதிருவென விழிக்க ஆரம்பித்தாள்.
அவரிடம் இருந்த மொபைலை பிடிங்கிய ரிஷியின் அம்மா, “தியா… அவன் உனக்காக ஒரு கிஃப்ட் வாங்கி இருக்கான்… அதை போட்டுட்டு சீக்கிரம் எங்க வீட்டுக்கு வரணும்… ஓகேவா…??” என்று கேட்க…
“ஹான்…. ஓகே ஆன்ட்டி…! ஹான்… வச்சிடறேன் ஆன்ட்டி… பை…!!” என்று குழப்பத்துடன் தியா மொபைலை வைக்க…
எதிரில் ரிஷி முட்டி போட்டிருக்க, கையில் ஒரு சின்ன பாக்ஸுடன், “வில் யு மேரி மீ…?” என்றான்.
அவனைப் பார்த்து சிரித்தவள், “இதுதான் பர்த்டே கிஃப்ட்டா…?” என்றாள்.
“சீக்கிரம் சொல்லுங்க மிஸ் தியா…? வில் யூ பி மை மிஸஸ்…??” என்று ரிஷி கேட்க…
“ஏன் முட்டி வலிக்குதா ரிஷி…??” என்று கேட்ட தியா மீண்டும் சிரிக்க…
“அட…! ப்ரொபோஸ் பண்ணா பதில் சொல்லணும்மா…!! எஸ்…??” என்று கேட்க…
“இல்லன்னா, இவ்வளவு நேரம் சிரிச்சிட்டே இருப்பேனா…??” என்றாள் தியா.
“அத உன் வாயால கேட்க ஆசையா இருக்காதா எனக்கு…? ஹ்ம்ம்… சரி கண்ண மூடு…!” என்று ரிஷி கூற…
“ஓகே… இப்ப call -ல யாரு…? எங்க அம்மா அப்பா வா…??” என்று தியா சிரிக்க…
“முதல்ல கண்ண மூடு தியா…” என்று ரிஷி சொல்ல… கண்ணை மூடியவள் மீண்டும் கண்களை திறந்தாள்.
கால்களில் புது வெள்ளி கொலுசு
மின்ன…
“ஹேய்…! இது என்ன ரிஷி…?? ரிங் -க்கு பதில் கொலுசா…??” என்று தியா கண்களில் சிரிப்பு மின்ன கேட்க…
“ஏன்னா… இதுக்கு தான் உன்ன சிரிக்க வைக்கிற பவர் இருக்கு…!” என்றான் ரிஷி.
நிறைவாய், தியா ரிஷியை கட்டிக்கொள்ள…
கொலுசும் அவர்களை போல் சிரித்தது…
இனி ரிஷியின் வீட்டில் எப்போதும் கொலுசு ஒலிக்கும்…
Comments
0 comments