செய்திகள்,கதைகள், விமர்சனங்கள்

Ep – 4 உன் பாத கொலுசாய்

2,514

உன் பாத கொலுசாய்…
EPISODE – 4
Written by
Saipriya.A


நாட்கள் நகர்ந்தன…

இப்போதெல்லாம் வழக்கம்போல சிரித்த தியா, ரிஷியின் விஷ் க்கு ரிப்ளை ஆக அவளும் விஷ் செய்ய ஆரம்பித்திருந்தாள்…

தியாவை பார்க்கும் சந்தோசத்திலே நாட்கள் இனிமையாக இருந்தது ரிஷிக்கு…

ஒருநாள்…
அந்த சந்தோஷம் கெடுவது போல அன்று தியா ஆபீசுக்கு வராமல் போக…

ரிஷிக்கோ, தியாவுக்கு என்ன ஆனது என்ற கவலையில், உடனே அவளை பார்க்க வேண்டும் போல இருக்க…

ஆபீசுக்கு 1 ஹவர் பர்மிஷன் சொல்லிவிட்டு கிளம்பி விட்டான்…

“தியாவை பார்க்காம ஒருநாள் கூட உன்னால இருக்க முடியலையே…? அவ உன் லவ்வ அக்ஸப்ட் பண்ணலன்னா எப்படி நீ தாங்குவ…??”
என்று ரிஷியின் மனம் அவனிடம் கேட்க, அந்தக் கேள்விக்கு ரிஷியிடம் சுத்தமாக பதில் இல்லை.

நேரே அப்பார்ட்மெண்ட் சென்றவன், அவள் ஃபிளாட்டுக்கு எதிரில் நின்று அழைப்பு மணியை அழுத்த போக…

அவன் சற்றும் எதிர்பாராத விதமாக, தியா கதவை திறந்தாள்…

ரிஷியை பார்த்தவள், “நீங்க எங்க இங்க…? ஆஃபீஸ் இல்லையா உங்களுக்கு…?” என்று கேட்க…

ரிஷி அவள் கேட்பது எதுவும் காதில் விழாமல் அவளையே பார்த்துக்கொண்டு நின்றிருந்தான்.

“ரிஷி…”, என்று அவன் தோளை தொட்டு தியா அழைக்க…

அப்போது தான் கம்பளி போர்வையை சுற்றிக்கொண்டு அவள் நிற்பதை உணர்ந்த ரிஷி, “தியா… என்னாச்சு உங்களுக்கு…? ஆர் யூ ஓகே…??” என்று கேட்க…

“ஒண்ணும் இல்ல ரிஷி… லைட்டா fever தான்… அதான் ஆபீஸ்க்கு கூட லீவ் போட்டுட்டேன்…” என்று சிரித்துக்கொண்டே தியா கூறினாலும், அவள் சோர்வாக இருப்பது புரிய…

“லைட்டா fever-ஆ…? பார்த்தாலே தெரியுது… டேப்லட் போட்டிங்களா…? சாப்டீங்களா…? சரி நான் உள்ளே வரலாமா…? இல்ல இப்படியே வாசலோடு அனுப்புற ஐடியால இருக்கீங்களா…?? என்று ரிஷி கேட்க…

“ஹையோ…! ஐ அம் ரியலி சாரி ரிஷி…! ப்ளீஸ் கம்…!!” என்ற தியா “உட்காருங்க ரிஷி…” என்று ரிஷிக்கு இருக்கையை காட்டினாள்.

“ஹலோ… நான் கெஸ்ட்டா வரல இப்போ… உங்க ஃபிரண்டா வந்து இருக்கேன்…! உங்கள பாத்துக்க… அதனால, நீங்க உட்கார்ந்து ரெஸ்ட் எடுங்க…” என்று அவளை வலுக்கட்டாயமாக உட்கார வைத்த ரிஷி, கிச்சனுக்கு சென்று என்ன இருக்கிறது என்று பார்த்தான்.

திரும்ப வந்தவன், ரசம் வைத்து, அதை சாதத்தில் மிக்ஸ் செய்து, ஒரு பவுலில் ஸ்பூன் போட்டு, எடுத்து வந்து தியாவிடம் கொடுக்க…

பார்த்த தியாவுக்கு, சிரிப்பு சிரிப்பாக வர, விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பித்தாள்…

அவளை முறைத்த ரிஷி, “இப்போ எதுக்கு சிரிக்கிறீங்க…?” என்றான்.

“இல்ல ரிஷி… இந்த வீட்ல, எனக்கு தெரிஞ்சு எதுவும் குழந்தை இல்லையே… அப்புறம் யாருக்கு இப்படி பேபி ஃபுட் ரெடி பண்ணி எடுத்துட்டு வந்து இருக்கீங்க…??” என்று சிரித்துக்கொண்டே சொல்லி முடித்தவள் மீண்டும் சிரிக்க ஆரம்பித்தாள்.

அவள் இவ்வளவு சந்தோஷமாக சிரிப்பதை முதல்முறை பார்த்தவனுக்கு சொல்ல முடியாத அளவுக்கு சந்தோஷம் மனதிற்குள் பொங்கியது…

“ஹ்ம்ம்… இது உங்களுக்குதான்…! நீங்கள் சாப்பிடலன்னு நல்லா தெரியுது பார்த்தாலே… உடம்பு முடியலன்னா கூட என்கிட்ட ஹெல்ப் கேட்க மாட்டீங்களா…? அப்புறம் எதுக்காக நாங்க எல்லாம் ஃபிரண்ட்ஸ்ன்னு இருக்கோம் சொல்லுங்க…? நாளைக்கு எனக்கு உடம்பு சரி இல்லன்னா நீங்க ஹெல்ப் பண்ண மாட்டீங்களா…?? என்று ரிஷி கேட்க…

“ஓஹோ…! அப்ப இது ஃப்யூச்சர் இன்வெஸ்ட்மென்ட்டா…?” கேட்டுவிட்டு தியா மீண்டும் சிரிக்க…

“பரவாயில்லையே… உங்களுக்கு இவ்ளோ ஜோவியலா கூட பேச தெரியுமா…? ஆனா இது தான் தியா உங்களுக்கு நல்லா இருக்கு…!!” என்று கூறிய ரிஷி தியாவின் முகத்தை ஆவலாக பார்த்துக்கொண்டிருக்க…

“ஹ்ம்ம்…” என்று சொன்னவள் அமைதியாக சாப்பிட ஆரம்பித்தாள்.

“இதோ வந்துடறேன்…” என்று கூறிவிட்டு சென்ற ரிஷி, அவன் வீட்டிலிருந்து பாராசிட்டமால் டேப்லெட்டுடன் வந்தான்.

அதற்குள் தியா சாப்பிட்டு முடித்திருக்க, ரிஷியை பார்த்ததும், “தேங்க்ஸ் ரிஷி…! ரொம்ப நல்லா இருந்துச்சு…!!” என்றாள்.

“என்னங்க…? தேங்க்ஸ் மட்டும்தானா…?? எனக்கு ஒரு நாள் fever வந்தா ஹெல்ப் பண்ணனும்…! ஓகே தானே…??” என்று ரிஷி கேட்க…

“உங்க அளவுக்கு இல்லைன்னாலும், ஓரளவு சுமாரான ரசம் வச்சி தரேன்… ஓகே தானே ரிஷி…??” என்று தியா தலை சாய்த்து சிரித்தாள்.

“சோ க்யூட்…!” என்று மனதில் நினைத்தவன், “சரி டேப்லட் போடுங்க…” என்று பாராசிட்டமாலை நீட்ட, அதை தன் கையில் வாங்கியவள், சோஃபாவிலிருந்து எழ முயல…

“என்ன வேணும் சொல்லுங்க தியா…” என்று ரிஷி கேட்க…

ஏனோ தியாவால் அவளது அம்மாவை நினைக்காமல் இருக்க முடியவில்லை…

வீட்டில் இருந்திருந்தால், அவள் அம்மா சீதா அவளை இப்படி தான் தாங்கி இருப்பார். அவள் டேப்லெட் சாப்பிடும்போது ரெடி ஆக சர்க்கரையோடு நிற்பார் அவள் அம்மா.

இப்போது அவள் எழுந்ததும் அதற்காக தான்… தயங்கி தயங்கி ரிஷியிடம், “சர்க்கரை வேணும்… அதான்…” என்று இழுக்க…

“நான் கொண்டுவர்றேன்… என்று கிச்சனுக்கு சென்றவன் சர்க்கரை டப்பாவுடன் வந்தான்.

வேகமாக டேப்லெட்டை விழுங்கியவள் சர்க்கரையை ஸ்பூனில் எடுத்து வாயில் போட்டுக் கொண்டாள்…

அதை பார்த்து சிரித்த ரிஷியின் முதுகில் அடித்தவள், “சரி… நீங்க இப்போ போங்க… இனிமே நான் பார்த்துக்கிறேன்…” என்றாள்.

மனசே இல்லாமல், “சரி ஈவினிங் வந்து பார்க்கிறேன் தியா… டேக் ரெஸ்ட்…” என்று கிளம்பினான் ரிஷி.

சொன்னபடியே ஈவினிங் தியாவின் வீட்டுக்கு சென்று காலிங் பெல்லை ரிஷி அழுத்த, கதவை திறந்தவள், “ஹாய் ரிஷி…!!” என்று கூற…

“இப்போ பரவாயில்லையா…? ஃபீலிங் பெட்டர்…??” என்று கேட்டான் ரிஷி.

“ஓ… ஐ அம் பிலிங் கிரேட்…!!” என்றாள் தியா.

“ரசம் யார் வச்சது…?!” என்று ரிஷி காலரை தூக்கி விட…

“ஆமா ஆமா… ஹிஹிஹி… நீங்க தான் காரணம்…” என்று கிண்டலாக கூறியவளை ரிஷி செல்லமாக முறைத்தான்.

இவ்வளவு
குழந்தைத்தனத்தையும்
எங்கு மறைத்திருந்தாய்
பெண்ணே?

என்று மனதிற்குள் ரிஷி அவளிடம் கேட்டுக்கொண்டிருக்க…

“உள்ளே வாங்க ரிஷி…” என்று தியா அழைத்தாள்.

“ஹப்பா… இப்பவும் நானே கேட்டு உள்ள வரணுமோன்னு நினைச்சேன்… பரவாயில்லையே… மைண்ட் ரீடிங்லாம் தெரியுமா…??” என்று சிரித்துக் கொண்டே ரிஷி கேட்க…

“அட… ஏதோ காலையில கொஞ்சம் டயர்ட்ல சொல்ல மறந்து, வெளியில நிக்க வச்சு பேசிட்டேன்… அதுக்கு போய்… இப்படி கலாய்க்கலாமா…? ஐ அம் வெரி பாவம்… ஸ்மால் கேர்ள்…” என்று முகத்தை க்யூட்டாய் வைத்துக் கொண்டு தியா சொன்னாள்.

போதும் பெண்ணே…
இதை விட
அதிக காரணங்கள் கொடுக்காதே… உன் மேல் இருக்கும் காதல் கடலில்…
இதற்கு மேல் என் மூச்சு முட்டும்…

என்று மறுபடியும் ரிஷி அவன் மனதிற்குள் பேச…

“நா உங்கள உள்ள வர சொல்லி பத்து நிமிஷம் ஆச்சு… நீங்களே தான் இப்போ வெளிய நிக்கறீங்க… சொல்லிட்டேன்…” என்று தியா சொல்ல…

இருவரும் சேர்ந்து சிரிக்க ஆரம்பித்தனர்…


கொலுசு ஒலிக்கும்…


Comments

0 comments

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy