செய்திகள்,கதைகள், விமர்சனங்கள்

Ep – 2 உன் பாத கொலுசாய்

2,872

உன் பாத கொலுசாய்…
EPISODE – 2
Written by
Saipriya.A


மாலை மணி 5 ஆனதும், சிஸ்டம்-ஐ லாக்-அவுட் செய்தவள், தன் கைப்பையை எடுத்துக்கொண்டு ஸ்டெப்ஸ்-ல் கீழே இறங்கினாள்…

பின்னாடியே கிளம்பிய ரிஷி தன் வழக்கமான வேலையை தொடங்கினான்…

வேறு என்ன?! தியாவை நிழல் போல தொடர்வதுதான்… ரிஷி பெண்களை stalk செய்யும் மோசமானவன் எல்லாம் கிடையாது… அவன் மனம் கவர்ந்த பெண்ணுக்கு எந்த ஆபத்தும் நேராமல் அவன் தானே பாதுகாக்க வேண்டும்??

தியா அலுவலகம் முடிந்ததும் நேராக செல்லும் இடம் வீடு தான்… எப்போதாவது மனம் சோர்வாக இருந்தால், காஃபி ஷாப் செல்வது உண்டு… அன்று ஏனோ அங்கு போகவேண்டும் போல் இருக்க, காஃபி ஷாப் சென்றவள், வழக்கமாய் அமரும் இடத்தில் சென்று அமர்ந்தாள்.

காபியை பருகிக் கொண்டே, அங்கிருந்து தெரியும் மரங்களையும் சூரியனையும் வேடிக்கை பார்த்தபடி இருந்தவளை, “தியா…!!” என்ற அவளுக்கு பரிச்சயமான குரல் ஈர்க்க, நிமிர்ந்தவள் கையில் குழந்தையோடு நின்றிருந்த பவியை பார்த்தாள்…

பவி தியாவின் கல்லூரி தோழி… தியாவின் முகம் தாமரைப்பூவாய் மலர, “ஹே பவி…!!” என்று பவின் கையை பற்றிக்கொண்டாள்…

“வாட் எ சர்ப்ரைஸ்… உன்னை இங்க பாப்பேன்னு நினைக்கவே இல்ல தியா…” என்றாள் பவி.

“பையனா பவி? பேர் என்ன??” என்றபடி அவள் கையில் இருந்த குழந்தையை கொஞ்சிக்கொண்டே தியா கேட்க…

“சூர்யா…!” என்று பவி கூற, அதை கேட்ட திவ்யாவின் முகம் சட்டென்று மாறியது.

“ஓகே பவி… இப்போ கொஞ்சம் அவசரமா கிளம்பனும்… அப்புறம் பார்க்கலாம்…” என்று கிளம்ப முற்பட்டாள்.

“ஹே! தியா… ஒரு நிமிஷம்…!!” என்று அழுத பிள்ளையை சமாதானம் செய்துகொண்டே பவி நிமிர்வதற்குள், பாதி குடித்த கோப்பையுடன் பில் அமௌன்ட்டை வைத்து விட்டு வாசலுக்கு போயிருந்தாள் தியா.

குழப்பத்துடன் தன் டேபிளுக்கு திரும்பிய பவியை பார்த்த அவள் கணவன் தினேஷ், “ரெஸ்ட் ரூம் போயிட்டு வரதுக்குள்ள, எங்க போன பவி? என்ன காணாம அழறானா என் பையன்??” என்று கொஞ்சியபடி பவி கையிலிருந்த குழந்தையை தினேஷ் வாங்க…

“தினேஷ்… நான் தியாவை பார்த்தேன்… அவ கிட்ட தான் பேச போனேன்…” என்று பவி கூறி முடிப்பதற்குள்,

“தியா வா…? சூர்யாவைப் பற்றி சொன்னியா…??” என்று தினேஷ் கேட்க,

“இல்ல தினேஷ்… அதுக்குள்ள அவ போயிட்டா அவசரமா…” என்றால் பவி.

“என்ன பவி தியாவ இத்தனை நாள் காண்டாக்ட் பண்ண முடியல… இப்ப என்னடான்னா பார்த்தும் அவசரமா போயிட்டான்னு சொல்ற… சே! அவ புது நம்பர் ஆச்சு வாங்கினியா…? அட்ரஸ்…? இல்லை, எங்க வொர்க் பண்றா…? ஏதாச்சும் கேட்டியா…??”

“இல்ல தினேஷ்… குழந்தை அழுதுச்சா… அவனை சமாதானம் பண்ணிட்டு பார்த்தா, கூப்பிடக் கூப்பிட போயிட்டா…! என்ன பண்றது தினேஷ்…?” பவி கவலையோடு சொல்ல…

“சரி விடு… இந்த ஏரியால தான் இருப்பா… கண்டுபுடிச்சிடலாம்…!” என்று அவளை சமாதானம் செய்தான் தினேஷ்.

இதையெல்லாம் பார்த்துக்கொண்டு அங்கே அமர்ந்திருந்தான் ரிஷி.

“ரொம்ப க்ளோஸ் ஃப்ரண்டா இருப்பாங்க போல… அவங்க கிட்ட கூட பேசாம என்ன அவசர வேலை? சூர்யானு யார பத்தியோ பேசுறாங்க… ஏதோ சூர்யா பத்தி சொல்ல ட்ரை பண்ணாங்க…?! சூர்யா யாரா இருக்கும்…???” கேள்விகள் மண்டையை குடைய யோசித்துக்கொண்டே ரிஷி அவ்விடம் விட்டு கிளம்ப…

பேரர், “சார் உங்க பர்ஸ் விட்டுட்டு போறீங்க…!!” என்று அழைக்க, “சாரி…!? தேங்க்ஸ்…!” என்று உளறி விட்டு குழப்பத்துடன் வீட்டுக்கு வந்து சேர்ந்தான் ரிஷி.

அங்கே தியாவோ உடைமாற்ற கூட தோணாமல் வெகுநேரம் நிலவை வெறித்தவாறு பால்கனியில் நின்று இருந்தாள்…

கண்களில் கண்ணீர் வழிந்தபடி இருந்தது…

“என் வாழ்க்கைல நான் எதை மறக்க நினைக்கிறனோ அத நியாபக படுத்துற மாதிரி எல்லாம் நடக்குது…
நிம்மதி கிடைக்காது தெரியும்… இருந்தும் காலம் எல்லாத்தையும் மாத்திடும்னு தான் இவ்வளவு தூரம் வந்திருக்கேன்…
இன்னும் என்னால எதையும் மறந்து நார்மலா இருக்க முடியல…”

சாப்பிட கூட தோணாமல் படுக்கையில் சாய்ந்தாள் தியா…

செவிகளில் அவனது குரல் இன்னும் ஒலிப்பது போல் இருக்க, கைகளால் செவிகளை இறுக மூடிக்கொண்டவள் அழுதவாறே தூங்கிப் போனாள்…

காலையில் அலுவலகத்தில் ரிஷி தியாவைப் பார்த்து புன்னகைக்க, பதிலுக்கு புன்னகைக்க மறந்து, ஏதோ யோசனையில், அவனை கடந்து போனாள் தியா.

“ஹலோ…? தியா…! என்னங்க…!!” என்று அழைத்துக் கொண்டே சென்ற ரிஷி அவள் முகத்திற்கு முன்னே கையசைக்க… திடுக்கிட்ட தியா, ரிஷி எதிரில் நிற்பதை அப்போதுதான் உணர்ந்தாள்.

“சாரி…! கவனிக்கல ரிஷி…!!” என்ற தியா புன்னகைக்க முயல…

“ஐயோ…!? உங்களுக்கு என் பெயர் எல்லாம் ஞாபகம் இருக்கா??” ஆச்சரியமாக கேட்ட ரஷி, தியாவின் சிவந்து வீங்கிய கண்களை அப்போதுதான் கவனித்தான்.

“என்ன ஆச்சு தியா…? அழுத மாதிரி கண்ணெல்லாம் சிவந்து போயிருக்கு…??” என்று ரிஷி கேட்க…

இவன் எதுக்கு இதெல்லாம் கேட்கிறான்…? நான் எப்படி இருந்தா இவனுக்கு என்ன…?

தியாவுக்கு சுர்ரென கோபம் வர, நேற்றைய நிகழ்வுகள் வேறு மனதில் பாரமாக இருக்க…

“ஹலோ… உங்க வேலை என்னவோ அதை மட்டும் பாருங்க…!! என் கண்ணு கருப்பா சிவப்பானு பார்க்கத்தான் உங்களுக்கு இங்க salary தர்ராங்களா…??” என்றவள் எரிக்கும் பார்வையுடன் அவ்விடம் விட்டு நகர்ந்தாள்.

ரிஷிக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை… திகைத்துப்போய் நின்றவனை இவற்றை பார்த்துக் கொண்டே வந்த அஷ்வின் உலுக்கினான்.

“என்ன மச்சி…? இப்படி திட்டு வாங்கி கட்டிக்கிட்ட…??” என்று அஷ்வின் சிரிக்க…

“டேய்… இவன் ஒருத்தன் நேரம் காலம் தெரியாம… ஏதோ கோபத்துல இருந்திருப்பா போல… பிடிச்சவங்க கிட்ட தானே உரிமையா நம்ம கோபத்தை காட்ட முடியும்…? அதான் மேடம் நீங்க காட்டிட்டாங்க…! விடுடா…!!” என்று ரிஷி சமாளிக்க அஷ்வினுக்கு சிரிப்பு மேலும் பொங்கியது.

“நீ எதுக்குடா தியா கிட்ட அழுதீங்களா? கண்ணும் சிவந்து இருக்குன்னுலாம் உரிமையா கேட்ட…? அவ என்ன உன் ஃபிரண்டா?? அவ லைஃப்ல என்ன நடக்குதுன்னு கூட நமக்கு தெரியாது… பார்க்கும்போது ஏதோ லைட்டா ஸ்மைல் பண்றதால சாஃப்ட் டைப்னு நினைச்சி… cashew nut மாதிரி கேள்வி கேட்டு… ஹையோ! போ மச்சி…!!” என்ற அஷ்வின் மீண்டும் சிரிக்க…

“உனக்கு தெரியாதுனு வேணும்னா சொல்லிக்கோ… எனக்கும் தெரியாதுனு சொல்லாத… பை த வே, அவ எனக்கு ஃப்ரண்டுக்கும் மேல… என்னைக்காச்சும் ஒரு நாள், என்னோட அக்கறை புரிஞ்சு அவளும் என்னை ஃபிரண்டா நினைப்பா… என்கிட்ட எல்லாம் ஷேர் பண்ணுவா…” சொல்லும்போதே ரிஷியின் முகம் வாட,

“நீ சொல்றதும் கரெக்ட்டு தான் டா… இப்ப நான் அவளுக்கு யாரோ தானே…? அதான் கோபம் வந்துருக்கும்…!” என்றான் ரிஷி.

“ஹேய்… மச்சான்… விடுடா…!! தியா உன்னை புரிஞ்சுக்க நாள் சீக்கிரம் வரும்…” என்ற அஷ்வின் ரிஷியை தோளோடு அணைத்துக் கொண்டான்.

“அதுவரை உனக்கு இந்த தோழன் தோள் கொடுப்பான்…!” என்று அஷ்வின் சொல்ல,

சிரித்தபடியே ரிஷி அவன் முதுகில் பொத்தென்று ஒன்று வைத்தான். அதை அன்பு பரிசாக ஏற்று அவன் இடத்திற்கு சென்றான் அஷ்வின்.

தியாவை எப்படி சமாதானப்படுத்துவது என்று யோசித்தபடியே வேலையில் ஆழ்ந்தான் ரிஷி.


கொலுசு ஒலிக்கும்…


Comments

0 comments

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy