செய்திகள்,கதைகள், விமர்சனங்கள்

Ep – 3 மீண்டும் நிலா

1,365

மீண்டும் நிலா
Episode – 3
Written by – Saipriya.A


நிலா அழகிய சிவப்பு நிற சுடிதாரை அணிந்து கையில் பரிசுடன் கிளம்பினாள்.

“அம்மா… கிளம்பிட்டேன்… அல்ரெடி சொல்லி இருந்தேன்ல எங்க காலேஜ் அருணா மேம் ரிசெப்ஷன்… 10 மணிக்குள்ள வந்துருவேன்…”
“ரம்யாகூட போறேன் அவ கூடவே வந்துருவேன்…” என்றாள்.

“சரி நிலா… பத்திரமா போய்ட்டு வா”

சுமிக்கு அழைப்பு விடுத்தாள்.
“சுமி கிளம்பிடியா? இன்னும் 10 மினிட்ஸ் ல மண்டபம் வந்துருவேன். ரம்யா பிக்கப் பண்ண வரா…”

“நானும் வந்து மண்டபம் வாசல்ல இருக்கேன் டா”

“ok டா பை” என்று அழைப்பை துண்டித்துவிட்டு ரம்யாவுக்காக காத்திருக்கலானாள்.

ரம்யாவுடன் மண்டப வாசலை அடைந்தாள்… “ஹே நிலா… யூ லுக் சோ கார்ஜியஸ்…” என்றாள் சுமி.

“thanks dr… யூ டூ லுக் சோ ப்ரெட்டி…”, நிலா.

“ஏய் அப்போ நானு…” ரம்யா அழ ஆரம்பிக்க

“நீயும் தான் செல்லம்… வா உள்ள போலாம்” என்று தர தர வென்று அவளை இழுத்துக்கொண்டு போனார்கள் சுமியும் நிலாவும்…

ரோஸுக்கும் கல்கண்டுக்கும் அடித்துக்கொண்டு ஒருவழியாக உள்ளே செல்ல…

அங்கு முழுவதும் அவர்கள் கல்லூரி மாணவர்கள் இன்னிசை கச்சேரிக்காரர்களின் பாடலுக்கு ஆடிக்கொண்டு இருந்தனர்.

மணமக்கள் இருவருமே ஒரே கல்லூரி என்பதால் கேட்கவா வேண்டும்…

ரம்யா, “ஏ எனக்கும் ஆடணும் போல இருக்குடி” என்றாள்.

“நோ நோ பப்ளிக் டி கண்ட்ரோல்” என்று கையை பிடித்துக்கொண்டாள் சுமி.

நிலா தன் மொபைலை எடுத்து வந்த வேலையை செவ்வனே செய்ய தொடங்கினாள்.
வேறென்ன செல்ஃபி எடுப்பது தான்…

வளைத்து வளைத்து எடுத்து களைத்து அடுத்த வேலையாக பரிசுகளை மணமக்களுக்கு வழங்கி வாழ்த்திவிட்டு
டின்னர் ஹாலுக்குள் நுழைந்தனர்.

சாப்பிட்டுவிட்டு ஐஸ்கிரீம் வழங்கும் இடத்திற்கு விரைந்தனர்.

“வா ரம்யா…
சீக்கிரம் போனால் தானே எல்லா ஃப்லேவரும் டேஸ்ட் பண்ண கிடைக்கும்??”
என்றாள் சுமி.

“எனக்கு cold இருக்குடி… சோ நீங்க ரெண்டு பேரும் போங்க…”, ரம்யா கூற.

ஐஸ்கிரீம் வாங்கி சாப்பிட்டுக்கொண்டே இருக்கை இருக்கும் இடத்திற்கு வர…

சட்டென யாரோ தன் பெயரை அழைத்ததுபோல் இருக்க திரும்பினாள் நிலா…

யாரும் இல்லாது போகவே மறுபடியும் திரும்ப நேரில் ஒரு ஆடவன் மேல் மோதினாள்.

கையில் இருந்த ஐஸ்கிரீம் அவன் சட்டையில் சென்றது. அவன்மேல் விழாமல் இருக்க அவன் சட்டையிலே கைவைக்க நிலாவின் கைத்தடம் சட்டையில் பதிந்தது.

“ஹலோ! எதிர்ல ஒரு அழகான பொண்ணு வந்தா போதுமே…
கண்ணை அவமேல வச்சிட்டு வருவீங்களா??…” திட்ட ஆரம்பித்தாள் சுமி.

நிலா நிமிர்ந்து பார்க்க…
“ஐயோ கடவுளே… திரும்பியும் இவனபோய் பார்க்க வச்சிடியே…”

அவன் ஆதி…
ரம்யாவிடம் கை ஓங்கிய அதே ஆதி.
அவனும் அந்த கல்லூரியில் படித்த மாணவன் என்பதால் அந்த திருமணத்திற்கு வந்து இருந்தான்.

ஆதி என்கிற ஆதித்யா பிரபல கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனி ஒன்றில் பணியாற்றும் 25 வயதான அழகிய வாலிபன். வீட்டிற்க்கு ஒரே செல்ல மகன். ஒரு தங்கை இருந்தாள்.

அவன் மாநிறத்திற்கு அணிந்திருந்த கருநீலநிற சட்டை அவ்வளவு எடுப்பாக இருந்தது.

நிலா அதிர்ச்சியில் அப்படியே உறைந்துபோய் பேசாமல் நிற்க…

ஆதித்யா சுற்றும் முற்றும் பார்த்தான்…

சுமி,”ஹலோ இடிச்சதுக்கு பதில் சொல்லாம என்ன தேடுறீங்க இப்போ?”

“இல்ல அழகான பொண்ணுனு சொன்னியே அதான் எங்கனு தேடுறேன்…”, ஆதி சொல்ல.

விடுவேனா என்று சுமி,”எங்க நிலாவை பார்த்தும் அழகான பெண்ணை பார்க்கலனு சொல்ற??”

“அப்போ உங்க நிலாவை பாதுகாப்பா வானத்துல இருக்க சொல்லு…
இப்போ என் சட்டையை வீணாக்கானதுக்கு சாரி சொல்ல சொல்லு”,
இப்படி தான் அழகான பையன பார்த்ததும் வந்து ஐஸ்கிரீம் கொட்டுர மாதிரி attention seek பண்றாங்க…
ஆதி சத்தமாகவே முணுமுணுக்க…

சுமிக்கு சிரிப்பு தாங்கவில்லை.

நிலாவிற்கு ஆத்திரம் பொங்கியது.

“நா ஒண்ணும் வேணும்னு உங்க மேல வந்து கொட்டல… வார்த்தைகளை விடாதீங்க… அப்புறம் என்னால சாரிலாம் கேக்க முடியாது… ஏன்னா நீங்களும்தான் என்மேல மோதுனீங்க…”

“அப்படியா சரி சாரிலாம் வேணாம்… என் சட்டையை துவைச்சி தரியா அப்போ…” ஆதி நக்கலாக கேட்டு நிற்க.

“நா எதுக்கு துவைக்கணும்? நா தான் வேணும்னு இடிக்கலனு சொல்றேன்ல”, “வாடி சுமி போலாம்” என்று சுமியின் கையை பற்றிக்கொண்டு அந்த இடத்தைவிட்டு நகர்ந்தாள்.

“நீ துவைச்சி குடுக்கற வர இந்த சட்டையை நான் துவைக்கபோறதில்ல…” என்றான் அவன்.

“எனக்கென்ன வந்தது…” அது உங்க இஷ்டம்… துவைக்காதீங்க…” என்று கூறி விட்டு நடந்தாள் நிலா.

சுமி,” பாருடி எவ்ளோ handsomeஆ இருக்கான்… இவன போல ஒருத்தனை கரெக்ட் பண்ணி கல்யாணம் பண்ணனும்” என்றாள்.

“ஆமாண்டி ரொம்ப அழகு தான்… வழியுது தொடச்சிக்கோ” என்றாள் நிலா.

“ஏ அவன் நம்ம காலேஜில் தான் படிச்சான் போல இருக்கு… பாரு சுத்தி நம்ம காலேஜ் பசங்க இருக்கானுங்க…”, சுமி கூற.

“அவன் எங்க படிச்சா உனக்கென்னடி??”, நிலா எரிச்சலாக கேட்க.

“ஹான்… அது வந்து… அவன எனக்கு புடிச்சிருக்குடி…”, சுமி சொன்னாள்.
அவள் கண்ணை பார்த்தாலே தெரிந்தது அவள் விழுந்துவிட்டாள் என்று.

“ஐயோ… உனக்கு வேற ஆள் கிடக்கலையா சுமி”

“இவன் கிடைச்சா நல்லா இருக்கும்ல…”

“தூ…
போடி லூசு…”, நிலா துப்ப.

அதற்குள் அவர்கள் ரம்யா அமர்ந்திருந்த இடத்திற்கு வந்தனர்.

“ரம்யா… ரம்யா… அந்த பையன பாரேன் எவ்ளோ cute எவ்ளோ handsome எவ்ளோ stylish பாரு பாரு…” என்று சுமி காமிக்க.

ரம்யா, “ஹ்ம்ம் சுமி… கண்ட்ரோல் யூர் எமோஷன்…” என்று சொல்லிவிட்டு திரும்பி பார்க்க…

இப்போ அவளுக்கும் நிலாவின் அதே ரியாக்ஷன்…

தலையில் அடித்துக்கொண்டு அன்றைய நிகழ்வை கூறினாள்.

ரம்யா சொல்லி முடிக்கவும் சுமியின் முகம் மாறினாலும்,
“எனக்கு நம்பிக்கை இருக்கு. அவன் என்கிட்ட அப்டிலாம் பண்ணமாட்டான்.
அவன் ஜாலி டைப் போல தான் தெறியுது” என்று கூறிவிட்டு சைட் அடிப்பதை தொடர்ந்தாள்.

“எனக்கு அவன் பேர் தெரியணுமே… அவன் கூட நின்னுருக்க குமார் உன் பிரண்ட் தான நிலா… கேட்டு சொல்லேன்…” என்றாள்.

“ஏய் அவன பத்திலாம் என்ன கேக்க சொல்லாத… உனக்கு வேணும்னா நீ போய் கேளு…” நிலா சிடுசிடுத்தாள்.

கேக் வெட்டுவதற்காக மாணவர்கள் எல்லோரும் மேடையின் அருகில் காத்திருக்க வேண்டுமென்றே மாணவர்கள் பக்கமாக நடந்து போய் அவன் பேர் ஆதி என்பதை சுமி கண்டுபிடிக்க…

நிலாவும் ரம்யாவும் தலையில் அடித்துக்கொண்டனர்.
ஒருவழியாக எல்லாம் முடிந்து எல்லாரும் கிளம்ப…

கூட்டத்தில் நின்ற அவனை தன் மொபைலில் படம் பிடித்தாள் சுமி.

அவனை விட்டு நீங்க மனசில்லாத அவளை கிட்டத்தட்ட இழுத்துக்கொண்டு கிளம்பினாள் நிலா.

“அவன் நம்பர் வாங்கணும்டி எப்படியாவது… நா வாங்கிட்டு வீட்டுக்கு போறேனே…” என்று புலம்பியவள் வாயிலே குத்துவிட்டு வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.

மீண்டும் வருவாள்…

Comments

0 comments

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy