செய்திகள்,கதைகள், விமர்சனங்கள்

Ep – 5 மீண்டும் நிலா

1,666

மீண்டும் நிலா
Episode – 5
Written by – Saipriya.A


ஓடியே விட்டது 3 மாதங்கள்…
இறுதி செமஸ்டர்…
இன்று நிலாவின் கல்லூரியில் கேம்பஸ் இன்டெர்வியூ நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.

கல்லூரியின் நுழைவாயில் அருகில் இருந்த பிள்ளையார் கோயிலை நோக்கி நடந்தாள் நிலா.
கல்லூரிக்கு சேர்ந்தது முதல் ஒவ்வொரு நாளும் தவறாமல் பிள்ளையாரிடம் பேசிவிட்டு தான் வகுப்பே செல்வாள்.

“பிள்ளையாரப்பா…
எனக்கு வேலைக்கு போய் சொந்த காலுல நின்னு என்ன வளத்த எங்க அம்மாவுக்கு பெருமை சேர்க்கணும்னு ரொம்ப ஆசை…
எனக்கு நீ தான் வேலை ரெடி பண்ணனும்…
நீ சிறப்பா செய்வேன்னு எனக்கு நல்லா தெரியும்…
நா உன்ன நம்புறேன்…
பை…”

மனசுக்குள் மானசீகமாக கடவுளிடம் பேசிவிட்டு அவள் வகுப்பறைக்குள் நுழைந்தாள்.

“வா நிலா… நீ எப்படியும் நல்லா பிரிபேர் பண்ணி இருப்பனு தெரியும். அப்டியே கொஞ்சம் ஆப்ஸ் மட்டும் காட்டினினா உன் புண்ணியத்தில் நானும் செலக்ட் ஆவேன்… ப்ளீஸ் டி…” என்ற சுமியிடம்.

“அதெல்லாம் முடியாதுடி… வேணும்னா நீ ரிவைஸ் பண்ண ஹெல்ப் பண்றேன்…” என்றாள்.

ரம்யா சுமியின் தலையில் குட்டி, “படிச்சா தானடி அவ ரிவைஸ் பண்ண முடியும்… அவ தான் நாள் பூரா கனவுல மிதக்கரவளாச்சே…” என்று நிலாவிடம் கூறிவிட்டு

“என்ன மேடம் உங்க கனவுக்காதல் எப்படி போகுது…” என்று சுமியிடம் ரம்யா கேட்க.

“சும்மா இருக்கறவ கவனத்தை நீயே ஏண்டி கலைச்சு விடுற…” என்று ரம்யாவை மிரட்டி

“வா டி… நா ரிவைஸ் பண்றதை பாரு பக்கத்துல உக்கார்ந்து… உனக்கும் கொஞ்சம் memorize ஆகும்…” என்று சுமியை அழைத்தாள் நிலா.

கொஞ்ச நேரம் எல்லா மாணவர்களும் படித்து கொண்டிருக்க…
அவர்களது HOD வகுப்பினுள் நுழைந்தார்.

“ஸ்டுடெண்ட்ஸ், உங்களுக்கு அல்ரெடி இன்ஃபார்ம் பண்ணிருந்த மாதிரி இப்போ கேம்பஸ் சேலெக்ஷன்கு வந்திருக்க companies லிஸ்ட் நோட்டீஸ் போர்ட்ல பேஸ்ட் பண்ணியாச்சு… உங்களுக்கு புடிச்ச கம்பெனி செலக்ட் பண்ணி இன்டெர்வியூ அட்டெண்ட் பண்ணுங்க…
நல்லா பண்ணுங்க…
ஆல் தி பெஸ்ட்…” என்றார்.

“ராஜ் குரூப் ஆஃப் கம்பனிஸ் அட்டெண்ட் பண்ண போறேண்டி… நீங்க எந்த company அட்டெண்ட் பண்ண போறீங்க… என்று நிலா கேட்க.

புன்னகையுடன் சுமி, “நானும் அங்க தான்…” என்றாள்.

ரம்யா, “நா எங்க ஊருக்கு பக்கத்துல branch இருக்க கம்பெனியா தேடி அட்டெண்ட் பண்ணலாம்னு இருக்கேன்டி… எங்க பெரியம்மா சமையல் சாப்பிட்டு நாக்கு செத்து போச்சு” என்றாள்.

“Ok டி… நீ ஆசைப்பட்ட மாதிரி கிடைக்க ஆல் தி பெஸ்ட்… இன்டெர்வியூ முடிச்சி நம் classகு வந்திட்டு மெசேஜ் பண்ணு…” என்று ரம்யாவிடம் கூறிவிட்டு சுமியுடன் அந்த கம்பெனிக்கு ஒதுக்கி இருக்கும் அறைக்கு போனாள் நிலா.

எல்லா ரௌண்டும் முடிந்து முடிவுக்காக காத்திருந்தார்கள்.
நிலா சுமி இருவருமே அங்கேயே செலக்ட் ஆகிவிட முகம் கொள்ளா சிரிப்பு அந்த தோழிகளுக்கு…

கையில் Offer லெட்டருடன் வகுப்பில் நிலாவும் சுமியும் நுழைய ரம்யாவும் ஓடி வந்து கட்டிக்கொண்டு, “எனக்கு வேலை கிடைச்சிடுச்சுடி… கண்ணன் Enterprises கோயம்புத்தூர் ப்ரான்ச்லயே…” எனவும்.

“சூப்பர் டி… congrats… எங்களுக்கும் Raj Groupsல…” என்று தன் கையில் இருந்த offer letterஐ காண்பிக்க.

சந்தோஷம் அடைந்த ரம்யா, “ஆனா ஒரு குறை தான்… ரொம்ப distanceல இருப்போம் இனிமே… நீங்க சென்னைல நான் கோயம்புத்தூர்…” என்று அடுத்த கணம் வருந்த.

“நமக்கு vacation பிளானே இனிமே கோயம்புத்தூர் தான்…” என்று அவளை நிலா தேற்ற ரம்யா முகத்தில் மகிழ்ச்சி மீண்டது.

செமஸ்டர் தேர்வுகள் நிறைவடைந்த நிலையில் result-காக காத்திருந்த அவர்கள் டிப்பார்ட்மெண்ட் மாணவர்கள் அனைவருமே all clear ஆகிவிட…

அனைவருக்கும் அவர்கள் தேர்வான இடத்திலிருந்து கால் லெட்டர் வரத்தொடங்கின…

“ஹே… நிலா… உன்ன next வீக் join பண்ண சொல்லி லெட்டர் வந்திருக்கு…” என்று அருண் கத்த.

அதை பூஜை ரூமில் வைத்து பிள்ளையாருக்கு நன்றி சொல்லிவிட்டு அம்மாவிடம் காட்டி மகிழ்ந்தாள்.

சுமியிடம் இருந்து அழைப்பு வரவே, “Congrats டி… என்ன கால் லெட்டர் வந்துச்சா?” என்று நிலா கேட்க.

“தேங்க்ஸ் நிலா… நீ இல்லன்னா நா இந்த மாதிரி பெரிய கம்பெனி ரவுண்ட் எல்லாம் clear பண்ணி இருக்க முடியாதுடி… என்று சுமி கூற.

“அதெல்லாம் இல்ல டி… உன் திறமைக்கு நா ஒரு தூண்டுகோலா தான் இருந்தேன்… ஒரு friendகாக இது கூட செய்ய மாட்டேனா…” என்றாள் நிலா.

“சரி திங்கள்கிழமை சீக்கிரம் ரெடி ஆகிடு… பிள்ளையார் கோவில் போய்ட்டு அப்றம் ஆஃபிஸ் போறோம்…” என்று அழைப்பை துண்டித்து.

நிலா பல கனவுகளுடன் அந்த நாளை எதிர்நோக்கி காத்திருந்தாள்…

மீண்டும் வருவாள்…

Comments

0 comments

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy