செய்திகள்,கதைகள், விமர்சனங்கள்

Ep – 7 மீண்டும் நிலா

1,944

மீண்டும் நிலா
Episode – 7
Written by – Saipriya.A


நிலா கண்களை நன்றாக திறந்து பார்த்தாள்.
ஆதி…
இவன் எப்படி இங்கே வந்தான்…
சட்டென்று விக்கல் எழ…

“ஏன் நிலா அப்டியே நின்னுட்டு இருக்க…” என்று கூறி நிலாவை இழுத்து உட்காரவைத்த சுமி சுற்றும் முற்றும் பார்க்க…
அங்கே ஆதி நிலாவையே பார்த்துக்கொண்டு உட்கார்ந்து இருந்தான்.

“அட நம்ம ஹீரோ சர்… கழுத்துல நம்ம கம்பெனி ID கார்ட் போட்டு இருக்காரே…” என்று யோசித்த சுமி

“நிலா… என்னடி உனக்கு திடீர்னு விக்கல்…” என்று கூறி நிலாவை உலுக்க…

தன் இருக்கையில் இருந்து எழுந்த ஆதி தன் கையில் இருந்த தண்ணீர் க்ளாஸை நிலாவின் முன் டக்கென வைத்து செல்ல…
சுவிட்ச் போட்டது போல நிலாவின் விக்கல் நின்றது.

வீட்டுக்கு வந்த நிலா நேராக தன் அம்மாவிடம் சென்றாள்.

“அம்மா… அவன் ஏன்மா அங்க வந்தான்…” என்று கத்திவிட்டு அம்மாவை கட்டிக்கொண்டு அம்மா மடியில் விழுந்தாள்.

“யாரு குட்டிம்மா? என் செல்லத்த யார் கோவப்பட வச்சது…?”

“வேற யாரு உன்கிட்ட அல்ரெடி சொல்லி இருக்கேன்ல மா… ஆதினு ஒரு திமிர் பிடிச்சவன்…”

“யார் அன்னிக்கி நீ திட்டியும் வந்து தாங்க்ஸ் சொல்லிட்டு போனாரே… அவரா…” என்று அருண் கேட்டுக்கொண்டே வந்து அமர.

“இங்க பாருமா… இவன் எனக்கு சப்போர்ட்டே பண்ண மாட்டாறான்…” என்று கத்திக்கொண்டு அருணை அடித்தாள்.

“சரி நீங்க விளையாடிட்டு இருங்க… நா போய் தோசை ஊத்தி எடுத்துட்டு வரேன்…” என்றபடியே லக்ஷ்மி நகர…

“எம்மா… இது உனக்கு விளையாடற மாதிரி இருக்கா… காப்பாத்து மா… அடிக்கிறா…” என்று அருண் கத்த.

“வலிக்குதா அண்ணா…” நிறுத்திவிட்டு கவலையுடன் கேட்ட நிலாவை பார்த்து சிரித்த அருண்.

“அதான் நீ… நிலா உனக்கு ஏன் அவரை பார்த்தாலே கோபம்… இப்போகூட எவ்ளோ அக்கறையா உனக்கு தண்ணி வச்சிட்டு போய் இருக்காரு…”

“போடா… எனக்கு விக்கல் எடுத்தா அவன் ஏன் தண்ணி எடுத்துட்டு வரணும்…” என்று நிலா முறுக்கிக்கொண்டு போனாள்.

“ஒரு வேளை உன்னை…” என்று அருண் இழுக்க…

அதற்கும் முதுகில் விழுந்தது.

இரவு உண்டுவிட்டு படுத்த நிலா தூக்கம் வராமல் பால்கனியில் நின்று வான்நிலாவை பார்த்தாள்.

“அருண் சொல்ற மாதிரி இருக்குமோ…
இருக்காது… இருக்க கூடாது…
நோ நோ… நிலா ரொம்ப யோசிக்காத… படுத்து தூங்கு…” என்று தலையை உலுக்கி கொண்டு படுக்கையில் விழுந்தவளை உறக்கம் தழுவியது…

இரவு வெகுநேரம் விழித்திருந்ததால் காலையில் தாமதமாக எழுந்த நிலா ரெடியாகி கொண்டிருக்க…

அருணுக்கு அன்று work from home கொடுத்திருந்ததால் ஹாயாக ஹாலில் TV பார்த்துக்கொண்டிருந்தான்.

“நிலா… ரெடி ஆகிட்டியா… நா வந்துட்டேன்…” என்று ராகம்போட்டு கத்திக்கொண்டு வந்த சுமி அருண் வாய்மேல் கைவைத்து சிரிப்பதை பார்த்ததும் அமைதியாக நிலாவின் ரூமுக்குள் சென்றாள்.

“தோ… 2 மினிட்ஸ் டி… உட்கார் சுமி” என்றபடி தலையை கிளிப்பிட்டு கிளம்பினாள் நிலா.

வண்டியை கிளப்பி வெளியில் வந்ததும் நிலா சிரிக்க ஆரம்பிக்க,
“எதுக்கு நிலா சிரிக்கற?” என்று கேட்ட சுமியிடம்.

“ஒண்ணும் இல்ல சுமி… 2 நாள் முன்னாடி நா அம்மாகூட உட்கார்ந்து நம்ம காலேஜில எடுத்த போட்டோஸ்லாம் பாத்துட்டு இருந்தனா…”

“அதுக்கா இப்ப சிரிக்கற…” என்று அப்பாவியாக கேட்ட சுமியிடம்.

“இல்லடி… அப்போ உன் போட்டோவை பாத்து… சுமி எவ்ளோ அமைதியான பொண்ணுனு அம்மா சொன்னாங்களா… அதுக்கு அருண் இல்ல…
ஏது இது அமைதியான பொண்ணா… சரியான வாயாடினு சொல்லிட்டான்…” என்று கூறிவிட்டு நிலா சிரிக்க…

“ஹ்ம்ம்…” என்று முகத்தை உம்மென்று வைத்துக்கொண்டாள் சுமி.

“இல்லடி அவன் சும்மா விளையாட்டுக்கு சொன்னான்…” என்று நிலா சமாதானப்படுத்த…

“இட்ஸ் ஓகே நிலா…” என்று வெளியில் சொன்னாலும்

மனதிற்குள், “ஒரு தடவையாச்சும் இவன் கிட்ட பேசி இருக்கனா? அப்படிப்பட்ட என்னைப்பார்த்து… வாயாடி… இருக்கட்டும்… நம்ம நிலா அண்ணனா போய்ட்டான்… பொழச்சி போகட்டும்…” என்று சொல்லிவிட்டு அமைதி அடைந்தாள்.

அலுவலகத்திற்கு சரியான நேரத்திற்கு வந்து liftல் நுழைந்தனர்.

“நிலா… ஆதி சர் கூட நம்ம ஆபிஸ் தான் போல… எவ்ளோ நல்ல சர் ல?” என்று சுமி கேட்க

“ஆமா ஆமா எவ்ளோ நல்ல சார்ர்ர்ரு…”

“ஏண்டி இழுக்கற… உன்மேல அவருக்கு தனி அக்கறை இருக்கறமாதிரி எனக்கு தோணுது…”

“அதெல்லாம் இல்ல… இதெல்லாம் normal விஷயம் தான் சுமி…”

“அப்படியா…? ஆதி எல்லாரும் விக்குனா தண்ணி கொண்டு போய் கொடுப்பாரா? பக்கத்து tableல கூட ஒரு பாப்பா விக்குச்சு தெரியுமா…” என்று சுமி நிலாவின் கன்னத்தை பிடித்து கேட்க.

“அதெல்லாம் நீ அவரை தான் போய் கேட்கணும்…” என்று நிலா நழுவ.

“அவரா… என்ன நிலா மரியாதைலாம் வருது… அப்போ…
இதுதானா இதுதானா…
எதிர்பார்த்த அந்நாளும் இதுதானா…”
என்று சுமி பாட ஆரம்பிக்க…

“ஏய்… இங்க அவர் நம்ம ஆபிஸ்ல வேலைபார்க்கிறவர்… அதனால சொன்னேன்… மத்தபடி அவன் தான்…” என்று அடிக்க.

“ஹான்… சொல்லு சொல்லு… உனக்கில்லாத உரிமையா…” என்று கிண்டல் அடித்த சுமியை மொத்திவிட்டு தன் கேபினுக்குள் நுழைந்து வேலையில் மூழ்கினாள்.

மீண்டும் வருவாள்…

Comments

0 comments

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy