செய்திகள்,கதைகள், விமர்சனங்கள்

Ep – 8 மீண்டும் நிலா

1,724

மீண்டும் நிலா
Episode – 8
Written by – Saipriya.A


வேலையில் ஆழ்ந்து இருந்த நிலா அனுவின் குரல் கேட்டு நிமிர்ந்தாள்.

“நிலா… நம்ம designing டிப்பார்ட்மெண்ட்ல இருக்க எல்லாரையும் conference ரூம் கூப்பிட்டு இருக்காங்க…” என்றாள் அனு.

அனு நிலாவுடன் அதே டிப்பார்ட்மெண்ட்டில் பணியாற்றுகிறாள்.

“திடீர்னு என்ன மீட்டிங் வச்சிருக்காங்க… கரெக்டா லன்ச் டைம்ல?” என்று புலம்ப ஆரம்பித்தான் ரகு.

சேர்ந்த ஒரு நாளிலேயே அனுவும் ரகுவும் நிலாவுக்கு நன்றாக பரிச்சயம் ஆகிவிட்டார்கள். அவளை விட சீனியர் என்ற கெத்து எல்லாம் காட்டாமல் பழகியதால் நிலாவும் அவர்களுடன் நட்பாகி விட்டாள்.

“உனக்கு ரகு என்று பேர் வச்சதுக்கு பதில் சாப்பாட்டுராமன்னு வச்சி இருக்கலாம்…ஏதோ பெரிய அசைன்மெண்ட் ஆம்…வாங்க போலாம்…” என்றபடி நகர்ந்தாள் அனு.

“என்ன அனு நீ… கேன்டீன் போய்ட்டு போலமே…” என்று ரகு சொல்ல…
அனுவும் நிலாவும் சிரிக்க ஆரம்பித்தனர்.

“சரி… மீட்டிங் முடிஞ்சு போலாம்…” என்று சமாதானப்படுத்தி அவனை அழைத்துக்கொண்டு இருவரும் சென்றனர்.

Conference ரூம்… சில்லென்ற AC குளிர் பரவி இருக்க…

Designing குழுவினர் மொத்தமும் அங்கே குழுமி இருந்தனர். நிலா கையில் நோட்பேடுடன் தலையை குனிந்து கொண்டு உட்கார்ந்திருந்தாள்.

அவர்களது டிசைனிங் ஹெட் எல்லாரும் வந்ததும் விஷ் செய்து விட்டு பேச ஆரம்பித்தார்.

“குட் நூன் கைஸ்… நமக்கு ஒரு importantஆன ப்ரொஜெக்ட் வந்திருக்கு… இத நாம குய்க்கா முடிச்சா அங்க இருக்கற remaining ப்ரொஜெக்ட்ஸும் நமக்கே வரும்…
சோ அதை நாம ஸ்பிலிட் பண்ணி பண்ணப்போறோம்…
நம்ம சீனியர் என்ஜினியர் ஆதித்யா இப்போ யாருக்கு என்ன ஒர்க்னு அலாட் பண்ணுவார்…”

“ஹெலோ ஆல்… ஐ’ம் ஆதித்யா… இப்போ நீங்களே 3 மெம்பர் டீம் ஃபார்ம் பண்ணுங்க… ஒன்ஸ் டீம் ஃபார்ம் பண்ணிட்டீங்கன்னா… எனக்கு இன்ஃபார்ம் பண்ணுங்க… உங்க ஒர்க் அலாட் பண்றேன்…” ஆதி பேசி முடிக்க…

ஆதி ஹலோ சொன்னது மட்டும் தான் நிலா காதில் விழுந்தது.

“மாட்டினேன்… இவனுக்கு தான் ரிப்போர்ட் பண்ணனுமா இனிமே… சூப்பர்…” மனசுக்குள் நிலா புலம்ப…

“ஹே நிலா… நீ நா ரகு ஒரு டீம்… ஒகேவா…” என்று அனு கேட்க.

நிலா ஒன்றும் சொல்லாமல் உட்கார்ந்து இருந்தாள். அவள் விழிப்பதை பார்த்து அவளை அனு அசைக்க…

“ஹான்… என்ன சொன்னீங்க… சாரி… நா… க… கவனிக்கல…” என்று நிலா சொல்ல.

சிரித்துகொண்ட அனு, “ஒண்ணும் இல்ல நிலா… நமக்கு என்ன ஒர்க்னு கேட்கலாம் வா…” என்று கூப்பிட.

வேறுவழியில்லாமல் அவர்களுடன் செல்ல ஆதி அப்போதுதான் நிலாவை கவனித்தான்…

மனசுக்குள் எழுந்த சந்தோஷத்தை அடக்கி கொண்டு அவர்களது வேலையை விளக்கி கூற ஆரம்பித்தான்.

ஆனால் பாலில் விழுந்த கருப்பு திராட்சை போல இருந்த அவளது கண்களை அடிக்கடி சந்திப்பதை அவனால் தவிர்க்க முடியவில்லை…

“சரி… சீக்கிரம் முடிங்க… என்று கூறிவிட்டு வேண்டுமென்றே…

“இது உங்க காலேஜ் ப்ரொஜெக்ட் மாதிரி இல்ல… சோ சீக்கிரம் பினிஷ் பண்ணனும்… பேசிக் டிசைன் முடிஞ்சதும் என்கிட்ட ரிப்போர்ட் பண்ணுங்க” என்று கூற…

நிலா முறைத்துவிட்டு, “ம்ம் ம்ம்…” என்று முனரிவிட்டு சென்றாள்.

நிலா போனதும் அவள் முகபாவனையை நினைத்து சிரிப்பு பொங்கியது ஆதிக்கு.

ஒருவழியாக பேசிக் டிசைனை முடித்ததும் நிலா, “அனு… இதை ஆதி… சா…ர்… காமிக்க சொன்னார்ல… கொஞ்சம் கூப்பிட்டு வரீங்களா…” என்று அனுவிடம் கேட்க…

“ஹே நீயே போய் கூப்பிடு நிலா… ஆதி சார் நல்ல டைப் தான்…” என்று அனு கூறினாள்.

“என்னது நானா…” என்று பதறியவளை பார்த்ததும், “ரகு நீ போய் கூப்பிடு…” என்று அனு சொல்ல…

“எனக்கு பசிக்குதே… போனா எனக்கு கேண்டீன்ல ஏதாச்சும் வாங்கி தருவனு ப்ரோமிஸ் பண்ணுங்க… அப்போதான் நா போவேன்…” என்றான் ரகு.

“என்ன கேட்டாலும் வாங்கி தரேன் ப்ரோ… ப்ளீஸ்…” என்று நிலா கூற.

“டபுள் ஓகே sis…” என்று ரகு போய் ஆதியுடன் வந்தான்.

“ஓகே… ஷோ மீ தி டிசைன்…” என்று ஆதி கேட்க நிலா ஓபன் செய்து காட்டினாள்.

மனசுக்குள் நிலாவின் திறமையை எண்ணி வியந்தாலும் ஒரு வார்த்தை கூட பாராட்டாமல், “ஹான்… continue பண்ணுங்க…” என்று ஆதி சொல்ல.

ரகுவிடம் நைசாக சைகையில், “எப்படி இருக்குன்னு கேளுங்க ப்ரோ…” என்றாள்.

ரகு, “சார்… எப்படி இருக்குனு கேட்க சொன்னாங்க… ஐயோ… இல்ல இல்ல… எப்படி இருக்கு சார்” என்று உளற…

“ஓகே தான்…” என்று சொல்லிவிட்டு கிளம்பிவிட்டான் ஆதி.

“ஹான்… அவ்ளோதானா… எவ்ளோ யோசிச்சு பண்ணேன்… ஒரு வார்த்தை கூட appreciate பண்ணனும்னு தோணல??? சரியான ஸீன் பார்ட்டி…” என்று நிலா கடுப்பனாள்.

“இதைவிட சூப்பரா முடிச்சு நான் தான் பெஸ்ட்னு பேர் எடுக்கிறேன் இருடா…” என்று சவால் விட்டாள்.

அங்கே ஆதியோ…
“மூக்குக்கு மேல கோவம் வருது இவளுக்கு… மூக்கு அப்டியே மிளகா கலர்ல மாறுது… ஹ்ம்ம் வேற வழி இல்ல நிலா… இதை விட்டா உன்னை வெறுப்பேத்த எனக்கு சான்ஸ் கிடைக்காதே… என்ன சொன்ன ஆதி யார்னு தெரியாதுன்னு தான… இனி தெரிஞ்சிக்க…” சிரித்துக்கொண்டே அவன் வேலையை தொடர்ந்தான்.

மீண்டும் வருவாள்…

Comments

0 comments

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy