செய்திகள்,கதைகள், விமர்சனங்கள்

Ep – 10 மீண்டும் நிலா

1,776

மீண்டும் நிலா
Episode – 10
Written by – Saipriya.A


அலுவலகம் முடிந்து வீட்டிற்கு வந்த சுமி,
விரைவாக ரிஃப்ரேஷ் ஆகி விட்டு தன் மொபைலை உயிர்ப்பித்தாள்…
பார்ப்போம் அவன் நம் friend request அக்ஸப்ட் பண்ணானானு…
நித்யாவாக முகநூலில் லாகின் செய்தாள்…
ஒரு நொடிபிகேஷன் வந்து இருந்தது…
அவனாக இருக்கணுமே…
அருண் ராமகிருஷ்ணன் accepted your…
யெஸ்… யெஸ்…
படித்துவிட்டு அவள் குதிக்க…

அவள் அம்மா “என்னாச்சுடி…??” என்று கேட்க…
“ஒண்ணும் இல்லமா…” என்று நாக்கை கடித்துக்கொண்டு மொபைலுடன் ரூமிற்குள் ஓடினாள்.

ஹான்…
சிக்குனியா இப்போ…
வா வா… இனிமே தான இருக்கு உனக்கு…

“ஹை…” என்று மெஸேஜ் அனுப்பி விட்டு காத்திருந்தாள் சுமி…

அங்கே நிலா…
மடிக்கணினியுடன் உட்கார்ந்து கொண்டு இருக்க…

அருண், “என்ன நிலா… வீட்டுக்கு ஆபிஸ கொண்டு வந்து இருக்க…?” என்று கேட்க.

“அருண்… நா ரொம்ப முக்கியமான வேலையா இருக்கேன்… டோன்ட் டிஸ்டர்ப்…” என்று அறைக்குள் சென்று கதவை சாத்திக்கொண்டாள்.

“அடிப்பாவி… சரி… நாம facebook பாப்போம்…” என்று மொபைலை எடுக்க…

மேலே ஹை என்று chathead ஓபன் ஆனது…

நமக்கு எந்த பொண்ணு மெஸேஜ் பண்ணி இருக்கு…

நித்யா…

பேரு நல்லா தான் இருக்கு…

நாமளும் ஹை அனுப்புவோம் என்று அனுப்ப…

அங்கே சுமிக்கு ஒரே சந்தோஷம்…

“ஹௌ ர் யூ?” என்றாள்.

“பைன்…என்ன பண்றீங்க?” என்றான்.

சுமி யோசித்தாள்…
என்ன சொல்லலாம்…
படிக்கிறோம்னு சொல்லிடலாம்…

“நா காலேஜ் படிக்கிறேன்…நீங்க?” எனவும்

“நா ஒர்க் பண்ணறேன்… நீங்க எந்த ஊர்?” என்று கேட்டான் அருண்.

“பாண்டி…” என்றாள்.

“ஹ்ம்ம்… ஸ்கூல் எங்க படிச்சீங்க?” என்று அருண் கேட்க.

சுமி, “பெட்டிட் செமினார்” என்றாள்.

அருண், “அது பாய்ஸ் ஸ்கூல் தான…” எனவும்…

சுமி,
ஹையோ…
இப்படி மாட்டிக்கிட்டியே சுமி… சமளிப்போம்…

யோசிப்பதற்குள் அவன் “ஹலோ?” என்று அனுப்ப.

இருடா கொஞ்ச நேரம் யோசிக்க டைம் குடுறா… என்று புலம்பியவள் ஒரு முடிவுக்கு வந்தாள்.

“மாடிக்கிட்டனே… actually அது பொய்… நா சென்னைல தான் படிச்சேன்…” என்றாள்.

“நீங்க பையனா பொண்ணா??” என்று அருண் கேட்க…

“ஐயோ நா பொண்ணு தான் ஜீ” என்றாள்.

அருண், ” ஓ… உண்மையான பேரு என்ன?” என்றான்.

“அது நித்யா தான்…” என்று சுமி கூற.

“ஓகே ஓகே… சென்ட் மீ யூர் போட்டோ…” என்றான்.

“ஐயோ அது மட்டும் கேக்காதீங்க… ப்ளீஸ்…” என்று சுமி சொல்ல…

“ஏன்…” என்றான்.

“நீங்க நா பொண்ணுனு நம்பாம தான போட்டோ கேக்கிறீங்க?
உங்களுக்கு என்ன பாக்கணும்னு தோணுனா மட்டும் தான் கேட்கணும்…
ஒகேவா??”
என்றாள்.

உடனே அவன், “ஹ்ம்ம்… பாக்கணும்னு தான் தோணுது…” எனவும்…

வேண்டுமென்றே சுமி, “இல்ல பொய்… அது எப்டி தோணும்… நீங்க இப்போ தான என்கிட்ட பேசறீங்க…?” என்று கேட்க.

அருண், “நிஜமா…” என்றான்.

“ஹா ஹா நம்பிட்டேன்…” என்ற சுமி
“actually நா உங்க ஜூனியர்… நீங்க என்ன பாத்து இருக்கீங்க… நல்லா யோசிங்க sir…” என்று கூற…

அருண் நன்றாக யோசித்தான்.
யாரு… நா பாத்து இருக்கனா? யாருன்னு தெரியலையே சரியா… போட்டோ அனுப்புனா தான தெரியும்…” என்றான்.

சுமி, “என் பேர் உங்களுக்கு ஞாபகம் இல்லையா..?” என்று கேட்டுவிட்டு சிரித்தாள்.

இன்னும் கொஞ்ச நேரத்துல உனக்கு மண்டை காய போகுது பாருடா…

“சரி எங்க படிக்கிற இப்போ?” என்று அருண் கேட்க.

“எத்திராஜ் காலேஜ் CS படிக்கிறேன்… நீங்க TCL ல தான வேலை பாக்கிறீங்க… என சுமி கூறவும்…

அருண், “அது எப்படி தெரியும் உனக்கு?
சரி… நீ என் ஜூனியர்னு தான சொன்ன… எந்த year கரெக்டா என்கூட படிச்ச சொல்லு” என்றான்.

அவன் முகநூலில் குறிப்பிட்டு இருந்ததை வைத்து சுமி,
“SSVல நீங்க 10th படிச்சப்போ நா 9th…” என்றாள்.

“நா 10th அங்க படிக்கலயே…” அவன் கூறவும்.

இப்ப எப்டி சமாளிக்கறது…??

சுமி உடனே, “உங்களை விட ஒரு வருஷம் ஜூனியர் நா… எனக்கு உங்களை ஞாபகம் இருக்கு… நீங்க தான் என்ன மறந்துடீங்க…” என்று சோகமா இருக்கும் ஸ்மைலி அனுப்பினாள்.

அருண், “போட்டோ அனுப்புனா எல்லா confusionம் solve ஆகிடும்ல…” என்றான்.

சுமி மனசுக்குள், “அப்றம் நா மாடிப்பேன்ல டா??” என்று சிரித்துக்கொண்டே.

நீங்க கேக்காதீங்க… நானே ஒரு நாள் அனுப்புவேன்… என்று அப்போதைக்கு அதற்கொரு முடிவு கட்டினாள்.

அவன், “நீங்க எந்த ஏரியா??” என்று கேட்க

சுமி, “நா அடையார்… நீங்க அஷோக் நகர் தான என்று கேட்க.

அவன், “நல்லா என்ன தெரிஞ்சவங்க தான் நீங்க… எவ்ளோ நேரம் தான் யாருன்னு தெரியாம பேசுறது…? யார்னு சொல்லுங்க… போட்டோ அனுப்புங்க… இல்ல நம்பர் ஆச்சும் குடுங்க” என்றான்.

யாருன்னு தெரியாத பொண்ணுகிட்டலாம் மரியாதையா தான் டா பேசுற… என்று மனதில் நினைத்தாள் சுமி.

பிறகு, “நா ஒன்னு சொல்லவா… என்று கேட்டாள்.

அவன் என்ன என்று கேட்க.

“உண்மையா நீங்க யாருன்னு எனக்கு தெரியாது…இவ்ளோ நேரம் நா சொன்ன டீடெயில்ஸ் எல்லாம் உங்க ப்ரொபைல் பாத்து தான் சொன்னேன்…” என்று சமாளிக்க…

அவன் அப்போவும் நம்பாமல் facebook கால் செய்ய இவள் கட் செய்தாள்.

பிறகு, “ஹலோ மட்டும் தான் சொல்லுவேன்” என்ற நிபந்தனையுடன் கால் அட்டெண்ட் செய்தாள்.

மறுமுனையில் அவன் குரல் கேட்க, கடவுளே என் குரல் அவன் கண்டுபிடிக்க கூடாது என்று வேண்டிக்கொண்டு கொஞ்சம் மென்மையாக, “ஹலோ…” என்றாள்.

அருண், “யாரு நீங்க? உண்மையை சொல்லுங்க… ரொம்ப நேரமா நீங்க மட்டும் ஜாலியா என்ன கலாய்க்கறீங்க…?” என்று கேட்க…

சுமிக்கு ஒரு புறம் அவன் நம் குரலை கண்டுபிடிக்கவில்லை என்ற மகிழ்ச்சி இருந்தாலும் அதை மறைத்துக்கொண்டு, “நீங்க நெனைக்கிற மாதிரி இல்ல… நா நித்யா… உங்களுக்கு என்ன தெரியாது…” என்றாள்.

அருண் பக்கத்தில் வந்த லக்ஷ்மி யாரிடம் இவன் பேசிக்கொண்டு இருக்கிறான் இந்த நேரத்தில் என்று யோசித்து யாருடா…? என்று கேட்க.

ஒன்றுமில்லை பிரண்ட் தான் அம்மா என்று அருண் சமாளிக்க.

கேட்டுக்கொண்டு இருந்த சுமி சிரிக்க ஆரம்பித்தாள்.

அருணுக்கு மண்டை காய்ந்தது… யாராக இருக்கும் என்று யோசித்து ஒவ்வொரு பேராக அவளிடம் கேட்க…

இவ்ளோ girl friendsஆ உங்களுக்கு என்றாள் சுமி.

“அட போம்மா நானே சிங்கிள்…” என்று அருண் புலம்ப.

சுமிக்கு சிரிப்பு தாங்கவில்லை…
“நா கூட தான் சிங்கிள்… அதுக்கு இப்படியா அழறேன்… சரி அப்றம் பேசலாம்… எங்க அம்மா வந்துட்டாங்க…” என்று அழைப்பை துண்டித்தாள்.

அருண் பேசியதை நினைத்து நினைத்து சுமிக்கு சிரிப்பு சிரிப்பாக வந்து…

ஆனாலும் அவன் நல்லவன் தான் போல… நா தான் தேவ இல்லாம revenge எடுக்கிறேன்னு ரெக்வெஸ்ட் அனுப்பி இருக்கேன்…

ஆனா… என்ன நீ அவ்ளோ வெறுப்பேத்தி இருக்க அருண்…
சோ உன்கூட இப்படியே ஒரு நாலு நாளாச்சும் பேசிட்டு கடைசியா நா யாருன்னு சொல்லிடறேன்…

நினைத்துக்கொண்டே சுமி உறங்கிப்போனாள்…

மீண்டும் வருவாள்…

Comments

0 comments

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy