செய்திகள்,கதைகள், விமர்சனங்கள்

Ep – 11 மீண்டும் நிலா

1,832

மீண்டும் நிலா
Episode – 11
Written by – Saipriya.A


அடுத்த நாள் காலையில்…
ப்ரொஜெக்ட் சப்மிட் செய்ய வேண்டுமென்று அவசரமாக கிளம்பிக்கொண்டு இருந்தாள் நிலா.

சுமியையும் சீக்கிரம் வர சொல்லி இருந்ததால் அவளும் சீக்கிரமே வந்து நிலா வீட்டில் காத்து இருந்தாள்.

எங்கே இவன காணோம்… என்று சுமி கண்களாலே அருணை தேடினாள்…

சரி மெஸேஜ் அனுப்புவோம்…
“குட் மார்னிங்…” என்று அனுப்பினாள்…
அவனோ அவன் அறைக்குள் குறட்டை விட்டு தூங்கிக்கொண்டு இருந்தான்…

“தூங்குமூஞ்சி… நல்லா தூங்குங்க…” என்று அனுப்பி விட்டு நிலாவை அழைத்துக்கொண்டு ஆபிஸ் கிளம்பினாள்.

அலுவலகம்…
அனைவரும் அவர்களின் ப்ரொஜெக்ட்ஐ சப்மிட் செய்து விட்டு பரபரப்பாக காத்துகொண்டிருக்க…

ரகு கூச்சலிட்டுக்கொண்டே வந்தான்…
“ப்ரொஜெக்ட் நல்லா வந்திருக்காம்…
கைஸ்… கெஸ் வாட்…
நம்ம பார்ட் தான் அதுல பெஸ்ட்…
ஊ…ஊ…”

“நெஜமாவா ப்ரோ…” என்று நிலா முகமெல்லாம் சந்தோஷத்துடன் கேட்க…

“ஆமா நிலா… இப்போ மீட்டிங் வைப்பாங்க… announce பண்ணறதுக்கு…” என்றான்.

அனு நிலாவுடன் ஹை ஃபை போட்டுகொண்டு இருக்கும்போதே மீட்டிங்குக்கான அழைப்பு வந்தது.

மீட்டிங் ஹாலில் அனைவரும் இருக்க… நிலா ஆதியை தேடினாள்.

எங்க அவன்… நல்லா இருக்குனு கூட சொல்லல ல… வரட்டும்… என்று காத்திருக்க.

நிலா எதிர்பார்த்த உடன் ஆதி அங்கே ஆஜர் ஆனான்.

மை டியர் பிரெண்ட்ஸ்… நம்ம எதிர்பாராத அளவுக்கு ப்ரொஜெக்ட் நல்லா இருந்துச்சு… சோ அதுக்கு எல்லாருக்கும் ஒரு பிக் ரவுண்ட் ஆஃப் அப்லாஸ்…

கைதட்டல் முடிந்ததும்…
அண்ட் மோஸ்ட் importantly, நம்ம ப்ரொஜெக்ட்ல அவங்களுக்கு ரொம்ப புடிச்சி இருந்த பார்ட்… நிலா, அனு அண்ட் ரகு டீம் பண்ணது…
அவங்க ஹார்ட் ஒர்க்க நாம் appreciate பண்ணியே ஆகணும்…
வாங்க ப்ளீஸ்…
என்று ஆதி கூப்பிட…

நிலா மற்ற இருவருடன் அங்கே செல்ல எல்லாரும் அவர்களுக்கு கைகொடுத்து பாராட்டினர்…

ஆதி நிலாவுக்கு கைகொடுக்க…
நிலா,
“பாத்தியா நீ என்ன பாராட்டலனாலும்… இப்போ என் ஒர்க் பெஸ்ட்னு நீயே சொல்லிட்ட…” என்று விழிகளாலே சொல்ல.

ஆதி நிலாவை பெருமையாக பார்த்தான்… தன்னவளின் வெற்றி தனதல்லவா…

“அண்ட்… அவங்க future ப்ரொஜெக்ட்ஸ் எல்லாம் நமக்கே தரப்போறதா சொல்லிட்டாங்க… இது நமக்கு ஒரு பெரிய milestone…”
இத celebrate பண்றதுக்கு ஈவினிங் ஒரு பார்ட்டி arrange பண்ணி இருக்கோம்… என்று கூற…

அனைவரும் சந்தோஷத்துடன் ஆரவாரம் செய்தனர்.
பிறகு ஈவினிங் நடக்க போகும் பார்ட்டி பத்தி பேசிக்கொண்டு அனைவரும் அவரவர் அறைக்கு செல்ல…

நிலாவின் கையை தொட்ட தன் கையையே பார்த்துக்கொண்டு ஆதி உட்கார்ந்து இருந்தான்…

எந்த நொடி நீ என் மனசில் நுழைந்தாய் என்று தெரியல…
நானும் உன் மனசில் இருப்பேனா?…
என் மனசை சொன்னா நீ ஏத்துப்பியா நிலா?

அங்கே…
சுமி பிரேக் டைமில் தன் மொபைலை பார்த்தாள்…
அவன்தான் மெஸேஜ் செய்திருந்தான்…
“உன் அட்ரஸ் சொல்லு நேரில் வரேன்…” என்று…

அவள் அடையாரில் ஏதோ ஒரு தெருவின் பெயரை அனுப்பி விட்டு சிரித்துக்கொண்டு இருந்தாள்…

அவனோ உடனே, “ஈவினிங் வந்து உங்க வீட்டுல காலிங் பெல் அடிக்கறேன்…” என்று அனுப்பினான்.

ஹான் அடி என்று சிரித்துக்கொண்டு போனை வைத்துவிட்டு வேலையை தொடர்ந்தாள்…

மணி 5 ஆனதும் நிலாவை கூப்பிட போகலாம் என்று சுமி எழ நிலாவிடம் இருந்து போன் வந்தது.

“சுமி, ஈவினிங் டிப்பார்ட்மெண்ட்ல பார்ட்டி arrange பண்ணி இருக்காங்க ப்ரொஜெக்ட் கெடைச்சதுக்கு… அது 8 கு தான் முடியும்… நா அருண்கூட வீட்டுக்கு போறேன்… ” என்றாள் நிலா.

“சரி நிலா… அப்போ நாளை காலைல பாக்கலாம்… பை…” என்ற சுமி வீட்டுக்கு கிளம்பினாள்.

மாலை 6 மணிக்கு பார்ட்டி ஆரம்பிக்க…
ஆபிஸிலே decoration எல்லாம் செய்து இருந்தார்கள்…
கொஞ்சம் கேம்ஸ் விளையாடிய பிறகு அனைவரும் சாப்பிட செல்ல…

நிலாவையே பார்த்துக்கொண்டு இருந்தான் ஆதி…
அவள் சிரிக்கும் போது கண்களும் சேர்ந்து சிரித்தன…
யாரோ தன்னை பார்ப்பது போல் இருக்க திரும்பிய நிலா தன்னை பார்ப்பதற்குள் ஆதி பார்வையை வேறு பக்கம் திருப்பிக்கொண்டான்.

“இங்க தான் இருக்கானா… நம்மள பாத்துகிட்டு இருந்து இருப்பானோ… அந்த வேலைலாம் இந்த சிடுமூஞ்சி செய்யாது… நல்ல சிடுமூஞ்சி…” என்று சிரித்துக்கொண்டு திரும்பினாள் நிலா.

அவர்கள் டிப்பார்ட்மெண்ட்டை சேர்ந்த ஒருவன் ஆதி பக்கத்தில் நின்று கொண்டிருக்க…
“பாஸ்… ஒரு clarification காக கேக்குறேன்… அந்த பொண்ணு என்ன தான பாக்குது…? என்று கேட்க.

அவனை பார்த்து சிரித்த ஆதி, “அப்படியா கொஞ்சம் தள்ளி போய் நில்லு…” என்று கூறவும்.

அவன் தள்ளி போய் நின்று கொண்டான்.

இப்போது தற்செயலாக திரும்பிய நிலா ஆதியை பார்த்துக்கொண்டே தன் தலைமுடியை சரி செய்ய…

ஆதி, “இப்போ யாரை பாக்குது…?” என்றான்.

“சாரி பாஸ்… உங்களை தான் பாஸ்…” என்று அவன் நைசாக ஓடிவிட்டான்.

அனு, “நிலா நீ லவ் மேரேஜ் பண்ணிப்பியா? இல்ல arrangedஆ?” என்று கேட்க.

ஆதிக்கு கேட்கும்படி, “நான்லாம் லவ் மேரேஜ் பண்ரேனு வீட்டுல இருக்கறவங்களை கஷ்டப்படுத்த மாட்டேன்… எங்க அம்மா யாரை சொல்றாங்களோ… அவங்கள தான் கல்யாணம் பண்ணிப்பேன்…” என்று நிலா நக்கலாக சொல்ல.

ஆதியோ, “என்ன இவ நம்ம பேசுனத கேட்ட மாதிரி அப்பிடியே oppositeஆ சொல்லுறா…” என்று யோசிக்கலானான்.

பார்ட்டி ஒருவழியாக 8 மணிக்கு முடிய, நண்பர்களுடன் பேசிக்கொண்டு இருந்துவிட்டு எல்லாரும் கொஞ்ச கொஞ்சமாக கிளம்ப, நிலா அருணுக்கு கால் செய்ய போன் எடுத்தாள்…

அனு,”யார் கூட வீட்டிக்கு போற நிலா… நா வேணும்னா ட்ராப் பண்ணவா…?” என்று கேட்க.

“தாங்க்ஸ் அனு… பட் அண்ணன் வருவான்…” என்று நிலா கூறியதும் அவளும் கிளம்ப.

நிலா போன் எடுத்து அருணுக்கு கால் செய்யப்போக…
போன் நேரம் பார்த்து சுவிட்ச் ஆஃப் ஆனது…

ஒரு சிலரைத்தவிர அனைவரும் அந்நேரத்திற்கு கிளம்பி இருக்க…
பார்க்கிங்கில் நின்றுகொண்டு என்ன செய்வது என்று தெரியாமல் விழித்துக்கொண்டு நின்றிருந்தாள்.

நிலா கிளம்பியதும் தானும் கிளம்பலாம் என்று ஆதி அவனது காரில் காத்திருந்ததால் அவள் தவிப்பதை பார்த்துவிட்டு அவள் பக்கத்தில் வந்தான்.

“என்னாச்சு…” என்று ஆதி கேட்க…

“ஒண்ணுமில்ல…” என்று நிலா தயங்க…

“போன் வச்சிருந்தா போதாது… சார்ஜும் போடணும்…” என்று அவன் மொபைலை நீட்டினான்.

ஆதியை முறைத்துக்கொண்டே போனை வங்கியவள், அருணுக்கு கால் செய்ய…

போனை எடுத்த அருண், “நிலா, நா பெட்ரோல் இல்லாம அடையார் பக்கத்துல மாடிக்கிட்டேன்… பக்கத்துல பெட்ரோல் பங்க் இருக்கற மாதிரி தெரில… 2 hours ஆகும்… வெய்ட் பண்ணு…” என்று கூற.

“என்னது 2 hours ஆகுமா… சரி… அங்க எதுக்கு நீ போன… பெட்ரோல் காலி ஆகுறது கூட உனக்கு தெரியாதா…” என்று நிலா கத்த ஆரம்பிக்க…

“ஏ திட்டாத நிலா…” என்று அருண் அங்கே கெஞ்சிக்கொண்டு இருக்க.

ஆதி நிலா கையில் இருந்த மொபைலை கிட்டத்தட்ட பிடுங்கி, “ப்ரோ, நா ஆதி… உங்க தங்கச்சி கூட தான் ஒர்க் பண்றேன்… நா இவங்கள வீட்டுல விட்டுடறேன்…” என்று கூற…

நிலா, “நா வரல… நா வெய்ட் பண்ணி போய்க்கறேன்…” என்று சொல்லிக்கொண்டு இருக்கும்போதே அருணிடம் பேசிவிட்டு ஆதி போனை வைத்து விட்டான்.

“நா உன்… உங்கக்கூட… வரல… நா வெய்ட் பண்ணியே போய்ப்பேன்…” என்று நிலா கூற.

“சரி… என்கூட வந்தா 30 நிமிஷத்துல வீட்டுக்கு போயிடலாம்… இல்லன்னா 2 hours உங்க அண்ணன் வர்ற வரைக்கும் உன்கூட தான் உட்கார்ந்து இருப்பேன்… உன் இஷ்டம்” என்று கூறிவிட்டு ஆதி நிலா முகத்தை பார்க்க…

அவள் யோசிப்பதை பார்த்ததும், “என்ன தான் இருந்தாலும் என்ன மாதிரி ஒரு அழகான பையன்கூட 2 hours ஸ்பெண்ட் பண்ணனும்னு தான் உனக்கு தோணும்…” என்று வெறுப்பேற்ற.

முறைத்துக்கொண்டே காரில் ஏறினாள் நிலா…
காரில்,
வெண்ணிலவே வெண்ணிலவே விண்ணைத்தாண்டி வருவாயா… விளையாட ஜோடி தேவை…
என்ற சாங் ஓடிக்கொண்டு இருக்க…

ஆதியை திரும்பி நிலா முறைக்க…
என்ன என்பது போல் பார்த்தான் ஆதி.

பிறகு அவள் முறைப்பது எதற்கென புரிய, ஆதிக்கு சிரிப்பு தான் வந்தது…

“நா வேணும்னு வைக்கல நிலா…” என்று சிரிப்பை அடக்கிக்கொண்டு பாடலை நிறுத்தினான்.

“இப்போ எப்படி போகணும்?” என்று ஆதி கேட்க…
அவள் வழி சொல்ல மட்டும் வாய் திறந்தாள்…

ஆதி கூறியது போலவே 30 நிமிஷத்தில் அவள் வீடு வந்துவிட…

நிலா தாங்ஸ் சொல்லுவாள் என்று ஆதி ரெடியாக கைநீட்ட…

நிலா முறைத்துவிட்டு, “தாங்ஸ்…” என்று சொல்லிவிட்டு காரிலிருந்து இறங்கி உள்ளே சென்று விட்டாள்.

ஆதி அவள் முறைத்ததை எண்ணி சிரித்திக்கொண்டே வண்டியை திருப்பினான்.

அம்மா, “யார் கூட வந்த நிலா… அருண் எங்கே என்று கேட்க…” அவன் பெட்ரோல் இல்லாமல் நிற்பதையும் தன்னை ஆதி ட்ராப் செய்ததையும் சொல்ல…

“அவன் ஏண்டி அடையார் போனான்…” என்று லக்ஷ்மி கேட்க…

“எனக்கென்ன தெரியும்… உன் பிள்ளையை வந்ததும் கேளு…” என்று அம்மா மடியில் ஏறி படுத்துக்கொண்டாள்.

“சரி… ஆதியை ஏன்மா வீட்டுக்குள்ள கூப்பிடல…” என்று லக்ஷ்மி கேட்க.

“அதெல்லாம் எதுக்குமா…??” என்று நிலா சிடுசிடுத்தாள்.

“உனக்கு இவ்ளோ ஹெல்ப் பண்ணி இருக்கான் அந்த ஆதி… அவன ஏண்டி எப்போ பாரு திட்டற…” என்று லக்ஷ்மி கேட்க.

அதெல்லாம் உனக்கு தெரியாதுமா… அவனுக்கு ரொம்ப திமிர்…” என்று நிலா கூற.

“ஹ்ம்ம்… அப்படி ஒண்ணும் தெரியல… அப்படியே இருந்தாலும் உன்ன விட ஆதிக்கு கம்மியா தான் இருக்கும்” என்று லக்ஷ்மி சிரிக்க ஆரம்பித்தார்.

“போம்மா…” என்று சிணுங்கினாள் நிலா.

அருண் அப்போது தான் உள்ளே நுழைந்தான்.
“எப்படி டா வந்த?” என்று லக்ஷ்மி கேட்க.

“பிரண்ட் வந்தான்மா அந்த வழியா… அவன்கிட்ட பெட்ரோல் வாங்கி ஊத்தி… வெரி டயர்ட்…” என்று சொல்லிக்கொண்டே மேலும் கேள்வி கேட்பதற்கு முன் குளியலறை சென்று புகுந்து கொண்டான்.

“ஐயோ சாமி… இவ வீடு கண்டுபிடிக்கலாம்னு அந்த வழியா போனா… இப்படியா ஆகும் இன்னிக்கு…”

“நல்ல வேளை அம்மாட்ட எஸ்கேப் ஆகிட்டோம்…”

அம்மா போட்ட மொறு மொறு தோசையை சீக்கிரம் வாயில் போட்டுக்கொண்டு மொபைலுடன் தன் அறைக்கு சென்றுவிட்டான்.

“என்ன நிலா அதிசயமா இருக்கு… சாப்பிட்டுட்டு TV பாத்துகிட்டு வம்பு பண்ணிக்கிட்டு இருக்கிறவன்…
இப்படி வேக வேகமா ஓடுறான்… என்று லக்ஷ்மி ஆச்சர்யப்பட.

“ஆமா மா எப்போ பாரு போனும் கையுமா இருக்கான்…” என்று நிலாவும் வியந்தாள்.

மீண்டும் வருவாள்…

Comments

0 comments

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy