செய்திகள்,கதைகள், விமர்சனங்கள்

Ep – 12 மீண்டும் நிலா

2,595

மீண்டும் நிலா
Episode – 12
Written by – Saipriya.A


அருண் தன் அறைக்குள் சென்றதும் முதல் வேலையாக தன் ஃபேஸ்புக் மெஸெஞ்சரை ஓபன் செய்து நித்யாவுக்கு மெஸேஜ் அனுப்பினான்.

“ஹே, நீ 4th கிராஸ்ல தான உங்க வீடு இருக்குன்னு சொன்ன… விசாரிச்சி பாத்தேன்… 4th கிராஸ்ல வீடே இல்லையாம்…” என்றான்.

மெஸேஜ் tone கேட்டு மொபைலை எடுத்த சுமி, “விசாரிச்சா எப்டி தெரியும்…? வந்தா தான் தெரியும்…” என்றாள்.

“இப்போ வரேன்… இல்லன்னா என்ன பண்றது?” என்று அருண் கேட்க…

“நைட் நேரத்துல வெளில வராதீங்க… அழகான பையன பார்த்தா மோகினி அடிச்சிரும்…” என்று சுமி மெஸேஜ் அனுப்பி விட்டு சிரிக்க…

“விளையாடாத நித்யா… நீ ஒரு உண்மை கூட சொல்ல மாட்டற…” என்றான் அருண்.

அவன் கஷ்டம் அவனுக்கு தானே தெரியும்… சும்மா நித்யா சொன்ன அடையாளங்களை வைத்து அவள் வீட்டை கண்டுபிடிக்கலாம் என்ற யோசனை அலுவலகம் முடிந்து வந்த அவனுக்கு தோன்றாமல் இருந்து இருக்கலாம்…

“சரி நாளைக்கு நீயே ஒரு இடம் சொல்லு… அங்க மீட் பண்ணலாம்…” என்று அருண் கூற…

சுமிக்கு சட்டென்று புரையேறி விட்டது…

அவள் அம்மா, “என்னடி… தண்ணி குடி… அந்த போனை வைச்சிட்டுத்தான் சாப்பிடேன்…” என்று அவளை திட்ட…

மெஸேஜ் வராமல் போனதும் அவன், “சரி இன்னிக்கி எப்போ கால் பண்ணுவ??” என்று கேட்க…

“என்னடா இவன் இப்படி நம்பறானே நம்மள…” என்றானது சுமிக்கு.

ஆரம்பத்தில் அவனை முடிந்தவரை கிண்டல் செய்யவேண்டும் என்ற எண்ணம் மட்டுமே இருந்தது அவளுக்கு…

ஆனால் அவன் பேசுவது அவளுக்கும் பிடிக்க ஆரம்பித்து இருந்தது…

“இன்னும் 10 மினிட்ஸ்ல பண்றேன்…” சொல்லிவிட்டு 10 நிமிஷத்திற்குள் சாப்பிட்டு விட்டு அறைக்குள் வந்துவிட்டாள்.

அறைக்குள் வந்ததும் சுமி கால் செய்ய அவள் அழைப்புக்காகவே காத்திருந்தவன் உடனே அட்டெண்ட் செய்தான்.

அவன் வாழ்க்கையில் அவன் யார் அழைப்புக்காகவும் இப்படி இதுவரை காத்திருக்கவில்லை…
ஏன் என்று தெரியவில்லை… நித்யாவின் அழைப்பை ஏதிர்பார்த்தான்…

கொஞ்ச நேரம் பேசிக்கொண்டு இருந்துவிட்டு பிறகு அழைப்பை துண்டித்தவுடன் அவனிடம் இருந்து மெஸேஜ் வந்தது…
“என்ன பண்றீங்க?” என்று

“இப்போதான கால் கட் பண்ண…?” என்று அவள் சிரித்துக்கொண்டே ரிப்ளை செய்துவிட்டு…
“எத்தனை ப்ரொபோசல் வந்து இருக்கு உனக்கு? நீ எத்தனை பேருக்கு ப்ரொபோஸ் பண்ண… சொல்லு” என்று கேட்டாள்…

“நா ஒரு 0 பேருக்கு ப்ரொபோஸ் பண்ணி இருக்கேன்…” என்றான் அவன்.

இவளுக்கு இங்கே ஒரே சிரிப்பு… ஆச்சரியமும் கூட… நிலாவே அவள் அண்ணனை பற்றி கூற கேட்டு இருக்கிறாள்…
அவள் கேள்விப்பட்ட அருணின் சாயல் கூட இவனிடம் இல்லை…

“ஹே பொய் சொல்லாத…” என்று அவள் திரும்பவும் கேட்க.

“இல்ல… சீரியசா சொல்றேன்… பொண்ணு அழகா இருந்துச்சுன்னா பாப்பேன்… மத்தபடி…” என்று சிரித்தான்.

“சரி நீ ஒரு பொண்ண அழகுன்னு எதை வச்சி சொல்லுவ… சிவப்பா கருப்பா… ஒல்லியா குண்டா… அப்படி சொல்லு…” என்று அவள் கேட்க…

“Face களையா இருக்கணும்… கண்ணு… அப்றம் நல்ல ஸ்மைல்… சரி நீ சொல்லு… உனக்கு எத்தனை ப்ரொபோசல்?” என்று கேட்டான்.

“அட போங்க… சரி உங்களுக்கு சமைக்க தெரியுமா?” என்று கேட்டாள்.

“ஹான்… சிக்கன், மட்டன், பிஷ், காரகொழம்பு, சாம்பார், ரசம்… பிரியாணி மட்டும் எப்படி செய்யறதுன்னு தெரியும்… ஆனா செஞ்சது இல்ல…” என்று அவன் கூற…

சுமி மலைத்துப்போனாள்…
அவளுக்கு தெரிந்தது 2 மினிட்ஸ் நூடுல்ஸ் மட்டும் தான்…

“சே… உங்க wife ரொம்ப கொடுத்து வச்சவங்க ல… அவங்களுக்கு செஞ்சி தருவீங்களா?” என்று அவள் கேட்க.

அவன், “definitely…” என்று சொல்ல.

இவள் தன்னையும் அறியாமல், “ஹௌ cute…” என்று நினைத்தாள்.

“சரி நா போய் தூங்குறேன்…” என்று அவள் கூற…

அருணுக்கு அவளிடம் பேசிக்கொண்டே இருக்கவேண்டும் போல இருந்தது…

“எதுக்கு இவ்ளோ சீக்கிரம் தூங்க போற…?” என்று அவன் கேட்க.

“நேத்து லேட்டா தூங்கனதுக்கு அம்மாட்ட திட்டு வாங்கனேன்… அது மட்டும் இல்லாம dark circles வந்திடும்…” என்று சுமி கூற…

“சரி… தூங்கறதுக்கு முன்னாடி முகம் கழுவிட்டு போங்க… dark circlesலாம் வராது…” என்று அவன் கூற…

“இதுதான் உங்க அழகின் ரகசியமா?” என்று சிரித்துகொண்டே அவள் கேட்க.

“ஹ்ம்ம்… நல்லா தூக்கமும் வரும்…” என்றான்.

“தாங்ஸ் for the beauty டிப்… குட் நைட்” என்று அனுப்பி விட்டு தூங்கினாள்.

காலையில் எழுந்த உடன் முதல் வேலையாக என்ன மெஸேஜ் அனுப்பி இருக்கான் என்று பார்க்க…

அவன் இரவு அனுப்பிய குட் நைட் தான் இருந்தது.

“குட் மார்னிங்… இதுக்கு தான் சீக்கிரம் தூங்கணும்…” என்று அனுப்பியவள் போனை வைத்துவிட்டு அலுவலகம் கிளம்பலானாள்.

மறுபடி காலை சாப்பிடும்போதும் போனை பிரியாமல் எடுத்துக்கொண்டே வர சுமியின் அம்மா தலையில் அடித்துக்கொண்டு அவள் தட்டில் இட்லி உப்புமாவை வைத்தார்.

“நா எழுந்துட்டேன்… என்ன சாப்பாடு உங்க வீட்டுல…”என்று அருண் கேட்க.

“இட்லி உப்புமா” என்றவளிடம் “எனக்கு…?” என்றான்.

அவள் சிரித்துக்கொண்டே, “உங்களுக்கும் சேர்த்து நானே சாப்பிடறேன்…” என்று அனுப்ப.

அவன் படித்துவிட்டு, “கேடி… உப்புமா கூட தரமாட்டற…” என்று ரிப்ளை செய்தான்.

சுமி கிளம்பி நிலா வீட்டிக்கு சென்றாள்…
அன்றும் அருணை எங்கேயும் காணோம்…
அவன் வண்டி, ஷூ எல்லாம் இருந்தது…

என்ன இவன் கண்ணுலே படமாட்டறான்… முகத்துல என்ன ரியாக்ஷன்னு பாக்க தான 2 நாளா நா try பண்ணறேன்… போடா லூசு…

அவனை மனசுக்குள் அர்ச்சனை செய்து கொண்டே நிலாவுடன் அலுவலகம் கிளம்பினாள்.

நிலா முகத்தை உம்மென்று வைத்துக்கொண்டு வருவதை கவனித்த சுமி, “என்னாச்சு நிலா…?” என்று கேட்க.

நிலா முன்தினம் அருண் வரமுடியாமல் போனது ஆதியுடன் தான் வரும்படி ஆனது எல்லாவற்றையும் சொல்லி முடிக்க…

சுமிக்கு அதிர்ச்சியாக இருந்தது…
தான் விளையாட்டுக்கு ஏதோ ஒரு அட்ரஸ் சொல்ல போக…
அதை நம்பிக்கொண்டு போகும் அளவிற்கு அப்பாவியா இவன்…
சுமி மனசுக்குள் வருந்தினாள்…

அதற்குள் அவர்களின் அலுவலகம் வந்துவிட, “ஹ்ம்ம்… அப்புறம் என்ன… நேத்து அவர் தான் அக்கறையாக கொண்டு போய் ட்ராப் பண்ணிட்டாரே… ஆதி சார் கிரேட் தான்… நா தான் அன்னிக்கி சொன்னேன்ல… ஆதிக்கு உன்மேல அக்கறை ஜாஸ்தி தான் இப்போவாச்சும் நம்பு நிலா…” என்றாள்.

நிலா மறுபடி முகத்தை திருப்பிக்கொள்ள…
அவள் தாடையை பிடித்து திருப்பியவள்…
“யெஸ்… யு ஷுட் ட்ரஸ்ட் மீ…” என்று சொல்ல.

நிலா கடுப்பாகி சுமி கையை கடிக்க போக…
அவளிடம் தப்பித்து ஓடினாள் சுமி.

நிலா அவள் கேபினுள் நுழையப்போக…
“ஹாய்…” என்று குரல் கொடுத்தான் ஆதி.

“ஹை…” என்று சொன்ன பிறகே யாரென்று பார்க்க…

ஆதியை அங்கே எதிர்பாராததால் விழிக்க ஆரம்பித்தாள்…

“ஒண்ணும் இல்ல நிலா… நைட் safeஆ வீட்டுக்கு போய்ட்டியா?” என்று கேட்க.

இவன்தானே வீட்டு வாசலில் நேத்து ட்ராப் பண்ணான் என்று அவள் ஆதியை முறைக்க…

“சரி… நீ ஒர்க் பாரு… அப்புறம் பார்க்கலாம்… பை…” என்று ஆதி கிளம்பயதும்…

நிலா, “அப்புறம் பார்க்கலாமாம்… வெவே வெவே…” என்று அவனை போலவே சொல்லிவிட்டு அவள் வேலையில் கவனம் செலுத்தலானாள்…

மீண்டும் வருவாள்…

Comments

0 comments

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy