செய்திகள்,கதைகள், விமர்சனங்கள்

Ep – 2 மீண்டும் நிலா

1,610

மீண்டும் நிலா
Episode – 2
Written by – Saipriya.A


நிலா அருணிடம் பேசிக்கொண்டே தற்செயலாக பக்கவாட்டில் சென்ற ஒரு வாகனத்தை பார்த்தாள்.

அந்த பைக்கை ஓட்டிசென்றவன் ஸ்டாண்ட் லைட்டாக தான் எடுத்திருந்தான். கண்டிப்பாக அவன் எந்த ஸ்பீட் பிரேக்கராவது இடறி விழுவான் என்று நன்றாக தெரிந்தது நிலாவிற்கு.

இவள் யோசித்து வாய் திறக்கும் முன் அவன் இவர்களை கடந்து போயிருந்தான்.

“ஹலோ… ஹலோ… உங்களைத்தான்…”

அவன் கவனிக்கவில்லை.

“அருண் கொஞ்சம் வேகமா போயேண்டா!!”

“ஏன் நிலா எப்போவும் ஸ்லோவா போ னு கத்துவ??”

அருண் வேகம் எடுத்ததும் அவசரத்தில்,
“டேய் லூசு…. உன்னதாண்டா… காதுல விழல?? வண்டி எடுக்கும் போது ஸ்டாண்ட் ஒழுங்கா எடுத்தோமானு பாக்கமாட்டியா?”

அவன் சட்டென்று திரும்ப, கவனித்த அவளுக்கு பக்கென்று இருந்தது. அவன் பார்ப்பதுக்குள் ஒளிய வேண்டுமே… சட்டென குனிந்தாலும் அவளை அவன் பார்த்துவிட்டான். அன்று பார்த்த அதே பார்வை.

“ஐயோ இவனா அவசரத்தில லூசு னு வேற சொல்லிடேனே… போச்சு…”

அவன் வண்டியை நிறுத்தி ஸ்டாண்ட் எடுப்பதற்குள்,

“அருண் சீக்கிரம் போடா…”

“என்ன நிலா இன்னிக்கி சீக்கிரம் சீக்கிரம் னு கத்துற…”

“அப்றம் சொல்றேன் வேகமா போடா…”

வண்டியை எடுத்து அவனை கடந்ததும்
“அப்பாடா தப்பிச்சிட்டோம்…” என்று பெருமூச்சு விட்டாள்.

“நிலா என்னாச்சு… என்னமோ பயந்த மாதிரிலாம் ரியாக்ஷன் குடுக்கிற..ஹே யாரு அது… உனக்கு ஏதும் தெரிஞ்சவங்களா??”

அப்போது நம் நிலாவின் “நல்ல” நேரம் சிக்னல் விழுந்தது.

சரியாக அவன் வந்து அவர்கள் பக்கத்தில் வண்டியை நிறுத்த இம்முறை இதயம் வேகமெடுக்கும் சத்தம் நிலாவிற்கு கேட்டது.

நிறுத்திய அவன் அருணை பார்த்து ஸ்நேகமாக சிரித்தான்.
“தாங்க்ஸ் ப்ரோ…சொல்றதுக்குள்ள உங்க வண்டி போயிடுச்சு…” என்றான்.

அருண்,” அதனால என்ன ப்ரோ…பரவால்ல! பாத்து போங்க…” என்றான்.

இம்முறை கோபப்படுவது நிலாவின் முறையானது.
எவ்ளோ திமிர் இருந்தா ஸ்டாண்ட் எடுக்க சொன்னது நானு… thanks அண்ணனுக்கா…
நம் பக்கம் திரும்ப கூட இல்லை. பெரிய இவன்னு நினைப்பு.

அதற்குள் சிக்னல் விழ அவன் பைக்கில் விரைந்தான்.

“நிலா…”

“ம்ம்..”

“அவர பாத்தியா நீ திட்டியும் என்கிட்ட thanks சொல்றார். such a gentleman!” என்றான்.

“ம்ம்…” (“நல்ல வேளை நம்மள திட்டல…”, மனசுக்குள் சொன்னாள்.)

“சரி நிலா… உன் காலேஜ் வந்துடுச்சு பாரு… பை… ஒழுங்கா படி… யார்கிட்டயும் வம்புக்கு போகாத… ஈவினிங் வரேன். வெய்ட் பண்ணு…”, அருண் கூற.

“Ok…பை…”, அண்ணனிடம் சொல்லிவிட்டு க்ளாஸ் நோக்கி நகர்ந்தாள்.

நிலாவின் ஞாபகம் அந்த நாளை நோக்கி சென்றது…

காலேஜில் அப்போது “ஸ்போர்ட்ஸ் டே”க்கான பிராக்டிஸ் நடந்தது.
அவள் கிளாசில் அவளும் ரம்யாவும் ஷட்டில் கார்க்கில் பேர் கொடுத்து இருந்தார்கள்.
கிரவுண்டில் ஆண்கள் பிராக்டிஸ் செய்ததால் அவர்கள் இருவரும் கிரவுண்ட் போகாமல் அவர்கள் பில்டிங் அருகில் விளையாடிக் கொண்டிருந்தார்கள்.

கார்க் பறந்து கொஞ்சம் தூரமாக விழுந்தது. அங்கே சென்றுகொண்டு இருந்த ஒரு வாலிபனை பார்த்த ரம்யா அவனை கூப்பிட்டு பந்தை எடுக்க சொன்னாள்.

ஆனால் அவன் பதிலே சொல்லாமல் இவர்கள் பக்கம் பார்த்துவிட்டு அலட்சியமாக சென்றுகொண்டிருந்தான். அதை பார்த்ததும் ரம்யாக்கு எரிச்சலானது.

“ஏய்… நில்றா…! நா சொல்லிட்டே இருக்கேன்.. நீ பாட்டுக்கு போற…”, ரம்யா கூற…

இம்முறை நின்ற அவன் ரம்யாவை நேராக பார்த்தான். அவன் கண்களில் அவ்வளவு கோபம். அவனை பார்க்க ஸ்டூடெண்ட் போல இல்லை. நல்ல உயரம். திடமான உடல்வாகு. Professor என்றால் நம்பலாம்.

“நா உனக்கு பந்து பொறுக்கி போடதான் காலேஜ் வந்தனா? பேசாம போயிடு… என்ன டென்ஷன் ஆக்காத…”, அவன்.

“டென்ஷன் ஆனா என்னடா பண்ணுவ…”, ரம்யா கூற.

அவன் கை ஓங்கியே விட்டது.

நிலா, “ரம்யா நிறுத்துடி… வா போகலாம்” என்று அவளை இழுத்து கொண்டு போனாள்.

அவன் தன்னையும் முறைத்தது இன்னும் ஞாபகம் இருந்தது.

“எல்லாரையும் மிரட்டுற நாமதான் ரௌடினு நெனச்சா… கடைசில இவன் நம்மள மிஞ்சிருவான் போல…”

“நா வேற லூசுனு வாய விட்டுட்டேன். எப்போவாது அவன்கிட்ட மாட்டுனா கேப்பானோ…”.

“கேட்டா…
அப்போ பாத்துக்கலாம். நா ஏன் அவனை இனிமே பாக்கபோறேன்…”

சிரித்திக்கொண்டே கிளாசில் நுழைந்து அவள் இருக்கையில் அமர்ந்தாள்.

மீண்டும் வருவாள்…

Comments

0 comments

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy