செய்திகள்,கதைகள், விமர்சனங்கள்

Ep – 4 மீண்டும் நிலா

1,735

மீண்டும் நிலா
Episode – 4
Written by – Saipriya.A


“ஹலோ… சொல்லு சுமி… என்ன பீச் போகணுமா… இந்த வெய்யில்லையா? சரி ஈவினிங் 4க்கு போலாம்…”
பேசிவிட்டு மொபைலை வைத்துவிட்டு அம்மாவை தேடிச் சென்றாள் நிலா.

“அம்மா… சுமியும் ரம்யாவும் பீச் போலாம்னு குப்பிடராங்க மா… நா போய்ட்டு வரட்டுமா??” கொஞ்சி கொஞ்சி கேட்டாள்.

“அதான் என் நிலாகுட்டிக்கு பீச்னா எவ்ளோ புடிக்கும்னு தெரியுமே… சண்டே தான… போய்ட்டு வாம்மா…” என்று கூறி கன்னத்தில் முத்தம் வைத்தார் அவள் அம்மா.

“Thank யூ மா… லவ் யூ…” அம்மாவுக்கு பதில் முத்தம் வைத்து அறைக்கு ஓடினாள் நிலா.
என்ன ட்ரெஸ் போடலாம் என்று தேட ஆரம்பித்தாள்.

மீன் வாங்கிக்கொண்டு வீட்டிற்குள் நுழைந்த அருண்… “என்ன நிலா ட்ரெஸ் தேடிட்டு இருக்க… வெளில போறீங்களா… யாருலாம் வரா… உன் பிரண்ட்ஸ் intro குடேன்” என்றான்.

“ஏ ஓடி போய்டுடா… அடிச்சிருவேன்… ஏற்கனவே என் பிரண்ட்ஸ பார்த்தா குருகுறுனு பாக்கிறயாம்… compaints வருது…” என்று மிரட்டியதும்.

“Ok… நோ ஒரிஸ்… கூல் டா” என்று தங்கையிடம் எஸ்கேப் ஆனான்.

மதியம் மீன்குழம்பு மீன்வருவலை ஒரு பிடி பிடித்துவிட்டு குட்டி தூக்கமும் போட்டு கடற்கரை கிளம்ப ஆயுத்தமானாள் நிலா.

கடற்கரை…

சிறுவயதில் இருந்தே அவளுக்கு மிகவும் பிடித்த இடம்…

என்ன எமோஷனில் கடற்கரைக்கு போனாலும் அது கடைசியில் சந்தோஷ எமோஷன் ஆக மாறிவிடும் ஆச்சர்யம் அவளுக்கு புதிதல்ல…

அவள் தோழிகள் எப்போது கடற்கரைக்கு அழைத்தாலும் குதித்துக்கொண்டு கிளம்புவாள்.
எத்தனை முறை பார்த்தாலும் அவளுக்கு அந்த கடலலைகள் சலிப்பதில்லை…

தூரத்தில் தெரியும் கடலை ரசித்தபடி நடந்தனர் நிலாவும் சுமியும்.

“ரம்யா எங்கடி?” நிலா கேட்க.

“தெரில நிலா… இரு டி கால் பண்றேன்…” என்று சுமி நகர்ந்தாள்.

கடலலைகளை பார்த்துக்கொண்டே சென்றவளுக்கு பக்கென்று ஆனது.

ஒரு சிறு குழந்தை கடலில் விழுந்த பந்தை எடுக்க கடலை நோக்கி சென்று கொண்டிருந்தது.

நிமிஷத்தில் அந்த குழந்தையை நோக்கி இருவர் விரைந்தனர்.

குழந்தையை நெருங்கியதும் அந்த குழந்தையை பிடிக்க கைநீட்ட தடுமாறி யார்மீதோ மோதினாள் நிலா.

நிலைதடுமாறி சரியப்போனவளை ஒற்றைக்கையால் பிடித்து நிறுத்தினான் ஆதி.

கண்ணிமைக்கும்பொழுதில் நடந்த நிகழ்வையே உணராமல் கடலில் விழப்போன பயத்தில் கண்களை இறுக மூடி இருந்தாள் நிலா.

அதற்குள் குழந்தையின் பெற்றோர் வந்துவிட, “குழந்தையை இப்படியா விடுவது…” என்று கடிந்துகொண்டான் ஆதி.

பேச்சுக்குரல் கேட்டு கண்களை திறந்த நிலா, ஐயோ இவனா என்று கண்ணை மறுபடியும் மூடிக்கொள்ள ஆதிக்கு சிரிப்புதான் வந்தது.

அவளுக்கு கண்திருஷ்டி படக்கூடாது
என்று
கடவுள் வைத்தனுப்பிய திருஷ்டிப்பொட்டு

அவள் கன்னத்து மச்சம்.

ஆதி உனக்கு கவிதைலாம் வருதே என்று mindvoice ஒலிக்க.

நிலாவின் செல்போன்

உன் கைகள் கோர்த்து
உன்னோடு போக
என் நெஞ்சம் தான் ஏங்குதே
தினம் உயிர்வாங்குதே
உன் தோளில் சாய்ந்து
கண்மூடி வாழ
என் உள்ளம் அலைபாயுதே
ஹையோ தடுமாறுதே…

என்றது.

“அதோ அங்க இருக்காடி… வா போகலாம்” என்று ரம்யாவை அழைத்துக்கொண்டு சுமி பக்கத்தில் வந்துவிட…

அவளை எழுப்பாமல் அவர்களிடம்,
“உங்க பிரண்ட் மயக்கமா இருக்காங்க… பாத்துக்கோங்க…” என்று சொல்லிவிட்டு போனான்.

அவன் போனதும் கண்களைத்திறந்து நிலா “அவன் போய்ட்டானா?” என்று கேட்க.

சுமியோ, “என்னடி நடக்குது இங்க…?” என்று அலறினாள்.

“ஒண்ணும் இல்லடி… நா அந்த பாப்பாவ அலைல இருந்து தூக்க போனனா…
அப்போ தெரியாம விழுந்துட்டேன்டி… அப்புறம் அவன் என்ன அன்னிக்கு மாறி வேணும்னு பண்ணுறேன்னு சொல்லிடான்னா??
அதுக்கு தான் கண்ணை மூடிட்டு ஆக்ட் குடுத்தேன்” என்றாள்.

“இவ பெரிய தைரியசாலி… நீச்சல் கூட தெரியாம நீ காப்பாத்த போறவளா???” என்று ரம்யா கேட்க.

“ஆதியும் காப்பாத்த வரார்னு சொல்லி இருந்தா நானாச்சும் வந்து இருப்பனே… ரம்யாவை கூப்பிட போன gapல நீ போய்ட்டியே டி நிலா… நீ இருந்த இடத்துல நா இருந்துருக்க கூடாதா…” என்று சுமி புலம்ப ஆரம்பித்தாள்.

“ஆமா அவன் காப்பாத்த வருவான்னு எனக்கு தெரிஞ்சி இருந்தா நா போய் இருக்கவே மாட்டேன்…” என்று நிலா பில்ட்அப் கொடுக்க.

“நீ சாப்பிட தான டி பீச் வந்த? அப்பறம் எதுக்கு feel பண்ற… வா மிளகாய் பஜ்ஜி சாப்பிடலாம்…” என்று சுமியை இழுத்துக்கொண்டு
“நிலா இங்கேயே இரு… நாங்க போய் வாங்கிட்டு வந்துடறோம்… என்று போனாள்
ரம்யா.

“ம்ம்…” என்று கூறிவிட்டு நிலா கடல் அலைகளை பார்த்தாள்.

கண்ணை தொறந்து பாத்தப்போ சிரிச்சிட்டு இருந்த மாதிரி தெரிஞ்சது… திமிரு புடிச்சவன்… எப்போ பாரு அவன்கிட்டேயே ஏன் என்ன மாட்டி விடுற ஆண்டவா… என்று மேலே பார்த்துக்கேட்டாள்.

தூரத்தில் அதை இரு கண்கள் ரசித்ததை அவள் அறியவில்லை.

மீண்டும் வருவாள்…

Comments

0 comments

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy