செய்திகள்,கதைகள், விமர்சனங்கள்

Ep – 6 மீண்டும் நிலா

1,657

மீண்டும் நிலா
Episode – 6
Written by – Saipriya.A


அந்த நாள் வந்தது…
காலையில் எழுந்து ரெடியாகி அம்மா காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிவிட்டு
சுமிக்காக காத்திருந்தாள் நிலா.

வெள்ளை நிற சுடிதார் அணிந்திருந்த அவள் நிலா தானோ என்று எண்ண வைக்க…

“Certificates எடுத்து வச்சிட்டியா பட்டுக்குட்டி…” என்று கேட்ட அம்மாவிடம் தலையை ஆட்டி சிரித்தாள்.

“கண்ணு படபோகுது… சுத்திப்போடுமா… உன் பொண்ணுக்கு பொறுப்பு வந்துடுச்சு…” என்றான் அருண்.

நிலா கையை ஓங்குவதற்குள் சுமி வந்துவிட, “Thanks சுமி… நல்ல நேரத்துல வந்த… பட்டுக்குட்டியாம்… பேய்குட்டிய காமிச்சு தங்கச்சினு ஏமாத்தராங்க” என்று சிரித்தான் அருண்.

சுமி முன்னாலே கிண்டல் அடித்தது எரிச்சலை கிளப்ப, அலுவலகத்திற்கு நேரம் ஆகி விட்டதால், “ஈவினிங் வருவேன்ல… வீட்டுல தான இருப்ப… இரு இரு…” என முறைத்து விட்டு அருண் அடித்த காமெடிக்கு சிரித்த சுமியின் தலையில் ஒன்று வைத்துவிட்டு ஸ்கூட்டியில் ஏறினாள்.

பிள்ளையார் கோவில்…
நிலாவும் சுமியும் கண்மூடி நிற்க,
“பிள்ளையாரப்பா… எப்பவும் போல நீ என் கூடவே இருந்து என்ன வழிநடத்து…”
என்று நிலா வேண்டிக்கொண்டு இருக்க.

அவளுக்கு முன்னே வேண்டுதலை முடித்த சுமி கண்களை திறந்து பார்வையை பக்கத்தில் ஓட்ட…

“அட இங்க கண்மூடி நிக்கறது ஆதி மாதிரி இருக்கே… ஆதி மாதிரி இல்ல… ஆதியே தான்… எல்லா சோசியல் மீடியாலயும் தேடுனதுக்கு பதிலா இங்க இருக்க கோவில்ல தேடி இருக்கலாம்… கண்ண மூடி இருந்தாலும் எவ்ளோ அழகு…”

“ஆனா இவன் நிலாக்கு எதிர்ல நிக்கறானே… கண்ண திறந்ததும் நம்மள பாக்குற மாதிரி நின்னுப்போம்…”

மைண்ட்வாய்சில் பேசி நிலாவை பக்கவாட்டில் தள்ளி அவள் ஆதியின் எதிரில் நிற்க முயற்சி செய்ய…

கண்களை திறந்த நிலா எதிரில் அதே நேரத்தில் கண்களை திறந்த ஆதி முகத்தில் விழித்தாள்.

“பிள்ளையாரப்பா… இவன ஏன் இன்னிக்கி கண்ணுல காட்டுற… கொஞ்ச நாள் இந்த திமிர் பிடிச்சவன பாக்காம நிம்மதியா இருந்தேன்…” என்று நிலா பிள்ளையாரிடம் சண்டையிட.

ஆதியோ, “Thanks விநாயகா… எங்கடா இந்த பொண்ணு… கொஞ்ச நாளா லைஃப்ல காணோமேனு பீல் பண்ணிட்டு இருக்கப்போ இவள மறுபடி என் கண்ணுல காட்டுற…” என்று புன்னகைக்க.

“இப்போ கூட நக்கலா சிரிக்கிறான்… கண்டுக்கவே கூடாது…” என்று அர்ச்சகர் கொடுத்த விபூதியை வாங்கிக்கொண்டு வேகமாக அந்த இடத்தை விட்டு நகர்ந்தாள் நிலா.

சுமியோ குழப்பத்துடன், “கண்ண திறந்தா நேரா பாக்கமாட்டாங்களோ… சரி… இனிமே கரெக்ட் ஆஹ் பிளான் பண்றோம்…” என்று நினைத்துக்கொண்டு நிலாவை பின்தொடர்ந்தவள் சற்று தள்ளி வந்ததும்,

“நிலா அவன பாத்தியாடி… ஆதிடி…” என்று கூச்சலிட

“எந்த ஆதி… எனக்கு ஞாபகம் இல்ல…” என்றபடி நிலா செல்ல.

“எதுக்கு இவ இப்படி முகத்தை திருப்பிட்டு போறா… பாத்தும் பாக்கத மாதிரி… நம்மள நேருக்கு நேரா பார்த்து மைண்ட்வாய்ஸ்ல கொஞ்ச நேரம் பேசிட்டு… ஞாபகம் இல்லயாமே… மறந்து இருக்குமோ…” என்று யோசித்துக்கொண்டே ஆதி செல்ல.

அவள் அதற்குள் போயே விட்டாள்.
“ஹ்ம்ம்… சரி இருக்கட்டும்… நமக்கு என்ன… நா என்ன இவ பின்னாலயா சுத்திட்டு இருக்கேன்… நாம ஆபிஸ் போவோம்…” என்று கோவிலை விட்டு வந்து பைக்கில் அலுவலகம் விரைந்தான்.

“வெல்கம் டு ராஜ் பேமிலி டியர் ஃபிரஷர்ஸ்… நீங்க எங்க பேமிலில இணையறது எங்களுக்கு ரொம்ப சந்தோஷம்… உங்க திறமையால நம்ம கம்பனி இன்னும் வளரணும்… Wish you all the best…” என்று HR மானேஜர் கூற ஒருவரை ஒருவர் பார்த்து புன்னகைத்தனர் நிலாவும் சுமியும்.

அவர் பேசி முடித்ததும் அவரவர்க்கு ஒதுக்கப்பட்ட கேபினுக்குள் செல்ல…

நிலா டிசைனிங்கில் ஆர்வம் காட்டியதால் டிசைனிங் பகுதியில் உள்ள கேபின் அவளுக்கு கொடுத்து இருந்தனர்.

சுமி Database மேனேஜ்மென்ட்டில் சேர்க்கப்பட்டாள்.

பிரேக்கில் சந்தித்த தோழிகள் Cafeteria சென்று அமர்ந்தனர். சாண்ட்விச்சை கடித்துக்கொண்டே

“நிலா டீம் மெம்பேர்ஸ் எல்லாம் ஒகேவா? என்று சுமி கேட்க.

“எல்லாரும் நல்லா தான் பழகறாங்க சுமி..” என்று நிலா கூற.

“Designingல பாய்ஸ் ஆவது அதிகம் இருப்பாங்கல… இங்க ஒரே girls தான் டி… நீ மட்டும் என்ஜாய் பண்ற” என்று சுமி சிணுங்க.

“உனக்கு என்ன பத்தி தெரியும் சுமி… எல்லார்கிட்டயும் ஒரு லிமிட்டோட தான் பழகுவேன்… என்ன இந்த மாதிரி பேசுன அடிப்பேன்…” என்று நிலா சுமியை அடிக்க எழுந்து போக.

அப்போது Cafeteria நுழைந்தவன் யாரென்று பார்த்ததும் நிலா அதிர்ந்தாள்.

மீண்டும் வருவாள்…

Comments

0 comments

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy