செய்திகள்,கதைகள், விமர்சனங்கள்

Ep – 9 மீண்டும் நிலா

1,729

மீண்டும் நிலா
Episode – 9
Written by – Saipriya.A


“ஹே நிலா… வீட்டுக்கு வர்ற ஐடியா இருக்கா…” என்று கேட்டபடி வந்த சுமியை நிமிர்ந்து பார்த்த நிலா அப்போதுதான் தன் கைக்கடிகாரத்தை பார்த்தாள்.

அது மணி 6 என்று காமிக்க…
“ஓ மை காட்ட்… டைம் பாக்கவே இல்ல சுமி… நெறய வேலை அதான்…”

“சரி வா… எழுந்திரு… போலாம்…” என்று நிலாவின் கைப்பையை எடுத்துக்கொண்டு அவளையும் இழுத்துக்கொண்டு சுமி கிளம்பினாள்.

“இனிமே இப்படி பண்ண… உன்ன இங்கேயே விட்டுட்டு நா மட்டும் வீட்டுக்கு போயிடுவேன்…” என்று சுமி மிரட்ட.

சிரித்த நிலா, “இப்படி தான் அருணும் சொல்வான் சுமி… ஆனா நீங்க ரெண்டு பேரும் என்ன விட்டுட்டு அப்டிலாம் போமாட்டீங்க…” என்றாள்.

“இதை தெரிஞ்சி வச்சிட்டு நல்லா ஏமாத்து…” என்றபடி சுமி வண்டியை கிளப்பினாள்.

தன் வீட்டில் இறங்கி உள்ளே சென்றவள் வழக்கம் போல அம்மா மடியில் படுத்துக்கொண்டு இருந்துவிட்டு அப்படியே உறங்கியும் விட்டாள்.

“இங்க பாரு அருண்… நிலாவுக்கு ரொம்ப அதிகமா வேலை தராங்களா… எவ்ளோ டயர்டா தூங்கிட்டா இப்படியே…” என்று லக்ஷ்மி வருந்த.

“ஒரு நாளாச்சும் இப்படி எனக்காக ஃபீல் பண்ணி இருக்கியா நீ…” என்று முகத்தை திருப்பி கொண்டாலும் உடனே,
“அம்மா… பேசாம நா ஆதிய போய் பார்த்து இவள பார்த்துக்க சொல்லி ஹெல்ப் கேட்டுட்டு வரவா?” என்றான்.

“அதானே… உன் தங்கச்சி மேல உனக்கு பாசம் ஜாஸ்தி தான்னு நிரூபிச்சிட்டடா அருணு… முதல்ல அதை செய்…” என்றார் லக்ஷ்மி.

அடுத்த நாள் நிலாவை பிக்கப் செய்ய வந்த சுமி வீட்டிற்குள் சென்றாள்.

நிலா அன்றும் அசந்து தூங்கி விட, “வா சுமி… 5 மினின்ட்ஸ்… தோ ரெடி ஆகிட்டேன்…” என்று சொல்லி சுமியை உட்கார வைத்தாள்.

அருண், “நிலா…” என்று கூப்பிட்டு கொண்டே வர…

சுமியை பார்த்த உடன் சிரிக்க ஆரம்பித்தான், “என்ன சுமி… இந்த ட்ரெஸ் எப்போ எடுத்தது… உண்மையை சொல்லு 8th படிக்கும்போது எடுத்தது தான…” என்று கலாய்க்க…

பொங்கி வந்த கோபத்தை அடக்கிக்கொண்டு சுமி அமைதியாக நிற்க…

“சும்மா இரு அருண்…” என்று அருணை அடக்கிய நிலா.

“வாடி போலாம்…” என்று சுமியை இழுத்துக்கொண்டு கிளம்பினாள்.

சுமி மனசுக்குள் அருணை திட்டிக்கொண்டே வண்டி ஓட்டினாள்.
அலுவலகம் வந்ததும் அவளது கேபினை நோக்கி நடந்த சுமி பொத்தென்று அவள் இருக்கையில் உட்கார்ந்தாள்.

வேலையில் கவனம் செலுத்த முடியாமல் கோபம் பொங்க…

“நா பொறுத்து பொறுத்து போறேன் நிலா அண்ணனாச்சேனு… அவன் ரொம்ப ஓவரா போய்ட்டு இருக்கான்…”

சுமிக்கு அன்று நடந்தது நினைவுக்கு வந்தது.
அவள் அன்று வழியில் ஒரு பாம்பை பார்த்து பயந்து போய் நிலா வீட்டுக்கு வந்து இருந்தாள்.
நிலாவின் அம்மா, “என்னடி ஆச்சு… ஒரு மாதிரி இருக்க?” என்று கேட்க.

“ஆன்ட்டி… வழில ஒரு பாம்பு… எவ்ளோ கிட்ட வந்துச்சு தெரியுமா… பக்கத்துல ரோட்ல இருந்தவங்க பாத்து சொல்லலனா… வண்டியை பாம்பு மேல ஏத்தி இருப்பேன்…” என்று சுமி பதறிப்போய் சொல்லி முடிக்க…

அதை கேட்டுக்கொண்டே உள்ளே வந்த அருண், “ஏம்மா… பாம்பு பாத்துட்டு வந்தா அதிகமா பவுடர் போட்டுட்டு வரணுமா…” என்று கேட்டுவிட்டு சிரிக்கலானான்.

சுமி தன்னிச்சையாக தன் முகத்தை தொட்டுபார்க்க…
அதற்கும் அருண் சிரித்தான்.

இன்று நினைத்தாலும் சுமிக்கு கோபம் வந்தது.
“எப்போ பாரு இவனுக்கு என்ன கலாய்க்கறது தான் வேலையா… நா திரும்பி எதுவும் பண்ணமாட்டேன்ற தைரியம் தான… உன்ன இப்போ நான் வச்சு செய்யறேன்… அருண் ஜஸ்ட் வெய்ட் அண்ட் வாட்ச்…”

சிஸ்டெமை ஆன் செய்து தன் முகநூலை லாகின் செய்தாள்.
வேண்டாம்…
இவனுக்கு நா வேற ஐடியா பண்ணிட்டேன்…

Create new accountஐ கிளிக் செய்தாள்.
என்ன பேர் வைக்கலாம்…
ஹான்… நித்யா…
ஓகே என்ன போட்டோ வைக்கலாம் ப்ரொபைல் pictureல…
சமந்தா…
Searchல போய்… அருண் ராமகிருஷ்ணன் சென்னை…

இதோ இருக்கானே… ப்ரொபைல் பிக் பாத்தியா… Coolers இல்லாம போஸ் குடுக்க மாட்டாரா இவரு…

ஹான்… Request சென்ட்…
Done…
அக்ஸப்ட் பண்ணாம போன நீ தப்பிச்ச… இல்ல… ஹிஹி…
சிரித்துக்கொண்டே logout செய்து தன் வேலையில் ஆழ்ந்தாள் சுமி.

அங்கே நிலாவின் நிலைமையோ படுமோசம்…
தன் டிசைன் perfect என சொல்ல வைக்க வேண்டும் என்று ஓய்வு இல்லாமல் கணினியை முறைத்துக்கொண்டு உட்கார்ந்து இருந்ததில் தலை வலித்தது.

சரி காஃபீ குடிக்கலாம் என்று கோப்பையுடன் எழுந்தவள் pantry வரை போனாள்.

அங்கே ஆதியின் பேச்சுக்குரல் கேட்கவே தயங்கி வெளியில் நின்றாள்.

அவள் கேட்க கூடாது என்று நின்றாலும் அவள் காதில் விழுந்தது இந்த வார்த்தைகள், “அம்மா… ஏன் இப்படி ஆபிஸ்ல இருக்கும்போது கால் பண்ணி இருக்கீங்க… எப்போ பாரு கல்யாணம்… பொண்ணு பாக்கிறேன்னு… நீ ஏன்மா கஷ்டப்படுற… அதெல்லாம் நானே பாத்துக்கிறேன்… ஆமா நா லவ் பண்ணி தான் கல்யாணம் பண்ணிப்பேன்… நீ எனக்கு அட்வான்ஸ் விஷ் பண்ணிட்டு போன் வை… குட்… பை…”

“இந்த சிடுமூஞ்சிய யார் லவ் பண்ணுவா…??” என்று தனக்குள் சிரித்துக்கொண்டாள்.

ஆனால் அந்த சிடுமூஞ்சி அவள் மனதில் நுழைந்து வெளியே போக மாட்டேன் என்று அடம்பிடிக்கப்போவதை அவள் அறியவில்லை.

மீண்டும் வருவாள்…

Comments

0 comments

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy