செய்திகள்,கதைகள், விமர்சனங்கள்

Ep – 1 மீண்டும் நிலா

1,903

“ஹே நிலா…

என்னடி பண்ணிட்டு இருக்க… இன்னுமா நீ ரெடியாகல… லேட் பண்ணா உன்னை இங்கேயே விட்டுட்டு போயிடுவேன்…”

கிட்டத்தட்ட கத்திக்கொண்டு இருந்தான் நிலாவின் அன்பு அண்ணன் அருண்.

நிலாவும் அருணும் இரட்டையர்கள்… ஒரு நிமிட இடைவெளியில் பிறந்த அவனை என்னதான் அண்ணனாக மதிக்கவில்லை என்றாலும் தன் அண்ணன் மேல் அலாதி பிரியம் உண்டு அவளுக்கு.

அருண் மட்டும் என்னவாம்…
தங்கை நிலாவை யாரும் ஏதும் சொல்ல விடமாட்டான்.

நிலா இப்போது இறுதியாண்டு பொறியியல் பயிலும் மாணவி.
அருண் இளங்கலை படித்து தற்போது ஐடீயில் பணிபுரிந்து வருகிறான்.
நிலா இயற்கையாகவே மிகுந்த கோபமும் பிடிவாத குணமும் உடையவள். தான் நினைத்ததை சாதிக்க எந்த எல்லைக்கும் செல்வாள். ஆனால் அதற்காக நியாயம் அற்ற முறையில் எவரையும் காயப்படுத்த மாட்டாள்.

“ஏ தடியா… என்ன வெய்ட் பண்ணி கூட்டிட்டு போனா ஒண்ணும் கொரஞ்சி போயிட மாட்ட…
நில்லுடா…” சொல்லிவிட்டு கூலாக நடைபோட்டாள்.

“ஓ அப்படியா மேடம்… சரி நீங்க சொன்னா என் பாஸ் என்ன திட்டமாட்டாரா… இரு அவர் தான் கால் பண்ணிட்டு இருக்காரு. கொஞ்சம் பேசுரியா…??”

“ஏன் எனக்கென்ன பயமா? குடுடா பேசுறேன்…” போனை பிடுங்கியவளிடம்

“எம்மா தாயே… மகாலட்சுமி என் வேலை போறதிலே உனக்கு அவ்ளோ ஆர்வமா… போதும் தெய்வமே… வண்டியில் அமருங்கள். எங்க பாஸ் கூட சமாளிச்சிடுவேன்… ஆனா தங்களை சமாளிக்க என்னால் முடியாது…” சிரித்தான் அருண்.

“இரு டா என்னையே கிண்டல் பண்றியா… அம்மாட்ட சொல்றேன்…”
“அம்மா…”

நிலாவின் அம்மா லட்சுமிக்கு இவர்கள் இருவரையும் அமைதியாக்குவது என்பது கைவந்த கலை… இல்லையென்றால் இத்தனை நாள் இவர்களை மேய்த்து இருக்கமுடியுமா!?

இவர்கள் சிறுவயதிலேயே அவர் அப்பா ராமகிருஷ்ணன் இறைவனடி சேர்ந்துவிட்டார்…

அந்த கவலை சிறிதும் அறியாமல் வளர்த்த லட்சுமி தன் குழந்தைகளின் மேல் உயிரையே வைத்து இருந்தார்…
அவர்கள் விருப்பமே தன் விருப்பம் என்று வாழ்கிறார்.

மகளோ மகனோ அவரை புண்படுத்தும் எந்த ஒரு செயலையும் செய்யமாட்டார்கள். அதுவே அவர்கள் வளர்ப்பிற்கு அவர்கள் காட்டும் உதாரணம்…

“யார் பெரிய ஆளு னு அப்புறம் பாக்கலாம்… மொதல்ல வந்து சாப்பாடு வாங்கிட்டு போங்க ரெண்டு பேரும்… இல்லனா பிச்சிடுவேன்…” அன்பாக மொழிந்தார் லட்சுமி.

“தோ தோ தோ வந்துட்டேன் மா… எப்படி சாப்பாடு போய் மறந்தேன்…” வண்டியை ஸ்டாண்ட் கூட போடாமல் வீட்டிற்கு உள்ளே ஓடினான் அருண்.

“டேய் டேய் லூசுபயலே…” விழ இருந்த வண்டியை பிடித்துவிட்டு வண்டியை உசுப்பிய நிலா,
“நானே ஓட்டறேன் வண்டி இன்னிக்கு…”சொல்லிவிட்டு வாகனத்தை செலுத்த…

வண்டி காம்பௌண்ட் கேட் தாண்டும் முன் மூச்சிரைக்க ஓடி வந்து ஏறினான் அருண்.

பி.கு: அது பைக் எல்லாம் இல்லை… ஸ்கூட்டி தான்… அதனால ஹீரோயின் ஒட்டுவாங்க…

அம்மாவுக்கு டாட்டா காட்டிவிட்டு மெயின் ரோடு வரும் வரை ஓட்டினாள் நிலா.

“இதுக்கு மேல நானே ஒட்டுறேன் செல்லம்… அண்ணாகிட்ட வண்டி குடு…”

அருண் ஓட்ட பின்னால் அமர்ந்த நிலா… அண்ணனை ஓட்டும் வேலையை ஆரம்பித்தாள்.

“அப்புறம் சரண்யா என்ன சொல்றா டா?”, நிலா.

“ஏய் அது உன்னோட அண்ணி… அப்டிலாம் பேர் சொல்லி கூப்பிட கூடாது!”

“அப்படியா அப்போ போன வாரம் அனிதா னு ஒரு பொண்ண அண்ணி னு சொன்ன?!”

“அது அந்த வாரம்… இது இந்த வாரம்… ட்ரெண்ட் கு ஏத்தமாறி அப்டேட் ஆகு நிலா!!”

“இரு இரு சாருட சொல்றேன் அனிதா பத்தி…”

“அப்புறம் நிலா… நீ யாராவது லவ் பண்றியா?”

“ஹே என்ன பத்தி தெரியாதா அருண் உனக்கு??”

“தெரியும் டா… இருந்தாலும் உன் ட்ரீம்பாய இன்னும் மீட் பண்ணலயா னு கேட்டேன்…!”

“என்னவிட நீ ஆர்வமா இருக்கியே… நானே சொல்லுவேன் டா மீட் பண்ணா… நீ உன் லவ் லைஃப் ல concentrate பண்ணு! சரியா?”

“ம்ம்… ஆனா அந்த பையன்ட சொல்றதுக்கு முன்னாடி என்ட தான் சொல்ற சொல்லிட்டேன் இப்போவே… இல்லனா உன் லவ் கு நான் சப்போர்ட் பண்ண மாட்டேன்…”

ஆனா அந்த பையனிடமே அவள் சொல்லப்போவதில்லை என்று அவளுக்கு இப்போது தெரியவில்லை…

மீண்டும் வருவாள்…

Comments

0 comments

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy