செய்திகள்,கதைகள், விமர்சனங்கள்

Ep – 13 மீண்டும் நிலா

2,565

மீண்டும் நிலா
Episode – 13
Written by – Saipriya.A


மதிய உணவு வேளையில் அருணிடம் இருந்து என்ன மெஸேஜ் வந்து இருக்கிறது என்று ஆவலாக எடுத்து பார்த்தாள் சுமி…

“ஹலோ… பிஸியா இருக்கியா?” என்று அனுப்பி இருந்தான்.

புன்முறுவலுடன்,
“ஆமா காலேஜ்ல இருக்கேன்…” என்று அனுப்பிவிட்டு அவன் பதிலுக்கு காத்திருந்தாள்.

“நீ காஃபி டே போயிருக்கியா…?” என்றான்.

யோசித்துக்கொண்டே, “இல்லையே… ஏன் கேக்குற?” என்று கேட்க.

“ஹ்ம்ம்… நானும் போனது இல்ல… வாயேன்… போலாம்…” என்றான் அவன்.

ஆபிஸ் என்பதையும் மறந்து சத்தம் போட்டு சிரிக்க ஆரம்பித்தாள் சுமி…

“நீயே சொல்லுன்னு சொன்னேன்… நா சொன்னாலும் ரிப்ளை இல்ல… அப்பறம் நா உங்க வீட்டுக்கே வந்துருவேன்…” என்றான்.

“ஹ்ம்ம்… வாயேன்… எங்க அம்மா நீ யார்னு கேட்டா என்ன சொல்லுவ…?” என்று அவள் நக்கலாக அனுப்ப.

“ஹ்ம்ம்… உங்க பொண்ணு தான் என்ன வீட்டுக்கு வர சொன்னா ஆன்ட்டினு சொல்லுவேன்…” என்றான்.

“அடப்பாவி… சரி… கிளாஸ் ஆரம்பிக்க போகுது… பை…” என்று சாட்டை விட்டு வெளியே வந்தாள்…

மாலை…
அன்று நிலா சீக்கிரம் கிளம்பி சுமிக்காக காத்திருக்க…

நிலாவை அழைக்க வந்த சுமி, “என்ன நிலா… ஆச்சர்யமா இருக்கு…” என்று கேட்க.

“ஆமாம்… இன்னிக்கி சூப்பர் மார்க்கெட் போய் நூடுல்ஸ் வாங்கிட்டு வீட்டிக்கு போகணும்…” என்ற நிலா சுமியை இழுத்துக்கொண்டு வேகமாக அலுவலகத்தில் இருந்து கிளம்பினாள்.

“சரி… நா வெளிலே வெய்ட் பண்ணறேன்… நீ போய் வாங்கிட்டு வா… எனக்கும் அப்டியே சாக்லேட் வாங்கிட்டு வா…” சுமி கூற.

“ஹான்… எப்போ பாரு சாக்லேட் தின்னு…” என்று சுமியின் கன்னத்தில் ஒரு குத்து விட்டு சூப்பர் மார்கெட்டினுள் நுழைந்தாள் நிலா.

“எங்க இருக்க… ஏ நூடுல்ஸ் பாக்கெட்…” என்று தேடிக்கொண்டே சென்றவள்… அவளுக்கு பக்கவாட்டில் இருந்த fruits செக்ஷனில் ஆதியை பார்த்தாள்…

ஆதி யாரோ ஒரு பெண்ணுடன் சிரித்து பேசிக்கொண்டு இருக்க…
நிலா பார்த்துக்கொண்டிருக்கும் போதே அந்த பெண் சிரித்துக்கொண்டே ஆதியின் தோளில் செல்லமாக அடித்தாள்.

நிலாவுக்கு கோபம் சுர்ரென்று தலைக்கேறியது.
இவன் எல்லாரிடமும் இப்படி தான் பழகுவானா?
ஒரு அறிவு வேண்டாம்…
இவன் என்னை எல்லாரையும் போல நினைச்சி இருக்கானா…

கோபத்தில் யோசித்துக்கொண்டே எதுவும் வாங்காமலே சூப்பர் மார்க்கெட்டை விட்டு அவள் வந்திருந்தாள்…

சுமி கேட்டதும் தான் அதையே அவள் உணர, “எனக்கு புடிக்கல… வாங்கல… சீக்கிரமா வீட்டுக்கு போ சுமி…” என்று சொல்லிவிட்டு அமைதியாக ஏறி ஸ்கூட்டியில் உட்கார்ந்து கொண்டாள்.

“என்னாச்சு இவளுக்கு… சாக்லேட் கேட்டா கண்டிப்பா அடிப்பா…” என்று சுமியும் வாயை மூடிக்கொண்டு வீட்டை நோக்கி வண்டியை செலுத்தினாள்…

வீட்டிற்கு போயும் நிலாவுக்கு கோபம் குறையவில்லை…
ஏனோ அங்கு பார்த்ததை அவளால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை…

அதை பற்றி மேலும் யோசிக்க விரும்பாமல் TVயை ஆன் செய்து மனதை திசை திருப்ப முயன்று அதிலும் தோற்றாள்…

சுமி நிலாவை ட்ராப் செய்துவிட்டு அவள் வீட்டிற்கு சென்றாள்…

அம்மா கொடுத்த ஸ்நாக்சை கொறித்துவிட்டு நேராக மொபைலுடன் அறைக்குள் சென்றாள்.

“இன்னைக்கு ரொம்ப பிஸியா இருக்க போலருக்கு…?” என்று அனுப்பி இருந்தான் அவன்.

“அதெல்லாம் இல்ல… காலேஜ் விட லேட் ஆகிடுச்சு…” என்று அனுப்பினாள்.

உடனே அவனிடம் இருந்து ரிப்ளை வந்தது…
“ஹ்ம்ம்… சரி… நீ என்ன டிப்பார்ட்மெண்ட்…” என்று அவன் கேட்க…

“சொல்ல மாட்டேன் போங்க… நா அல்ரெடி சொல்லிட்டேன்… ஏன் மறந்தீங்க? சோ பனிஷ்மெண்ட்…” என்றாள்.

“ஒகேங்க…என்ன பனிஷ்மெண்ட்” என்று அவன் கேட்க…

“எனக்காக…”

“ஹ்ம்ம்… சொல்லுங்க…”

“ஒரு பாட்டு பாடணும்…” என்று அவள் அனுப்ப…

“ஹ்ம்ம்… நீயும் பாடணும் ஒகேவா? அப்போ தான் ஓகே இல்லனா நோ…” என்று அவன் சொல்ல…

“என் வாய்ஸ் நல்லா இருக்காது… படிக்கிற மாதிரி இருக்கும்…” என்றாள் வேண்டுமென்றே…

சுமி அவளது கல்லூரி நாட்களில் நிறைய பாடி இருக்கிறாள்… smuleலில் அவளுக்கு நிறைய followers… இருந்தும் அவன் என்ன சொல்கிறான் என்று பார்ப்பதற்காக அப்படி சொன்னாள்…

“எப்டி வேணும்னாலும் பாடு…” என்றான் அவன்.

அவன் தான் சொன்னதற்காக பாடப்போகிறான்…
நினைக்கும்போதே அவளுக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது…

“சரி சாப்பிட்டு வரேன்…” என்று அவனிடம் சொல்லிவிட்டு…

நேற்று போல் விரைவாக உணவருந்திவிட்டு அவனுக்கு கால் செய்தாள்…

அவன் “தள்ளிப்போகாதே எனையும் தள்ளிப்போக சொல்லாதே” என்று பாடிவிட்டு நித்யாவை (சுமியை) பாட சொன்னான்.

வாய்ஸ் கண்டுபிடிக்கக்கூடாது சாமி… என்று கும்பிட்டு விட்டு,

“ஒரு பெண்ணாக உன்மேல் நானே பேராசை கொண்டேன்…
உனை முன்னாலே பார்க்கும்போது பேசாமல் நின்றேன்…
எதற்காக உன்னை எதிர்பார்க்கிறேன்…
எனக்குள்ளே நானும் தினம் கேட்கிறேன்…
இனிமேல் நானே நீயானேன்…
இவன் பின்னாலே போனேனே…
இனி நீயும் நானும் ஒன்றாய் சேர்ந்தால்
காதல் இரண்டு எழுத்து…”

அவள் பாடி முடிக்க…
அருணுக்கு அவன் காதுகளையே நம்ப முடியவில்லை…
அந்த பாடலின் ஒவ்வொரு வரிகளும் தனக்காக அவள் பாடியது போலவே அவனுக்கு தோன்றியது…

அவன் வாயடைத்துப்போய் பேசாமல் உட்கார்ந்திருக்க…
இவள் பாடிவிட்டு எப்படி இருக்கு என்று கேட்டாள்…

“அடிப்பாவி… செம்ம வாய்ஸ் நித்யா உனக்கு… என்ன சொல்றது… I’m addicted to your voice…” என்று அவன் கூற.

இதுவரை எத்தனையோ பேர் அவளை பாராட்டி இருக்கிறார்கள்…
ஆனால் இவன் addicted to your voice என்று கூறியதும் அவளை அறியாமல் ஏனோ அவள் கன்னங்கள் சிவக்க…

“ஹ்ம்ம்… தாங்ஸ்…” என்றாள்…

“தியா…” என்று அவன் கூப்பிட…

“ஹான்… தியாவா… நா நித்யா…” என்று சுமி சொல்ல…

“இல்ல… ஷார்ட்டா கூப்பிட்டேன்” என்று அவன் சிரித்தான்.

“ஹ்ம்ம்… நித்யாவே அல்ரெடி சின்ன பேரு தான்… இன்னும் ஷார்ட்டாவா… நடத்துங்க…” என்று சொன்னவள்.

“சரி… ஏன் பல்லுலாம் நடுங்கற மாதிரி பேசுறீங்க…” என்று அவள் கேட்க.

“இல்ல டவர் சரியா கிடைக்கல… அதான் மாடில இருந்து பேசுறேன்…”

“இந்த மார்கழி பனில இந்த நேரத்துக்கு மாடிக்கு போவியா… சரி நா வைக்கிறேன்… நீ தூங்கு…” என்று போனை அவள் வைக்க போக…

“இல்லை… கொஞ்ச நேரம் பேசு நித்யா… எனக்கு குளிரவே இல்ல…” என்றான்.

சுமிக்கு அவனை என்னவென்று நினைப்பதென்று தெரியவில்லை…
இவன என்னவெல்லாம் நெனைச்சோம்… இப்படி இருக்கானே… ஹையோ…

“வானத்தை பாரேன்… 3 நட்சத்திரம் ஒரே lineல இருக்கு…” என்றான்.

வெளியே சென்று பார்த்தவள் “ஹ்ம்ம்… ஆமா… நா இந்த நட்சத்திரத்தை இப்போ தான் பாக்குறேன்…” என்று அவள் ஆச்சர்யப்பட…

“ஹே… இது டெய்லி இருக்கும்… என்று மீதி நட்சத்திரங்களை பற்றியும் கூற…

கேட்டுக்கொண்டே இருந்தவள் திடீரென நேரத்தை பார்க்க… 11.45 என்று காட்டியது…

“ஐயோ… டைம் ரொம்ப ஆயிடுச்சு… தூங்கலாம்…” என்றாள்.

“ஸ்வீட் ட்ரீம்ஸ்…” சொல்லிவிட்டு அவன் இரும…

“இதுக்கு தான் சொன்னேன்… மாடு…” என்று திட்ட ஆரம்பித்தாள்…

“இது சும்மா…” என்று சமாளித்துவிட்டு அவன் போனை வைக்க…

சுமி செல்லமாக தலையணையை குத்திவிட்டு தூங்கிப்போனாள்…

அங்கே நிலாவுக்கு சுத்தமாக தூக்கம் வரவில்லை…
“அன்னிக்கி எவ்ளோ சொன்னேன்… நா அருண் கூட போய்க்கறேன்னு… ரொம்ப அக்கறை உள்ளவன் மாதிரி நடிச்சான்… இன்னிக்கி அந்த பொண்ணு அவன உரிமையா அடிக்குது… சிரிச்சிட்டு நிக்கறான்…
இவன் முகத்துலயே இனிமே முழிக்க கூடாது…”
யோசித்தவள், நன்றாக போர்வையை இழுத்து போர்த்திக்கொண்டு உறங்க முயற்சித்தாள்.

அப்போதும் நித்ராதேவி அவளை நிந்திக்க… தன் படுக்கையிலிருந்து எழுந்து போய் அவள் அம்மா லக்ஷ்மியை அணைத்துக்கொண்டு உறங்கலானாள்.

மீண்டும் வருவாள்…

Comments

0 comments

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy