செய்திகள்,கதைகள், விமர்சனங்கள்

Ep – 14 மீண்டும் நிலா

2,940

மீண்டும் நிலா
Episode – 14
Written by – Saipriya.A


காலையில் எழுந்ததும் அருண் மொபைலை எடுத்து பார்த்தான்…
வழக்கமாக எழுந்திருக்கும் போது நித்யாவிடம் இருந்து மெஸேஜ் வந்து இருக்கும்…

நைட் ரொம்ப நேரம் முழிச்சு இருந்தால்ல… அதான் தூங்குறா போல…
நினைத்தவன், “குட் மார்னிங்… இன்னுமா தூங்குற?” என்று மெஸேஜ் அனுப்பிவிட்டு அலுவலகம் கிளம்பச்சென்றான்…

மெஸேஜ் டோன் கேட்டு கண்விழித்த சுமி, “யார் இந்த நேரத்தில தூங்க விடாம…” என்று பார்த்தாள்…

என்னடா இது 8வது உலக அதிசயமா இருக்கு… இந்த தூங்குமூஞ்சி நமக்கு முன்னால எழுந்து குட் மார்னிங் லாம் அனுப்பி இருக்கு…

அவள் அம்மா, “காலையிலே பிரஷ் கூட பண்ணாம மொபைல் எடுத்திடியா… சுமி அடி வாங்கப்போற…” என்று backgroundல் கத்திக்கொண்டு இருக்க அதுவும் அவளுக்கு BGMஆகவே கேட்டது…

“இப்போ தான் எழுந்தேன்… நீங்க எப்டி இவ்ளோ சீக்கிரம் சூரியனை பாக்குறீங்க…?” என்று அனுப்பினாள்.

“சும்மா தான் தூக்கம் கலைஞ்சிடுச்சு… ஒரு பாட்டு பாடேன் தியா…” என்றான்.

“போ… எனக்கு செம்மையா தூக்கம் வருது…” என்று அனுப்பி விட்டு புரண்டு படுத்தாள்.

“தூங்கு… ஆனா அம்மா திட்டறதுக்குள்ள எழுந்திரு…” என்றான்.

சிரித்துக்கொண்டே கிளம்பி நிலா வீட்டுக்கு போனாள்.

நிலா…
முகத்தை உர்ரென்று வைத்து இருக்க…

“என்னடி… நேத்து ஏதோ அப்செட்டா இருக்க… சரி ஆகிடுவனு பாத்தா… இன்னும் எதுக்கு முகத்தை தூக்கி வச்சிருக்க…” கேட்டாள் சுமி.

“ஒண்ணும் இல்ல சுமி… என்ன எதுவும் கேட்காத… போலாம்…” என்று அவள் ஸ்கூட்டியில் அமர…

“சரி நிலா… நா எதுவும் கேக்கல…” என்று அமைதியாக வண்டியை ஒட்டினாள்.

என்ன ஆச்சி இவளுக்கு… ஏதாச்சும் பேசிக்கிட்டே ஜாலியா வர்றவ… திடீர்ன்னு இப்படி சிடுமூஞ்சி மாதிரி ஆகிட்டா… என்னனு தெரிலயே…
யோசித்துக்கொண்டே வந்தாள் சுமி.

அலுவலகம் வந்ததும் அப்டியே இறங்கி ஒன்றுமே சொல்லாமல் நிலா போக…
சுமிக்கு ஒன்றுமே புரியவில்லை…
நேத்து ஆபிஸ்ல இருந்து கிளம்பற வரைக்கும் நல்லா தான இருந்தா…

நிலா வேலையில் மூழ்கி தன் கோபத்தை மறக்க எண்ணினாள்… ஓயாமல் அவள் மூளையில் இதே தான் ஓடிக்கொண்டு இருந்தது…

இவன் யாரோட பேசுனா சிரிச்சா எனக்கென்ன… சே… இனிமே இவன பத்தி நினைக்கவே கூடாது…

நினைக்க கூடாது என்று நாம் நினைப்பவர்களை தானே நினைத்துக்கொண்டே இருக்க வைக்கிறது இந்த மனம்…

ஆதியை எங்கேயும் பார்க்கவே கூடாது என்று அவள் கேபினை விட்டே வெளியே வரவில்லை நிலா…

ஆதியும் அவள் வரும்போது பார்க்கலாம் என்று வெகுநேரம் காத்திருந்தான்…
பேசாமல் அவள் கேபினுக்கே போய் பார்க்கலாமா…

உடனே, நிலாவுக்கு அதெல்லாம் பிடிக்காது… எப்படி இருந்தாலும் மாலை ஆபிஸ் முடிந்து கிளம்பும்போது பார்க்கலாம் என்று மனதை தேற்றிக்கொண்டு வேலையில் ஆழ்ந்தான்.

ஆபிஸ் முடிந்து ஆதி பார்க்கிங்கில் நிலாவுக்காக நிற்க…

ஆபிஸ் முடிந்து பார்க்கிங் வந்த நிலா அங்கே ஆதியை பார்த்தாள்…
அவன் நிலாவை பார்த்துவிட்டு சிரிக்க…
முறைத்துக்கொண்ட நேரே சென்று சுமியின் வண்டியில் அமர்ந்து சென்றுவிட்டாள்…

என்ன நடந்ததென்றே ஆதிக்கு கொஞ்ச நேரம் புரியவில்லை…
“என்ன ஆச்சு இப்போ இவளுக்கு…
எதுக்கு முறைச்சிட்டு போறா…”

சுமி மெதுவாக நிலாவுடன் பேச முயல, “சுமி… பேசாம வண்டி ஓட்டு…” என்று அவள் கூற சுமி மறுக்காமல் நிலா சொன்னதை செய்ய ஆரம்பித்தாள்…

நிலாவை வீட்டில் ட்ராப் செய்து விட்டு அவள் வீட்டிற்கு சென்ற சுமி முகம் கழுவிவிட்டு மொபைலை எடுத்து பார்க்க…

எதிர்பார்த்த மாதிரியே அருணிடம் இருந்து மெஸேஜ் வந்திருந்தது…
“நித்யா மேடம்… எங்க இருக்கீங்க…??” என்று அனுப்பியிருந்தான்.

“ஹ்ம்ம்… உங்க மெஸேஜ்க்கு தான் வெயிட் பண்ணிட்டு இருந்தேன்…” என்றாள்.

“என்ன இன்னிக்கி ரொம்ப சீக்கிரம் வந்துட்ட…?” அவன் கேட்க.

“இன்னிக்கி ட்ராஃபிக்ல மாட்டல… சரி என்ன பண்றீங்க” என்றாள்…

“வெட்டி தான்… நீ…?” என்றான்.

“நா பிசி…” என்றவள் சிரிக்க…

“அவ்ளோ பிஸியா என்ன பண்றீங்க…?”

“என் பிரண்ட் ஒருத்தன் கூட பேசிட்டு இருக்கேன்…”

“அப்படியா நேம்…?” அவன் கேட்க.

“மாடு…” என்றாள் அவள்.

“எருமை மாடா…? பசு மாடா…?”

“எருமை மாடு தான்” என்றாள்.

“இனம் இனத்தோட தான் பேசும்…” அவன் அனுப்ப…

“ஹ்ம்ம்… அப்போ நீங்களும் தான்…” என்றாள்.

“சரி நீ இன்னிக்கி ஒரு பாட்டு பாடணும் லிரிக்ஸ் எடுத்து வச்சிக்கோ…” என்றான்.

“என்ன பாட்டு…?” அவள் கேட்க.

“தென்றல் வந்து தீண்டும் போது…”

“நீயும் பாடு… அப்போ தான் நா பாடுவேன்…” அவள் சொல்ல.

“உன்னோட வாய்ஸ்கு செமையா இருக்கும்…” என்றான்.
அவன் சொல்லி அவள் மறுக்கவா போகிறாள்.

“சரி… நீங்க ஏன் எப்போவும் கண்ண குட்டி ஆக்கி பாக்குறீங்க எல்லா போட்டோலயும்…?” அவள் கேட்க.

அவள் தான் சும்மா இருக்கும் போதெல்லாம் அவன் போட்டோவை வைத்து பார்த்துக்கொண்டிருக்க ஆரம்பித்துவிட்டாளே…

“ஓ… தெரிலயே… நா குட்டி பையன்ல சோ எனக்கு குட்டி eyes” அவன் கூற…

ஹையோ… ஹையோ… விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பித்தாள்.

“என்ன சிரிச்சிட்டு இருக்கியா…?” அவன் கேட்க.

“இல்லையே… உண்மை தான் போல…” என்று நல்ல பெண்ணாக அனுப்பினாள்…

“எப்போ கால் பண்ணுவ…” என்றான்.

சுமிக்கும் அவனிடம் பேச வேண்டும் போல இருக்க…
சட்டென மெசெஞ்சரில் கால் செய்ய…
அதற்கு தான் காத்திருக்கிறேன் என்று உடனே எடுத்தான்…

“என்ன உடனே பண்ணிட்ட… ஹ்ம்ம்… சரி பாடு… என்றான்.

எவரும் சொல்லாமலே…
பூக்களும் வாசம் வீசுது…
உறவும் இல்லாமலே…
இருமனம் ஏதோ பேசுது…
எவரும் சொல்லாமலே…
குயிலெல்லாம் தேனாப் பாடுது…
எதுவும் இல்லாமலே…
மனசெல்லாம் இனிப்பாய் இனிக்குது…
ஓடை நீரோட…
இந்த ஒலகம் அது போல…
ஓடும் அது ஓடும்…
இந்த காலம் அது போல…
நிலையா நில்லாது…
நினைவில் வரும் நிறங்களே…

ஒரு வரி இவளும் ஒரு வரி அவனும் பாட…
பாடல் முடிந்ததும், “செம சான்ஸ்லெஸ்… தியா…” அவன் கூற.

“செம சான்ஸ்லெஸ்… தியா…” என்றாள் சுமி.

“ஹே… என்ன கலாய்க்குரியா…?” அவன் கேட்க.

இவளும் பதிலுக்கு, “ஹே… என்ன கலாய்க்குரியா…?” என்றாள்.

“நா என்ன சொன்னாலும் திருப்பி சொல்லுற…?” அவன் கூற.

“நா என்ன சொன்னாலும் திருப்பி சொல்லுற…?” சொல்லிவிட்டு அவள் சிரிக்க.

“வேணாம்…” என்றான்.

அவளும் நிறுத்தாமல் தொடர… “ஐ லவ் யூ” என்றான்.

சற்றும் எதிர்பார்க்காத நேரத்தில் அவன் கூற…

சற்றும் தாமதிக்காமல்,
“ஐ ஹேட் யூ” என்றாள்.

நா தான் ஜெயிச்சேன்… அவன் கூற…

“சரி… குட் நைட்…” சொல்லிவிட்டு சுமி உறங்க செல்ல…

“தூங்கு… தூங்கு… உனக்கு கனவுல பூச்சிலாம் வரும் போ…” அவன் சொல்ல…

“ஹ்ம்ம்… உனக்கு மோகினி பேய் லாம் வரும்… போடா” அவள் சொல்ல…

அருண், “கேடி…” சிரித்திக்கொண்டே உறங்கினான்.

சுமி, “அவன் முதல்ல சொன்ன ஐ லவ் யூ எனக்கு தான்”
அந்த எண்ணம் அவளை ஒருவித சந்தோஷத்தில் ஆழ்த்த… அவளும் உறங்கினாள்.

மீண்டும் வருவாள்…

Comments

0 comments

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy